செய்திகள் :

சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை: விடுபட்ட அம்பேத்கர், எம்.சி.ராஜா பெயர்கள்; அண்ணாமலை கேள்வி

post image

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில், ``இந்த மண்ணின் ஆதிக் குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக காலனி என்ற சொல் பதிவாகியிருக்கிறது.

ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமைக்கான குறியீடாகவும், வசைச் சொல்லாகவும் இது மாறியிருப்பதால், இனி இந்தச் சொல் அரசு ஆவணங்களிலிருந்தும் பொதுப்புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஸ்டாலின் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டு ஐந்து மாதங்களுக்குப் பிறகு, தற்போதுதான் அதற்குச் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

அந்த அரசாணையில், "அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் உள்ள குடியிருப்புகள், சாலைகள், நீர்நிலைகள், இன்னபிறவை மற்றும் வருவாய்க் கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குதல்/மறுபெயரிடுதல் - வழிகாட்டு நெறிமுறைகள்" என்று குறிப்பிடப்பட்டு, தெருக்கள் மற்றும் சாலைகளுக்கான எடுத்துக்காட்டுப் பெயர்களாக 16 பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

அரசாணை
அரசாணை

அவை, "திருவள்ளுவர், ஒளவையார், கபிலர், சீத்தலை சாத்தனார், நக்கீரர், பிசிராந்தையார், கம்பர், அகத்தியர், வீரமாமுனிவர், பாரதியார், பாரதிதாசன், மகாத்மா காந்தி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, காமராசர், கலைஞர்".

மேலும் அந்த அரசாணையில், குளம் மற்றும் நீர்நிலைகளுக்கான மாற்றுப் பெயர்களாக, "ரோஜா, மல்லி, செம்பருத்தி, சூரியகாந்தி, சாமந்தி, தாழம்பூ, காந்தள், கனகாம்பரம், கொன்றை, மகிழம்பூ, முல்லை, செண்பகம், குவளை, குறிஞ்சி, செவ்வந்தி" ஆகிய பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் பா.ஜ.க மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, அரசாணையில், தெருக்கள் மற்றும் சாலைகளுக்கான எடுத்துக்காட்டு பெயர்களில் அம்பேத்கர், எம்.சி.ராஜா உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை அரசு குறிப்பிடாததைக் குறிப்பிட்டு, "அவர்களை இன்னும் பட்டியல் சமூகத் தலைவர்களாக மட்டுமே தி.மு.க அரசு பார்க்கிறதா?" என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பதிவில் அண்ணாமலை, "தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாதிப் பெயர்களை நீக்க உத்தரவிட்டு தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், சாதிப் பெயர்களுக்கான மாற்றுப் பெயர்களை வைக்க சில எடுத்துக்காட்டுகளையும் வழங்கி இருக்கிறது. அவற்றில், மாபெரும் தலைவர்களான, அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, அயோத்திதாசர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களை தி.மு.க அரசு புறக்கணித்திருப்பது ஏன்?

அண்ணாமலை
அண்ணாமலை

அவர்களை இன்னும் பட்டியல் சமூகத் தலைவர்களாக மட்டுமே தி.மு.க அரசு பார்க்கிறதா?

மேலும், தி.மு.க அரசு கொடுத்துள்ள பட்டியலில், ராணி வேலு நாச்சியார், கொடிகாத்த குமரன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட தமிழகத்தின் பெருமைக்குரிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்களைப் புறக்கணித்திருக்கிறது.

அப்படி அந்தப் பட்டியலில் இருக்கும் மாபெரும் தலைவர்கள் யார் என்று பார்த்தால், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி அவர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

தனக்குத்தானே சிலை வைப்பது, தனக்குத் தானே டாக்டர் பட்டம் கொடுத்துக் கொள்வது என்று உங்கள் தந்தை செய்த நகைச்சுவைகள் போதாதென, தற்போது பொது இடங்களுக்கு அவர் பெயரை வைத்து, அவரை மிஞ்சிக் கொண்டிருக்கிறீர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே.

கருணாநிதி- ஸ்டாலின்
கருணாநிதி- ஸ்டாலின்

உங்கள் குடும்ப நிறுவனங்களுக்கே உங்கள் தந்தை பெயரை வைக்காத நீங்கள், பொது இடங்களுக்கு அவர் பெயரை வைத்து, மக்கள் வரிப்பணத்தை இன்னும் எத்தனை காலத்திற்கு வீணடிப்பீர்கள்?

முன்னாள் முதல்வர்கள் பெயரை வைக்கிறோம் என்றால், பாரத ரத்னா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பெயர் எங்கே?

சாதிப் பெயர்களை நீக்குகிறோம் என்ற பெயரில், தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய தி.மு.க தலைவரின் பெயரைத் திணிக்க முயற்சிக்கும் தி.மு.க அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையைத் திருத்தி, மேற்கூறிய அனைத்துத் தலைவர்களின் பெயர்களையும் இணைத்து, புதிய அரசாணையை வெளியிட வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

கழுகார்: வெளிவந்த ஸ்வீட் பாக்ஸ் விவகாரம்; கலக்கத்தில் தந்தை - மகன் டு கொதிக்கும் உடன்பிறப்புகள்!

கொதிக்கும் உடன்பிறப்புகள்!கட்டையைப் போடும் மாவட்ட நிர்வாகி...சமீபத்தில், அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கடலோர மாவட்டம் ஒன்றுக்கு முதன்மையானவர் சென்றிருந்தபோது, அவரைச் சந்திக்க கட்சி நிர்வாகிகள் கூடிய... மேலும் பார்க்க

``மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது'' -நடிகர் சத்யராஜ்

கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டிலேயே நீளமான உயர் மட்ட பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.9) திறந்து வைத்திருக்கிறார். இந்நிலையில் 'மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்ப... மேலும் பார்க்க

"தெருப்பெயர்களில் சாதியை நீக்க அரசாணை; மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்ற சாதிப்பெயரா?" - சீமான்

கோவையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க 2020-ல் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள் தற்போது முழுமையாக முடிக்கப்பட்டு தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட ம... மேலும் பார்க்க

மதுரை: நெருங்கும் தேர்தல் - சௌராஷ்ட்ர சமூகத்தினர் நடத்தவிருக்கும் அரசியல் எழுச்சி மாநாடு

தமிழகத்தில் தேர்தல் காலம் நெருங்கி வருகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று முடிவெடுக்கவும், தங்கள் சமூகத்தின் பலத்தை காட்டவும் சமீபகாலமாக பல்வேறு சமூக அமைப்புகள் ஆலோசனைக் கூட்டஙகள... மேலும் பார்க்க

An open letter to CM MK Stalin | TVK Vijay Karur Stampede | Vikatan | DMK

Tvk karur கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், தவெக தலைவர் விஜய் மீது பல்வேறு தவறுகள் உள்ளன. அதையெல்லாம் நாம் விரிவாகப் பேசியிருக்கிறோம். ஆனால், விஜய்யைக் காரணம் காட்டி, முதல்வர் ஸ்டாலின் கரூர் ... மேலும் பார்க்க