செய்திகள் :

Bigg Boss 9: விக்கல்ஸ் விக்ரம், மீனவப் பெண் சுபிக்‌ஷா குமார்; போட்டியாளர்கள் குறித்த தகவல்கள்

post image

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக நேற்று தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார்.

பிக் பாஸ்
பிக் பாஸ்

வீட்டிற்குள் சென்றிருக்கும் போட்டியாளர்கள் பற்றிய விவரத்தை இங்கு பார்ப்போம்.

சுபிக்‌ஷா குமார்:

தூத்துக்குடி மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் சுபிக்‌ஷா குமார். மீனவரான இவரது அப்பாவுடன் சேர்ந்து அந்த ஊரிலேயே தைரியமாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார். அப்பாவுக்கு ஆதரவாக உதவியாக எப்போதும் இருப்பதாகக் கூறுகிறார். யூடியூப்பிலும் தனது உழைப்பால் பிரபலமாகி அடையாளம் பெற்றவர். இப்போது இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார்.

அப்சரா சிஜே:

கேரளாவைச் சேர்ந்த திருநங்கையான இவர், மாடலாக பல பேஷன் ஷோக்களில் ரேம்ப் வாக் செய்திருக்கிறார். புகைப்படக் கலையிலும் ஆர்வம் கொண்டவர். இப்போது சினிமா கனவோடு பிக் பாஸில் களமிறங்கியிருக்கிறார்.

விக்கல்ஸ் விக்ரம்:

விக்கல்ஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் திரை இசைப் பாடல்களை வைத்து நகைச்சுவை செய்து ரஹ்மான் வரை அறியப்பட்டு பிரபலமானவர். ஸ்டண்ட் அப் காமெடியிலும் பல ஷோக்கள் செய்திருக்கிறார். தந்தூரி இட்லி, வேற மாரி ஆபிஸ், வேற மாரி டிரிப் உள்ளிட்ட தொலைக்காட்சி சீரிஸ்களில் நடித்து சினிமா வரை சென்றிருக்கும் இவர், இப்போது தனது பிரபலத்தை இன்னும் விசாலமாக்க பிக்பாஸ் வந்திருக்கிறார்.

கலையரசன்:

அகோரி கலையரசனாக பல சர்ச்சைக்குள் சிக்கியவர். இந்த 25 வயதில் காசி வரை சென்று வாழ்க்கையில் எல்லைக்குச் சென்றவர், சாமி வாக்கு சொல்பவராக சர்ச்சைகளில் சிக்கித் தவித்தவர். இப்போது எல்லாத்தையும் விட்டுவிட்டு குடும்பத்திற்காக குழந்தைக்காக தனது வாழ்வை மீண்டும் புதிதாக தொடங்கியிருப்பவர், பிக் பாஸ் மூலம் தன் அடையாளத்தை நல்ல முறையில் மாற்றி முன்னேற வந்திருக்கிறார்.

BB Tamil 9: ‘அடடே, இவங்களா! அப்ப பிரச்னைக்கு பஞ்சமே இருக்காது' - தொடக்க விழாவின் மேக்ரோ பார்வை

விகடன்.காம் வாசக தோழமைகளுக்கு வணக்கம். இன்னொரு பிக் பாஸ் சீசனின் மூலமாக உங்களையெல்லாம் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. BB Tamil 9 Grand Launchஇந்த 9வது சீசனில் 10 ஆண்கள், 10 பெண்கள் என்று மொத்த... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: பிகில் நடிகை, டான்ஸர், கெமி; இந்த சீசன் போட்டியாளர்களின் பயோ!

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக நேற்று தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். வருடந்தோறும் பிக் பாஸ் வீட்டை மாற்றியமைப்பதுபோல, இந்த வருடத்தின் வ... மேலும் பார்க்க

BB Tamil 9: CWC டைட்டில் வின்னர், சீனியர் இயக்குநர் - போட்டியாளர்களின் விவரம்!

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக இன்று தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். வருடந்தோறும் பிக் பாஸ் வீட்டை மாற்றியமைப்பது போல, இந்த வருடத்தின் வ... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: இந்த வருட போட்டியாளர்களின் முழு விவரங்கள்

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக இன்று தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். வருடந்தோறும் பிக் பாஸ் வீட்டை மாற்றியமைப்பதுபோல, இந்த வருடத்தின் வீ... மேலும் பார்க்க

திவாகர் எப்படி வந்தார்? - பதில் சொன்ன விஜய் சேதுபதி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனின் இன்று மாலை 6மணிக்கு ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகிறது. எகிப்திய அரண்மை, இரண்டு வீடு - ஒரு வீடு சாதாரணமான வீடு, இன்னொன்று பிரமாண்டமான சூப்பர் டீலக்ஸ் வசதி கொண்ட வீடு, ... மேலும் பார்க்க

Bigg Boss 9: "எகிப்த்திய அரண்மனை, சிறை, கேப்டன் அறை" - பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனின் இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகிறது. கருப்பு உடையில் என்ட்ரி கொடுத்து பேச ஆரம்பித்த தொகுப்பாளர் விஜய் சேதுபதி, "ஒரு வருஷத்துக்கு அப்புறம் திரும்பவு... மேலும் பார்க்க