செய்திகள் :

திவாகர் எப்படி வந்தார்? - பதில் சொன்ன விஜய் சேதுபதி

post image

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனின் இன்று மாலை 6மணிக்கு ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகிறது.

எகிப்திய அரண்மை, இரண்டு வீடு - ஒரு வீடு சாதாரணமான வீடு, இன்னொன்று பிரமாண்டமான சூப்பர் டீலக்ஸ் வசதி கொண்ட வீடு, இரண்டு வீட்டிலும் கேப்டனுக்குத் தனி அறை. சிறை, ஒரு வீட்டுக்கு 12 பேர். வீடெங்கும் எகிப்திய சிலைகள், பலவகை உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகங்கள் என பிரமாண்டமாக ஆரம்பமாகியிருக்கிறது இந்த பிக்பாஸ் சீசன் 9. 'பிக்பாஸ் வீடு ஆட்டத்திற்கு ரெடி' என கொடி அசைத்து ஆட்டத்தைத் தொடங்கினார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி

முதலாவதாக என்ட்ரி கொடுத்த போட்டியாளர் திவாகர். அவரை பார்த்ததும் கூட்டத்திலிருந்து 'நடிப்பு அரக்கன், நடிப்பு அரக்கன்' என்று நக்கலாக ஆரவாரம் வந்தது. இதைக்கேட்டவுடன் விஜய் சேதுபது, "நீங்கள் எல்லாரும் அவரை, யூடியூப்பில் பார்த்திட்டு இப்படி சொல்றீங்க. ஆனால், இங்க பிக்பாஸ் வீட்டுல அவரை அப்படி காட்டமாட்டோம், இங்க அவரோட உண்மையாக முகத்தைப் பார்ப்பீங்க.

பிக் பாஸ் உள்ள தெரிஞ்சவங்களா பார்த்து செலக்ட் பண்றாங்கனு சொல்றாங்க, திவாகர் இங்க வருவதற்கு பிக் பாஸ் டீம் நிறைய கேள்விகள் கேட்டாங்க, அதுகெல்லாம் சிறப்பாக பதில் சொல்லியிருக்கிறார் டாக்டர் திவாகர்" என்று பேசியிருக்கிறார் விஜய் சேதுபதி

BB Tamil 9: CWC டைட்டில் வின்னர், சீனியர் இயக்குநர் - போட்டியாளர்களின் விவரம்!

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக இன்று தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். வருடந்தோறும் பிக் பாஸ் வீட்டை மாற்றியமைப்பது போல, இந்த வருடத்தின் வ... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: இந்த வருட போட்டியாளர்களின் முழு விவரங்கள்

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக இன்று தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். வருடந்தோறும் பிக் பாஸ் வீட்டை மாற்றியமைப்பதுபோல, இந்த வருடத்தின் வீ... மேலும் பார்க்க

Bigg Boss 9: "எகிப்த்திய அரண்மனை, சிறை, கேப்டன் அறை" - பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனின் இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகிறது. கருப்பு உடையில் என்ட்ரி கொடுத்து பேச ஆரம்பித்த தொகுப்பாளர் விஜய் சேதுபதி, "ஒரு வருஷத்துக்கு அப்புறம் திரும்பவு... மேலும் பார்க்க

'அம்மா‌ தன் காதலை நடனத்தின் மூலமா வெளிப்படுத்தினாங்க, ஆனா '- விமர்சனங்களுக்கு இந்திரஜா விளக்கம்

கடந்த மாதம் நடிகர் ரோபோ சங்கர் (46) உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் மறைவு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே ரோபோ ஷங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது... மேலும் பார்க்க

Bigg Boss 9: ஹிட் சீரியல் நடிகர் டு பெண் தொகுப்பாளர் வரை கடைசி நிமிடத்தில் நுழைந்தவர்கள் லிஸ்ட்

விஜய் டிவியின் ஹிட் ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனின் ஷூட்டிங் இன்று காலை தொடங்கியது.2017ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு டிவி ரசிகர்கள் மத்தி... மேலும் பார்க்க