செய்திகள் :

BB Tamil 9 Day 3: ‘கலையரசன் வின்னரா?’ -VJ பாரு; இரவெல்லாம் பஞ்சாயத்து; பிக் பாஸில் நடந்தது என்ன?

post image

‘காக்கா இம்பூட்டு கக்கா போனதுக்காடா டீக்கடையை கொளுத்தி ஊரையே கலவரமாக்கினீங்க?’ - இந்த வடிவேலு காமெடி போல விஜே பாரு, வீட்டை சுத்தம் செய்த லட்சணத்தினால் எழுந்த சண்டை காரணமாக ஒட்டுமொத்த வீட்டையே களேபரமாக்கி விட்டார். 

BB Tamil 9 Day 3
BB Tamil 9 Day 3

‘இந்தப் பய எப்படியும் கப் அடிப்பாண்டா’ என்கிற நம்பிக்கையை ஆரம்பத்திலிருந்தே தந்து வருகிறார் சபரி. பிக் பாஸ் தண்ணீரில் ரேஷன் முறையை கொண்டு வந்த போது ‘கூட்டாஞ்சோறு’ சாப்பிடுவதின் மூலம் நிறைய தட்டுக்களை கழுவ வேண்டியிருக்காது என்கிற ஐடியாவை சொல்லி வரவேற்பு பெற்றார். எங்காவது பஞ்சாயத்து என்றால் உடனே துண்டை தோளில் உதறி சமாதானம் பேசச் செல்கிறார். 

போதாக்குறைக்கு தனக்கு தரப்பட்ட ‘தண்ணீர் கண்காணிப்பு’பணியில் மிகவும் சிரத்தையாக செயல்படுகிறார். இன்று இரவு முழுக்க, தண்ணீருக்கான அலாரம் வருகிறதா என்பதை கண்விழித்து பார்த்ததால் ‘பாவம்ப்பா புள்ள, எவ்ளோ கஷ்டப்படுது பாரேன்’ என்கிற பாராட்டை சக போட்டியாளர்களிடம் இருந்து வாங்கி வருகிறார். அணையில் ஓட்டை விழுந்த போது விரலை வைத்து அடைத்து இரவு முழுவதும் அமர்ந்திருந்த சிறுவனின் சாகசக் கதையைப் போல சபரிக்கு பாராட்டு கிடைக்கிறது. டாப் 5-ல் வரக்கூடிய அத்தனை அடையாளங்களும் சபரியிடம் தெரிகின்றன. 

‘டாஸ்க் லெட்டர் வந்திருக்கு.. எழுந்து வாங்க’ என்று பிக் பாஸ் வீடு, சூப்பர் டீலக்ஸை அழைத்தார்கள். பள்ளிப்பிள்ளைகளுக்கு உறக்கம் கலைந்து விட்டாலும் கூட எழுந்திருக்க மனமில்லாமல் அரைமயக்க நிலையில் வம்படியாக கவிழ்ந்து படுத்து தூங்குவார்கள் அல்லவா? அப்படியாக, சூப்பர் டீலக்ஸ் வீட்டார், தங்களுக்கு கிடைத்த சௌகரியத்தை எளிதில் விட மனமில்லாமல் ‘நீ போயேன்.. நீதான் போயேன்’ என்று ஒருவரையொருவர் பார்த்தபடி சோம்பேறித்தனமாக இருந்தார்கள். 

BB Tamil 9 Day 3
BB Tamil 9 Day 3

மார்னிங் டாஸ்க். அதேதான். ஒருவரையொருவர் கோள்மூட்டி சிண்டை இழுத்து சண்டை போட வைக்கும் அதே டெக்னிக். “யார் உடனே எலிமினேஷன் ஆவாங்க.. யார் கப் அடிப்பாங்க.. நான் எத்தனை நாளைக்கு இந்த வீட்ல இருப்பேன்” என்கிற மூன்று கேள்விகளுக்கு ஒவ்வொருவரும் பதில் சொல்ல வேண்டும். 


ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரக்கூடிய முதல் பெஞ்ச் மாணவன் மாதிரி, கோப்பையை வெல்லக்கூடிய போட்டியாளராக சபரியை பெரும்பாலோனோர் குறிப்பிட்டார்கள். (அப்ப இவிய்ங்க எதுக்காக இங்க வந்திருக்காங்க!). முதலில் வந்த விக்ரம் “இளைஞர்களுக்கு வழிவிடுவேன்னு பிரவீன் காந்தி சொல்லிட்டாரு. அதனால அவர்தான் முதல்ல போவாரு” என்று சொல்ல ‘யப்பா. சாமி.. அதை தெரியாம சொல்லிட்டண்டா.. அதையே சொல்லி சொல்லி நோண்டாதீங்க. இனிமே யாராவது அர்ஜெண்டா பாத்ரூம் பக்கம் ஓடினாக் கூட அவங்களுக்கு வழி விடாம காலை குறுக்கால விட்டு கீழ விழ வெக்கறேன். ஆள விடுங்கடா” என்று பிரவீன்காந்தியின் மைண்ட் வாய்ஸ் அலறியிருக்கலாம். 

BB Tamil 9 Day 3
BB Tamil 9 Day 3

“மக்கள் ஆதரவு எனக்கு அமோகமா இருந்தாலும் நான் அறுபது நாள்தான் இருப்பேன்” என்று வாக்குமூலம் தந்தார் திவாகர். (அவ்வளவு நாள் உங்க இம்சையை தாங்கணுமா?!) அது மட்டுமில்லாது ‘பாருதான் டைட்டில் வின்னர்’ என்று சொல்லி நமக்கே ஷாக் தந்தார். 

“மாயாதான் வெளியே போவாங்க” என்று ஆரம்பித்தார் பிரவீன்காந்தி. அந்தப் பெயரில் எந்தவொரு ஆயாவும் இல்லையே என்று மக்கள் குழம்பிய போது பாருவின் பெயரைத்தான் அந்த லட்சணத்தில் சொல்லியிருக்கிறார். கனிதான் டைட்டில் வின்னர் என்பது இவரது ஜோசியம். 

‘சபரிதான் முதலில் வெளியே போவார்’ என்று வினோத் சொன்ன போது ‘ஏம்ப்பா… சரியாத்தான் பேசறியா.. அவன் நல்லாப் படிக்கற பையனாச்சே.. பெயரை மாத்தி சொல்லிட்டியா?’ என்று மக்கள் குழம்ப, “ஏன் அவரு பேரைச் சொல்லக்கூடாதா” என்று எதிர்க்கேள்வி கேட்டு மடக்கினார் வினோத். 

“என் வீட்லயே மூட்டை மூட்டையா அவார்டுக கொட்டிக் கிடக்கு. பிக் பாஸ் அவார்டுலாம் எனக்கு  ஒண்ணுமேயில்லே” என்று சொல்லி பிக் பாஸையே அதிர வைத்தார் கலையரசன். தன் அடையாளம் மாற வேண்டும் என்கிற நோக்கத்திற்காகத்தான் இங்கு வந்திருக்கிறாராம். ஒருவழியாக இந்த வெட்டி டாஸ்க் முடிய “பரவாயில்லப்பா தம்பிகளா.. ஏதோ சுமாரா பண்ணீங்க” என்று பாராட்டுரை வழங்கினார் பிக் பாஸ். 


‘ரூட்டு தல’ மாதிரி ‘வீட்டு தல’ என்கிற டாஸ்க்கை அடுத்தபடியாக ஆரம்பிக்கப்பட்டது. கேப்டன் என்பதைத்தான் அப்படி அழைக்கிறார்களாம். இதற்காக ஒரு டாஸ்க்கை யோசித்தார்கள் பாருங்கள்.. ஆஸம்.. ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் பொங்கி வரும் பாலை சரியான நேரத்தில் டெக்னிக்கலாக ஆஃப் செய்வார் டெண்டுல்கர். அதிலிருந்து இன்ஸ்பயர் ஆகி உருவாக்கிய டாஸ்க் போல. 

