செய்திகள் :

உலகின் 8வது உயரமான சிகரத்தில் கால் வைத்த இந்தியர்; கின்னஸ் உலக சாதனை படைப்பாரா?

post image

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுபம் சாட்டர்ஜி என்ற இளம் மலையேற்ற வீரர், உலகின் 8வது உயரமான சிகரமான மனாஸ்லுவை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையின் மூலம், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் தனது லட்சியத்தை நோக்கி அவர் முன்னேறியுள்ளார்.

செப்டம்பர் 28 அன்று காலை 6.18 மணிக்கு, கடல் மட்டத்திலிருந்து 8,163 மீட்டர் உயரத்தில் உள்ள மனாஸ்லு சிகரத்தை அடைந்திருக்கிறார். இந்த சிகரம், நேபாளத்தின் மன்சிரி ஹிமால் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த சிகரம் மலையேறுபவர்களுக்கு மிகவும் அபாயகரமான ஒன்றாகக் கருதப்படுகிறது. 18 சதவீத இறப்பு விகிதத்தைக் கொண்ட இந்த சிகரம், உலகின் மிகக் கொடிய சிகரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

Shuvam Chatterjee on Mount Manaslu

சாட்டர்ஜியின் இந்த பயணம் மிகவும் சவாலானதாக இருந்திருக்கிறது. மலையேற்றத்தின்போது ஏற்பட்ட பனிச்சரிவிலிருந்து அவர் நூலிழையில் தப்பியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில் "அது ஒரு பயங்கரமான தருணம், ஆனால் சரியான குழுப்பணியுடன் நாங்கள் அதைக் கடந்தோம்," என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஓசியானியா மற்றும் அண்டார்டிகா ஆகிய கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களையும் அவர் ஏறியுள்ளார். ஓசியானியாவின் இரண்டு உயரமான சிகரங்களை வெறும் 49 மணி நேரத்தில் ஏறி சாதனை படைத்திருக்கிறார்.

சுபம் சாட்டர்ஜி, தனது சாதனைகளின் மூலம் ஏற்கனவே லண்டனில் உள்ள உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரளா: "வேலையை விடும் திட்டமில்லை" - லாட்டரியில் ரூ. 25 கோடி வென்ற பிறகும் வேலைக்குச் செல்லும் நபர்

கேரளாவில் பெயிண்ட் கடை ஊழியர் ஒருவருக்கு ஓணம் பம்பர் லாட்டரியில் 25 கோடி ரூபாய் முதல் பரிசாகக் கிடைத்துள்ளது. லாட்டரி விழுந்த பிறகும், அவர் தனது வேலையை விட மனமில்லாமல் மறுநாளே பணிக்குத் திரும்பியது அன... மேலும் பார்க்க

மலை குன்றை உடைத்து, ஆற்றை திசை திருப்பி.! - ரூ.19,000 கோடியில் கட்டப்பட்ட நவிமும்பை விமான நிலையம்

நாட்டின் பொருளாதார தலைநகரமாக விளங்கும் மும்பையில் ஏற்கனவே இருக்கும் ஒரு விமான நிலையம் பயணிகள் நெருக்கடியால் விழிபிதுங்கியபடி இருக்கிறது. இதையடுத்து விமான போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மும்பைக... மேலும் பார்க்க

`முதுகுவலியை குணப்படுத்த' - 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி; அடுத்து நடந்தது என்ன?

சீனாவில், 82 வயதான மூதாட்டி ஒருவர், தனது நாள்பட்ட முதுகுவலியை குணப்படுத்த, நாட்டு வைத்தியம் என்ற பெயரில் 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, கடுமைய... மேலும் பார்க்க

Divorce: ரூ.18 லட்சம் கொடுத்து விவாகரத்து வாங்கிய வாலிபர்; பால் குளியலோடு கேக் வெட்டி கொண்டாட்டம்

வாலிபர் ஒருவர் தனக்கு விவாகரத்து கிடைத்ததை கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடிய கதையைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில் விவாகரத்து கிடைத்தவுடன் அவரது தாயார் அவருக்கு பாலாபிஷேக... மேலும் பார்க்க

`ரூ.60 கோடி மோசடி வழக்கு' - பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியிடம் போலீஸார் 4 மணி நேரம் விசாரணை

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் சேர்ந்து ரூ.60 கோடியை மோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மும்பையை சேர்ந்த தொழிலதிபர் தீபக் கோதாரி என்பவர் 2015ஆம் ஆண்டில் ... மேலும் பார்க்க