செய்திகள் :

Rukmini Vasanth: "நேஷனல் க்ரஷ் என்பதை விட 'பிரியா' என அழைப்பதே பிடிக்கும்" - ஓப்பன் டாக்!

post image

காந்தாரா படத்தின் மூலம் நாடுமுழுவதும் பேசுப்பொருளாக இருக்கும் நடிகை ருக்மினி வசந்த், ரசிகர்கள் தன்னை நேஷனல் க்ரஷ் என அழைப்பது குறித்து வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

28 வயதாகும் ருக்மினி, கடந்த 2023ம் ஆண்டு வெளியான சப்தா சாகரடாச்ச யல்லோ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

Rukmini Vasanth in Kantara Chapter 1

தற்போது காந்தாரா சாப்டர் 1 படம் நாடு முழுவதும் வெற்றியடைந்து அவரைப் புதிய உயரத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. தொடர்ந்து யஷ் நடிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் டாக்ஸிக் படத்திலும் தோன்றவிருக்கிறார்.

Rukmini Vasanth சொன்னதென்ன?

கரியரில் புதிய உயரத்தை எட்டியிருக்கும் ருக்மினி சமீபத்திய நேர்காணலில், "க்ரஷ் என அழைக்கப்படுவது முகத்தின் முன் புகழ்வதாக இருக்கும். நான் அதுபற்றி அதிகம் சிந்திப்பது இல்லை. இது தற்காலிகமான புகழ்ச்சி, கொஞ்ச காலத்தில் மாறக்கூடியது.

Rukmini Vasanth in saptha sagaradache ello

ஆனால் நான் ஒரு விஷயத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்றும் சிலர் என்னை பிரியா என அழைக்கின்றனர், சப்தா சாகரடாச்ச யல்லோவில் எனது பெயர் அது.

அந்த ரசிகர்கள் என் கதாபாத்திரத்தை விரும்புகின்றனர். ஆரம்பத்தில் என் கதாபாத்திரத்தை பார்வையாளர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதில் எனக்கு பயம் இருந்தது. அவ்வளவு எளிதான யதார்த்தமான பாத்திரத்தை மக்கள் ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது." எனப் பேசியுள்ளார்.

முன்னதாக ராஷ்மிகா மந்தனா, ட்ரிப்டி டிம்ரி, ரோஹித் சரஃப், முர்னால் தாக்கூர் மற்றும் சில நட்சத்திரங்கள் நேஷனல் க்ரஷ் என அழைக்கப்பட்டனர். சிலர் அதனை அன்பாக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் ருக்மினியின் முதிர்ச்சியான பதில் ரசிகர்களுக்கு, குறிப்பாக சப்தா சாகரடாச்ச யல்லோ படத்தின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

"ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன அடுத்து எனக்குப் பிடித்த ஆல்பம்" - ஜி.வி கொடுத்த செல்வா பட அப்டேட்

தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ஆகிய படங்களின் மூலம் இயக்குநராகத் தனி இடம் பிடித்திருப்பவர் செல்வராகவன்.இருப்பினும், கடைசியாக அவர் இய... மேலும் பார்க்க

``என் பெயரைச் சொல்லாதீங்க, நாராயணா, நாராயணா-ன்னு சொல்லுங்க'' - ஆன்மிகப் பயணத்தில் ரஜினி அட்வைஸ்

ரஜினி 'ஜெயிலர் 2' படப்பிடிப்புக்காக கேரளாவில் உள்ள பாலக்காடு சென்றார், அங்கேயும் பரபரப்பு. சமீபத்தில் ஆன்மிகப் பயணமாக உத்தரகாண்ட் புறப்பட்டுப் போனார், அங்கேயும் பரபரப்பு. கடந்த 6 மாதங்களுக்கு முன்னரே ... மேலும் பார்க்க

``உயிரும் நீயே உண்மையும் நீயே'' - ரஜினியின் உத்தரகாண்ட் ஆன்மிகப் பயணம் | Photo Album

ரஜினியின் உத்தரகாண்ட் ஆன்மிகப் பயணம்ரஜினியின் உத்தரகாண்ட் ஆன்மிகப் பயணம்ரஜினியின் உத்தரகாண்ட் ஆன்மிகப் பயணம்ரஜினியின் உத்தரகாண்ட் ஆன்மிகப் பயணம்ரஜினியின் உத்தரகாண்ட் ஆன்மிகப் பயணம்ரஜினியின் உத்தரகாண்ட... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "விஜய் கொஞ்சம் யோசித்து முடிவு எடுக்க வேண்டும்" - நடிகர் சிவ ராஜ்குமார்

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் முருகன் கோவிலில் கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் தனது மனைவியுடன் நேற்று (அக்.8) சாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சிவ ராஜ்குமார்... மேலும் பார்க்க

``சினிமாதான் என் வாழ்க்கையா மாறும்'னு நினைக்கல'' - தன் பயணம் தொடங்கியது குறித்து நயன்தாரா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நயன்தாரா தனது இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றார். தொடர்ந்து வி... மேலும் பார்க்க