BB Tamil 9 Day 3
BB Tamil 9 Day 3

பிக் பாஸ் வீட்டார் மட்டுமே கேப்டன்ஷிப் டாஸ்க்கில் கலந்து கொள்ள முடியும். ‘பொங்குதே.. பொங்குதே’ என்று பிக் பாஸ் குரல் தந்தவுடன், எந்த நான்கு நபர்கள் முதலில் ஓடிச் சென்று பாலை அடுப்பில் வைக்கிறார்களோ அவர்கள் மட்டுமே விளையாட முடியும். பிறகு பஸ்ஸர் அடித்தவுடன் அடுப்பை ஆன் செய்து பாத்திரத்தின் விளிம்பு வரை பாலை பொங்க வைக்க வேண்டுமாம். ஒரு துளி கீழே சிந்தினால் கூட ஆட்டத்திலிருந்து அவுட்டாம். 

இந்தப் போட்டியில் கனியக்கா கலந்து கொள்ள முடியாமல் போக டாப் 8-ல் சிலர் வந்திருக்கிறார்கள். ‘வீட்டு தல’ யார் என்பது அடுத்த ரவுண்டுகளில் முடிவாகும் போல. 

பிறகு ஆரம்பித்தது அந்த நெடும் பஞ்சாயத்து. அதை வைத்தே இந்த முழுக்க ஓட்டி பாயைப் பிறாண்டினார்கள். “என்ன கையைப் பிடிச்சு இழுத்தியா..” என்கிற வடிவேலு காமெடி மாதிரி, இந்த சண்டை நாள் முழுக்க நடந்தது. இந்தச் சண்டையின் மையமாக விளங்கியவர்கள் பாரு மற்றும் சுபிக்ஷா. வியன்னா, ரம்யா, திவாகர் போன்றவர்கள், இந்த நாடகத்திற்கு சப்போர்டிங் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தார்கள். 


“இங்க பாருங்கோ.. ஒழுங்கா வேலை செய்ங்கோ.. அப்பத்தான் சம்பளம் ஒழுங்கா தருவேன்” என்கிற முதலாளியம்மா மாதிரி பாருவை அதட்டி வேலை வாங்க முயன்றார் வியன்னா. ஆனால் சிறுத்தையை சுரண்டிப் பார்த்தால் சும்மா விடுமா? “இந்தா பாரு. என் கிட்ட பேசும் போது டோன் ஒளுங்கா இருக்கணும். அதட்டற வேலைலாம் கூடாது. அக்கான்னுதான் கூப்பிடணும்” என்று பதிலுக்கு அலப்பறை செய்தார் பாரு. (இதே பாருதான் பிறகு “இந்த பிக் பாஸ் வீட்ல அக்கா. நொக்கா பிஸ்னஸ்லாம் கூடாது’ என்றார்). 

BB Tamil 9 Day 3
BB Tamil 9 Day 3

வேலை வாங்கப்பட்ட எரிச்சலில், துடைப்பத்தின் நுனியை பளபள சுவரின் பாரு குத்த “அச்சச்சோ.. எவ்வளவு எக்ஸ்பன்சிவ் மார்பிள் போட்டு கட்டியிருக்கோம். அதுல போய் உன் அழுக்கு துடைப்பத்தை வெச்சு குத்தறே’ என்று முதலாளியம்மா வியன்னா ஆட்சேபம் தெரிவிக்க .. அவ்வளவுதான் கதகளி நடனமே ஆடத்துவங்கி விட்டார் பாரு. 


“நான் இப்படிப் பெருக்குவேன். அப்படி பெருக்குவேன். வானத்துல ஒட்டடை அடிப்பேன். அதெல்லாம் என்னோட வொர்க்கிங் ஸ்டைல். அதெல்லாம் நீ கேட்கக்கூடாது. தப்பு.. தப்பு.. ’ என்று கில்லி பிரகாஷ்ராஜ் மாதிரி எகிறினார். பிறகு “எனக்கு இந்த வேலையும் வேணாம். ஒண்ணும் வேணாம்” என்று கவுனை கழற்றி விட்டு கிளம்பினார் பாரு. (ஓவ்.. ரிசர்வ் பாங்க் வேலையை ரிசைன் பண்ணிட்டு போர்றார்ரா இவரு.. மோமெண்ட்!). 

அதிலும் தோழி பாருவின் பிரச்சினை என்றால் விட்டு விடுவாரா? “அது அவங்களோட மேனரிஸம். ஒரு ரொமான்டிக் ஸ்டார் இங்க எவ்வளவு ஸ்டைலா நிக்கறேன். அதை ரசிச்சு பார்க்கறதை விட்டுட்டு இப்படி சண்டை போடறீங்களே?” என்று திவாகர் சொல்ல “இதோ பார்.. இதான் லாஸ்ட் வார்னிங்க. இனிமே கோவம் வர்ற மாதிரி காமெடி பண்ணாத” என்று எச்சரித்தார் கம்ருதீன். 

