செய்திகள் :

பீகார் தேர்தல்: வழக்கறிஞர்கள், டாக்டர்கள், அரசு அதிகாரிகள்; வேட்பாளர்களை அறிவித்த பிரசாந்த் கிஷோர்

post image

பீகார் சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் முதல் முறையாக போட்டியிட இருக்கிறார். இதற்காக அவர் ஜன் சூரஜ் என்ற கட்சியை தொடங்கி தேர்தலுக்கான வேலையில் ஈடுபட்டு வந்தார். ஆளும் கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியும் தொகுதி பங்கீடு தொடர்பாக பேசிக்கொண்டிருக்கும்போது பிரசாந்த் கிஷோர் திடீரென தனது கட்சி வேட்பாளர் பட்டியலை அறிவித்து இருக்கிறார். முதல் கட்டமாக 51 பேர் கொண்ட பட்டியலை அறிவித்திருக்கும் பிரசாந்த் கிஷோர் தனது பெயரை பட்டியலில் அறிவிக்கவில்லை. 51 பேர் பட்டியலில் டாக்டர்கள், வழக்கறிஞர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் என படித்தவர்களை களத்தில் இறக்கி இருக்கிறார்.

பாட்னா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றிய கே.சி.சின்ஹா, பாட்னா உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒய்.பி.கிரி, முஜாபர்பூரில் டாக்டராக பணியாற்றும் டாக்டர் அமித் குமார் போன்றோரும் பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றனர். இப்பட்டியலில் பிரசாந்த் கிஷோர் பெயர் இடம் பெறாவிட்டாலும் அவர் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் தொகுதியான ரகோஜ்பூர் அல்லது பிரசாந்த் கிஷோரின் சொந்த ஊரான கார்ஹாகர் ஆகிய இரண்டில் ஒன்றில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கார்ஹாகர் தொகுதியில் ரிதேஷ் ரஞ்சன் போட்டியிடுவார் என்று பிரசாந்த் கிஷோர் அறிவித்து இருக்கிறார். இதனால் ரகோஜ்பூர் தொகுதியில் பிரசாந்த் கிஷோர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை

ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பாக முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் தேஜஸ்வி யாதவ் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசுகையில்,''நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். 20 மாதத்தில் அரசு ஊழியர் இல்லாத வீடே இருக்காது.

தேஜஸ்வி யாதவ்

ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து அதுவாகத்தான் இருக்கும். எங்களால் இதை செய்ய முடியும் என்பதால்தான் இதை சொல்கிறோம். இது முதல் அறிவிப்புதான். மேலும் திட்டங்கள் தொடர்ந்து அறிவிக்கப்படும். 20 ஆண்டுகளாக தேசிய ஜனநாயக கூட்டணி இளைஞர்களுக்கு வேலை கொடுக்கவில்லை. ஆனால் நாங்கள் 20 மாதத்தில் வேலை கொடுப்போம்''என்று தெரிவித்தார்

Modi: "நண்பர் ட்ரம்ப்பிடம் பேசினேன்" - மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தையா?

பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் பேசியதாகவும், 2 ஆண்டுகளுக்கு மேல் நடக்கும் இஸ்ரேல் - காசா போரை நிறுத்தும் வரலாற்று அமைதித்திட்டத்தின் வெற்றிக்காக அவரை வாழ்த்தியதாகவும் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

பி.ஆர் கவாய்: "அதிர்ச்சிக்கு உள்ளானோம்" - காலணி வீசிய சம்பவம் குறித்து நீதிபதி சொல்வதென்ன?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது கடந்த அக்டோபர் 6 (திங்கட்கிழமை) வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசி தாக்க முயன்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை எழுப்பியது. அது தனக்கு மிகவும் அதிர்ச்ச... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நகரங்களின் பெயர்களை உணவுகளுக்கு வைத்து சாப்பிட்ட இந்திய விமானப்படை - மெனு வைரல்!

இந்திய விமானப்படையின் 93வது ஆண்டு விழாவில் வழங்கப்பட்ட இரவு விருந்தின் மெனு வைரலாகி வருகிறது. வழக்கமான விருந்து உணவுகள் என்றால் அதற்கு வித்தியாசமாக பெயரிட்டு கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்த விருந்து எந்த ... மேலும் பார்க்க

தாலிபன்: இந்தியாவில் ஆப்கன் அமைச்சர்; கொடியில் குழப்பம் - வருகையின் பின்னணி என்ன?

ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டின் தாலிபன் அமைச்சர் அமிர் கான் முத்தாகி டெல்லி வந்தடைந்துள்ளது பிராந்திய அரசியலில் முக்கியமான தருணமாக பார்ப்படுகிறது. ஐநாவின் பாதுகாப்பு கவ... மேலும் பார்க்க

`ஸ்டார்ட்அப் வளர்ச்சிக்காக ரூ.100 கோடியில் திட்டம்’ - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் ஸ்டார்ட் அப் நிறுவனம் சார்பில் சர்வதேச மாநாடு கோவை கொடிசியா வர்த்தக வளாத்தில் நடைபெற்றது. இன்றும், நாளையும் நடைபெறவுள்ள இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில... மேலும் பார்க்க

கோவை சிட்டி டு விமான நிலையம் இனி 10 நிமிடங்கள் தான்! - திறக்கப்பட்டது அவிநாசி சாலை மேம்பாலம்

கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கியது. பணிகள் முடிந்த நிலையில் அந்த பாலத்தை முதலமைச்ச... மேலும் பார்க்க