செய்திகள் :

இந்த வாரமும் கனமழை எச்சரிக்கை; எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை மைய அறிக்கை

post image

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்த வாரமும் தமிழ்நாட்டில் மழை தொடரும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதன் அறிக்கைப்படி, இந்த வாரம் எந்தெந்த மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

"இன்று தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மழை
மழை

நாளை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் புதன்கிழமை (08-10-2025) தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை. செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் வியாழக்கிழமை (09-10-2025) தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை (10-10-2025, 11-10-2025) தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உண்டு" என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்கம்: டார்ஜிலிங்கில் கனமழை, நிலச்சரிவு: 17 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் பகுதியில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வரக்கூடிய சுகியா போரியா, மிரியா போன்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ... மேலும் பார்க்க

Rain Update: அரபிக் கடலில் உருவான 'சக்தி' புயல்; தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

வடகிழக்கு அரபிக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது. நேற்று அது குஜராத் அருகே ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு இருந்தது.அதன் பின், புயலாக மாறியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீ... மேலும் பார்க்க

வானிலை: `இடி மின்னலுடன் கூடிய மழை' - எந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?

தென்னிந்தியப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் 3-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. மேலும், 30-40 கி.மீவேகத்தில் த... மேலும் பார்க்க

Rain Update: 'இந்த வாரம் எப்போது மழை?' - சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரியின் வானிலை அப்டேட்!

தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் மழை பொழியும் என்று முன்னர் சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இந்த வா... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் இந்த வாரம் மழை எப்படி இருக்கும்? - வானிலை மையம் அறிக்கை

தமிழ்நாட்டில் இந்த வாரம் வானிலை எப்படி இருக்கும் என்கிற அறிக்கையை வெளியிட்டுள்ளது சென்னை வானிலை மையம். இன்று தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன... மேலும் பார்க்க

Rain Update: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி; எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யலாம்?

மியான்மார் கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இ... மேலும் பார்க்க