சூப்பர் டீலக்ஸ் வீட்டார் சும்மா இருந்தாலும் பிக் பாஸ் அவர்களைத் தூண்டி விட்டுக் கொண்டேயிருக்கிறார். “டேய்.. நீங்கள்லாம் யாரு தெரியுமா.. உன் வரலாறு தெரியுமா.. ஃபேக்ரவுண்டு தெரியுமா.. ஆண்ட பரம்பரைடா.. கெத்தா நடக்கணும். எவன் வந்தாலும் வெட்டணும்’ என்கிற சாதிக்கட்சித் தலைவன் மாதிரி சூப்பர் டீலக்ஸ் வீட்டை உசுப்பி விட்டுக் கொண்டேயிருப்பதால்தான், வியன்னா போன்ற சுண்டெலிகளுக்கு கூட பாரு என்கிற சிங்கத்தை சுரண்டிப் பார்க்கும் தைரியம் வருகிறது. 


வீடு பெருக்கும் வேலையை பாரு ரிசைன் செய்து விட்டதால் உலகமே ஸ்தம்பித்து விட்டதைப் போல அதை சரி செய்யும் பஞ்சாயத்தில் ஒட்டுமொத்த வீடும் இறங்கியது. “இங்க பாருங்கக்கா.. டாஸ்க்கை நாம சுவாரசியமா ஆக்கணும். அதுக்குத்தான் இதெல்லாம்” என்று சுபிக்ஷா சொல்ல “அதேதான் எனக்கும். ஆனா வியன்னா பேசினதுல நான் ஹர்ட் ஆகிட்டேன். இருந்தாலும் மறப்போம் மன்னிப்போம்ன்றதுதான் என் பாலிசி” என்று பாரு சொல்ல “ஹப்பாடா.. அப்ப வேலைக்கு மறுபடியும் வருவீங்கள்ல” என்று சுபிக்ஷா பெருமூச்சு விட “இல்ல.. மறந்து மன்னிச்சுடுவேன். ஆனா வேலைக்கு வர ஐடியா இல்ல” என்று பாரு மறுபடியும் பாயைப் பிறாண்டினார். 


‘என்ன கர்மம்டா இது’ என்று மைண்ட் வாய்ஸிற்குள் அலறிய சுபிக்ஷா “எல்லாக் கோட்டையும் அழிச்சுடுவோம். மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிப்போம்’ என்கிற பரோட்டா காமெடியை ரீப்ளே செய்ய “ஓவ்.. இந்தப் பொண்ணு என்னையே பிரையின் வாஷ் பண்ணிடும் போலயே. நான் ஹர்ட் ஆகிட்டேன்.. ஆனா மறப்போம் மன்னிப்போம்.. ஆனா வேலைக்கு வரமாட்டேன்” என்று பாரு செய்கிற ஸ்ட்ராட்டஜியைப் பார்த்த போது நமக்குத்தான் பைத்தியம் பிடிக்கும் போலிருக்கிறது. 

BB Tamil 9 Day 3
BB Tamil 9 Day 3

“ஏண்டி இவளே.. நீயா ஏன் வான்ட்டடா போய் சனியனை பனியனுக்கு உள்ள போட்டுக்கற.. அவ வேலையை ரிசைன் பண்ணா பண்ணட்டுமே.. பிக் பாஸ் அதையெல்லாம் பார்த்துக்குவாரு.. நீ ஏன் போய் அவ கிட்ட தொங்கிக்கிட்டு இருக்க” என்று சுபிக்ஷாவிடம் அட்வைஸ் செய்தார் ரம்யா. பிரச்சினையில் மாட்டிக் கொண்டு பாருவை பிக் பாஸ் சாறு பிழியட்டும் என்பது ரம்யாவின் கணக்கு. 

