500 ஆண்டுகளாக நடக்கும் துர்கா பூஜை: கலவரக் காடாக மாறிய ஒடிசா நகரம்; இணைய முடக்கம...
``தனுஷ் இளம் வயதில் முதிர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டிருக்கிறார்'' - `இட்லி கடை' குறித்து சீமான்
டான் பிக்சர்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ள படம் 'இட்லி கடை'.
இந்தப் படத்தில் தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி, இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தனுஷ் இயக்கத்தில் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் படத்தைப் பார்த்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 'இட்லி கடை' குறித்து பகிர்ந்திருக்கிறார்.
இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கும் அவர், “தம்பி தனுஷ் எழுதி, இயக்கி, நடித்த 'இட்லி கடை' படத்தை பார்த்தேன்.
வாழ்வதற்குதான் பணம் தேவை. பணமே வாழ்க்கை இல்லை. தன் இட்லி கடை படத்தில், நிறைய செய்திகளை கவித்துவமாக, உணர்ச்சி குவியலாக சொல்லியிருக்கிறார் தம்பி தனுஷ்.

இளம் வயதில் முதிர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டிருக்கிறார். இப்படத்தை பார்த்தபின், நாம் எல்லோரும் நம் வேர்தேடி பயணிப்போம்” என்று பாராட்டி பேசியிருக்கிறார்.