செய்திகள் :

மதுரை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பட்டியலின இளைஞர்; கால்வாயிலிருந்து சடலமாக மீட்பு!

post image

மடப்புரம் அஜித்குமாரைப் போல மதுரையைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற இளைஞர் காவல்துறை சித்ரவதையால் கொலை செயப்பட்டுள்ளார் என்று உறவினர்களும் பல்வேறு அமைப்பினரும் மதுரையில் போராட்டம் நடத்தி வருவது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போராட்டம்

மதுரை யாகப்பா நகர் பகுதியை சேர்ந்த வேல்முருகன்-முத்துலெட்சுமி தம்பதியரின் மகன் தினேஷ்குமார் (வயது 30 ) ஐடிஐ முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

ஒரு வழக்கில் விசாரிக்க வேண்டுமென்று இன்று அதிகாலை 5 மணியளவில் தினேஷ்குமாரின் வீட்டிற்கு வந்த மதுரை அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் பிளவர் ஷீலா தலைமையிலான தனிப்படை காவலர்கள் காமு, நாகராஜ் ஆகியோர் தினேஷ்குமாரை அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் தினேஷ்குமாருடன் அஜித்கண்ணா, பிரகாஷ் ஆகியோரையும் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இதையடுத்து காலை 9 மணிக்கு தினேஷ்குமாரின் தந்தை வேல்முருகன் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு தினேஷ்குமார் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தவர், தன் வழக்கறிஞருடன் தினேஷ்குமாரை காவல்துறையினர் எங்கு அழைத்துச் சென்றார்கள் என்பது குறித்து விசாரித்துள்ளார்.

தினேஷ்குமார்

பின்னர் வண்டியூர் பகுதியிலுள்ள கால்வாயில் சடலம் கிடப்பதாக தகவல் வந்து தீயணைப்புத் துறையினர் வந்து மீட்டதில் அது தினேஷ்குமாரின் உடல் என்று தெரியவந்துள்ளது.

மதியம் தினேஷ்குமாரின் தந்தையை வருமாறு அண்ணா நகர் காவல் நிலையத்திற்கு காவல்துறையினர் அழைத்துள்ளனர். அப்போது, 'தினேஷ்குமார் உள்ளிட்ட மூன்று பேரை மதுரை வண்டியூர் அருகேயுள்ள புறக்காவல் நிலையத்தில் வைத்து அண்ணா நகர் காவல் துறையினர் விசாரணை நடத்திவிட்டு அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வருவதற்காக வாகனத்தில் ஏற்றியபோது தினேஷ்குமார் காவல் துறையினரிடமிருந்து தப்பியோட முயன்று வாய்க்காலில் குதித்து நீரில் மூழ்கி இறந்ததாகவும், பின்னர் அவரது சடலத்தை தீயணைப்புத் துறையினர் மூலமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும்' காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தினேஷ்குமாரின் பெற்றோர் அண்ணாநகர் காவல்துறையினர் தங்களது மகனை விசாரணை என்ற பெயரில் அடித்துக் கொன்றுவிட்டதாக கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

பின்னர் இந்த தகவல் வெளியே பரவி தினேஷ்குமாரின் உறவினர்கள், வழக்கறிஞர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி 'தினேஷ்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளது, நீதி விசாரணை நடத்த வேண்டும், தினேஷ்குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்' எனக் கூறி அண்ணாநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம்

'மதியம் 1 மணிக்கு மீட்கப்பட்டதாக சொல்லப்பட்ட தினேஷ்குமாரின் சடலம் மாலை 5 மணி வரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு செல்லப்படாதது ஏன்?' என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

கரூர் மரணங்கள்: தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் கைது சிறப்பு புலனாய்வுக் குழு அதிரடி

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரிக்க சென்னை உய... மேலும் பார்க்க

கும்பகோணம்: கோயிலுக்கு வந்த 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- 75 வயது அர்ச்சகர் போக்சோவில் கைது!

கும்பகோணம் அருகே உள்ள திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக... மேலும் பார்க்க

மின் இணைப்புக்கு ரூ.3,000 லஞ்சம்-மின்வாரிய ஆய்வாளரைக் கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை; விவரம் என்ன?

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் மின்வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜெயகுமார் (56). இவரிடம் தாராபுரத்தை அடுத்த இச்சிப்பட்டி கிராமத்தைச் சேர... மேலும் பார்க்க

தூத்துக்குடி: `அடிக்கடி குரைக்கின்றன'- குடிபோதையில் நாயை கல்லால் தாக்கிக் கொன்ற வாலிபர்!

துாத்துக்குடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். ஆட்டோ டிரைவரான இவர் தனது வீட்டில் இரண்டு நாட்டு நாய்களை வளர்த்து வருகிறார். இரவு நேரங்களில் இரண்டு நாய்களையும் வீட்டின் முன் சங்கிலியால் கட்டி போட்டி... மேலும் பார்க்க

ஒரே நாளில் 47 மீனவர்கள் சிறை பிடிப்பு; இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை- மீனவர்கள் அதிர்ச்சி!

ராமநாதபுரம் மாவட்டம் துவங்கி நாகப்பட்டினம் வரை உள்ள 6 மாவட்டங்களில் உள்ள லட்சக்கணக்கான மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரமாக மீன்பிடி தொழிலையே நம்பி உள்ளனர். அதிலும் குறிப்பாக வங்க கடலில் உள்ள பாக் நீரிணை ப... மேலும் பார்க்க

வாணியம்பாடி: பெண் குழந்தையைக் கடத்த முயற்சி? வடமாநில நபரைக் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகிலுள்ள சின்னமோட்டூர் கிராமத்தில், வடமாநில நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாகச் சுற்றித்திரிந்திருக்கிறார். திடீரென அந்த நபர், அங்கு விளையாடிக்கொண்டிருந்த தம்பிதுரை ... மேலும் பார்க்க