“ஆனா. பிக் பாஸ் எதுவுமே சொல்லலியே’ என்று அப்பாவித்தனமாக கேட்டார் சுபிக்ஷா. ஒரு சண்டையை உருவாக்கி அதன் எல்லை வரை மோத விட்டு கடைசியில் வந்து (விஜய் சேதுபதி மூலம்) பஞ்சாயத்து செய்வதுதான் பிக் பாஸின் வழக்கமான ஸ்டைல் என்பது சுபிக்ஷாவிற்குத் தெரியவில்லை. “அதெல்லாம் வருவாரு தங்கம். அவரு கடவுள்மாதிரி. கடைசில வருவாரு. நீ அழாதடா செல்லம்”என்று சுபிக்ஷாவிற்கு ஆறுதல் சொன்னார் ரம்யா. 

“வியன்னா, சுபிக்ஷா பண்ண அலப்பறைல நான் ஹர்ட் ஆகிட்டேன். வேலையை ரிசைன் பண்ணிட்டேன். சூப்பர் டீலக்ஸ் வீட்ல யார் சொன்னாலும் வேலை செய்ய மாட்டேன்.  நீங்க என்ன வேணா பண்ணிக்கங்க” என்று பிக் பாஸிடமே காமிரா முன்னால் பணிவாக சவால் விட்டார் பார்வதி. 

உணர்ச்சிவசப்படும் சுபிக்ஷா மாதிரி எனர்ஜியை வேஸ்ட் செய்ய வியன்னாவிற்கு மனமில்லை. எனவே அங்கும் இங்குமாக ஒயிலாக உலவி பாருவின் பிபியை கூட்டினார். 

இவர்கள் இப்படியாக ‘சொல்வதெல்லாம் உண்மை’ பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கும் போது வெளியே ஒரு தரமான சம்பவத்தை செய்தார் பிக் பாஸ். சிவப்பு விளக்கு எரிந்து பைப்பில் தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. கொடி காத்த குமரன் போல வேலையில் வெள்ளைக்காரனாக இருக்கும் சபரி கூட பஞ்சாயத்தை வேடிக்கை பார்க்க உள்ளே வந்து விட்டதால் எவரும் இதை கவனிக்கவில்லை. எதற்கோ வெளியே வந்த விக்ரம் கூட இதைக் கவனிக்காமல் உள்ளே சென்றது நல்ல ஸ்டான்ட்அப் காமெடி. 

BB Tamil 9 Day 3
BB Tamil 9 Day 3

ஒரு கட்டத்திற்கு மேல்தான் இதைப் பார்த்து ‘அய்யய்யோ.. தண்ணி வேஸ்டா போகுது’ என்று அலறியடித்துக் கொண்டு ஓடி வந்தார்கள். அப்போதாவது அந்த வெட்டி பஞ்சாயத்தை நிறுத்துவார்களா என்று பார்த்தால்.. இல்லை. வெளியே கார்டன் ஏரியாவில் வந்து தொடர்ந்தார்கள். ‘மாட்டை மேய்ச்ச மாதிரியும் ஆச்சு.. அப்படியே அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு’ என்கிற கதையாக, தண்ணீர் வருகிறதா என்பதைப் பார்த்துக் கொண்டே பஞ்சாயத்தை தொடரும் பிரில்லியண்ட் ஐடியா. 

“ஒருத்தர் ரிசைன் பண்ணிட்டாங்க.. இப்போ என்ன பண்றது?” என்று ‘கோப்பால்’ சரோஜா தேவி பாடி லேங்வேஜில் வியன்னா மீண்டும் பஞ்சாயத்தை ஆரம்பிக்க “துடைப்பத்தை அப்படி இடிக்கறது என் ஜாப் கிரியேட்டிவிட்டி” என்று அலப்பறை செய்தார் பாரு. (வீடு பெருக்கறதுல என்னம்மா கிரியேட்டிவிட்டி?!) இந்தச் சண்டை அப்படியே பரவி திவாகருக்கும் கெமிக்குமான சண்டையாக மாறியது. 

“ஆளாளுக்கு பர்சனல் அஜெண்டா வெச்சு ஸ்கோர் செய்யப் பார்க்கறீங்களா?” என்று பாருவிற்கு சப்போர்ட் ஆக திவாகர் களத்தில் இறங்க “என்னைப் பார்த்து பேசு.. என் கண்ணைப் பார்த்து பேசு. இடுப்பைப் பார்த்து பேசாத” என்று ‘குஷி’ ஜோதிகா மாதிரி கெமி சண்டைக்கு வர சூழல் ரணகளமாகியது. 

