தூத்துக்குடி: `அடிக்கடி குரைக்கின்றன'- குடிபோதையில் நாயை கல்லால் தாக்கிக் கொன்ற ...
Bigg Boss Tamil 9: "நீங்க பண்ணது தப்புதான்" - கம்ருதீனை ரவுண்டு கட்டும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்
பிக் பாஸ் சீசன் 9 கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது.
கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூடியூபர்கள் என மொத்தம் 20 பேர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய நாளுக்கான (அக்.9) இரண்டாவது புரொமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் கொடுத்த ‘தண்ணீர் கண்காணிப்பு’ டாஸ்கில் ஏதோ தவறு நடக்க, அதற்கு காரணம் கம்ருதீன்தான் என்று எல்லோரும் அவரைக் குற்றம்சாட்டுகின்றனர்.
'கம்ருதீன் நீங்க தூங்கி இருக்கக்கூடாது', 'நமக்கு ஒரு பதவி வருதுனா அதை உணர்ந்து பொறுப்பா நடந்துக்கணும்', 'இது ஒரு மெயின் டாஸ்க் அதுல நீங்க கோட்டை விட்டுருக்கக்கூடாது', 'நீங்க அதுல கான்சென்ட்ரேட்டா நடந்திருக்கணும்', 'நீங்க பண்ணது தப்புதான்' என ஹவுஸ்மேட்ஸ் எல்லோரும் கம்ருதீனை ரவுண்டு கட்டுகின்றனர்.