கேரளா: "வேலையை விடும் திட்டமில்லை" - லாட்டரியில் ரூ. 25 கோடி வென்ற பிறகும் வேலைக...
அடுத்த 3 நாள்கள் தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? - வானிலை மையம் அறிக்கை
'அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?' என்பதை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை மையம்.
நாளை கோவையின் மலைப்பகுதிகள், ஈரோடு, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
நாளை மறுநாள் (அக்டோபர் 11, 2025), நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12, 2025), நீலகிரி, கோவை மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யலாம்.
கனமழை என்பது 64.5 - 115.5 மி.மீ மழையைக் குறிக்கிறது.
இன்று
இன்று கோவை மலைப்பகுதிகள், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.
நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் இன்று ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) October 9, 2025