பஞ்சாயத்து தலைவர் மாதிரி நிதானமாக எழுந்த பிரவீன்காந்தி “பாரு சின்னப் பொண்ணு.. அவ கண்ணைப் பாருங்கய்யா.. மீசை வெச்ச குழந்தை மாதிரியான பொண்ணு அது” என்று உருக, இதை எதிர்பார்க்காத பாரு, கண்களை சிமிட்டி  உருட்டி தந்த எக்ஸ்பிரஷன் இருக்கிறதே.. அப்படியொரு கொடூரமான காமெடியை என் வாழ்நாளில் கண்டதில்லை. 

BB Tamil 9 Day 3
BB Tamil 9 Day 3

கோபத்தில் வெளிநடப்பு செய்த சுபிக்ஷா, பிக் பாஸ் வீட்டு வழக்கப்படி படுக்கையில் விழுந்து கோவென்று கதற ‘அழாதடா செல்லம். மூணு நாளைக்கே இப்படியா.. இன்னமும் எவ்வளவோ பார்க்க வேண்டியிருக்கு. பார்த்துடுவோம்” என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். நள்ளிரவு தாண்டியும் கார்டன் ஏரியாவில் தேவுடு காத்துக் கொண்டிருந்த கம்ரூதின் “பிக் பாஸ்.. தண்ணி வருமா. வராதா.. நான் தூங்கப் போகணும்’ என்று பரிதாபமாக கேட்டுக் கொண்டிருந்தார். 

பாரு பஞ்சாயத்து கொடூரமாக நடந்து முடிந்தாலும், அது இழுக்கப்பட்டதின் காரணமாக ‘கதை நேரம்’ என்கிற இன்னொரு கொடூரம் தள்ளிப் போடப்பட்டது என்பதுதான் இந்த எபிசோடின் ஒரே ஆறுதல். 

Bigg Boss Tamil 9: "நீங்க பண்ணது தப்புதான்" - கம்ருதீனை ரவுண்டு கட்டும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்

பிக் பாஸ் சீசன் 9 கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூடியூபர்கள் எ... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: "இந்த கோல்ட் வார் எல்லாத்தையும் மறப்போம், மன்னிப்போம்' - விஜே பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூடியூபர்கள் எ... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: "எங்களுக்குனு ஒரு சுயமரியாதை இருக்கு" - காட்டமாகப் பேசிய விஜே பார்வதி

பிக் பாஸ் சீசன் 9 கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது.கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் ம... மேலும் பார்க்க

BB Tamil 9 Day 2: பிரச்னைகளுக்கு நடுவில் திவாகரா(அ)பிரச்சினையே அவர்தானா? பிக் பாஸில் நடந்தது என்ன?

ஒருவருக்கு தாழ்வு மனப்பான்மை இருந்தால் அவர் ‘வாட்டர் மெலன்’ ஸ்டாரைப் பார்த்து முன்னுதாரணமாகக் கொள்ளலாம். தன்னை நடிப்பு அரக்கன் என்று தீவிரமாக நம்புவதோடு எத்தனை போ் சுற்றி நின்று அடித்தாலும் தாங்கிக் க... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: "உங்கள மதிச்சு நான் பேசுறேன்; ஆனா நீங்க" - பிரவீன் தேவசகாயம், வியானா வாக்குவாதம்

பிக் பாஸ் சீசன் 9 நேற்று முன்தினம் (அக்.5) கோலாகலமாகத் தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரிய... மேலும் பார்க்க

BB Tamil 9: "காசு அள்ளி தந்தாலும் அதை எல்லாம் ஆதரித்துப் பாட மாட்டார்" - கானா வினோத்தின் மறுபக்கம்

விஜய் டிவியில் பிக்பாஸ் 9வது சீசன் தொடங்கி விட்டது. 'ஆரம்பத்துலயே ஆரம்பிச்சிட்டாய்ங்கப்பா' என்கிற ரீதியில் முதல் நாளே 'வாட்டர்மெலன்' திவாகர் சக போட்டியாளர்களுடன் மல்லுக்குட்டுகிற மாதிரியான புரோமோக்கள்... மேலும் பார்க்க