செய்திகள் :

BB Tamil 9: CWC டைட்டில் வின்னர், சீனியர் இயக்குநர் - போட்டியாளர்களின் விவரம்!

post image

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக இன்று தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார்.

வருடந்தோறும் பிக் பாஸ் வீட்டை மாற்றியமைப்பது போல, இந்த வருடத்தின் வீட்டையும் வித்தியாசமாக அமைத்திருக்கிறார்கள்.

Bigg Boss Tamil Season 9
பிக்பாஸ் தமிழ் சீசன் 9

போட்டியாளர் ஒவ்வொருவராக வீட்டிற்குள் சென்று கொண்டிருக்கிறார்கள். சோசியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூட்யூபர்கள் என பலரும் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்து வருகிறார்கள்.

வீட்டிற்குள் செல்லும் போட்டியாளர் யார்? அவர்களைப் பற்றிய விவரத்தை இங்கு பார்ப்போம்.

துஷார் ஜெயபிரகாஷ்:

கன்டென்ட் கிரியேட்டரான துஷார் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். சிறு வயதிலிருந்து தனது உருவத்திற்காக நிராகரிப்புகளைச் சந்தித்ததாகவும் இவர் சொல்லியிருக்கிறார். நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவரும் இந்த சீசனில் என்ட்ரி தந்திருக்கிறார்.

கனி
கனி

கனி:

இயக்குநர் அகத்தியனின் மகளான கனி இதற்கு முன்பே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக வந்தவர். இயக்குநர் அகத்தியனின் மகள் என்பது பலரும் அறிந்ததே. 'தீராத விளையாட்டு பிள்ளை', 'நான் சிகப்பு மனிதன்' போன்ற படங்களை இயக்கிய திரு தான் கனியின் கணவர். இந்த ஆண்டு ஹாட்ஸ்டாரில் வந்திருந்த 'பாராசூட்' வெப் சீரிஸிலும் இவர் நடித்திருக்கிறார்.

சபரிநாதன்:

சீரியல் நடிகரான சபரிநாதனும் இந்த வருட பிக் பாஸில் பங்கேற்றிருக்கிறார். கடந்த ஆண்டு பிக் பாஸ் போட்டியாளர்களை இவர் நேர்காணல் செய்த ரகளைகள் இணையத்தில் பெரும் வைரலாகின. 'வேலைக்காரன்', 'பொன்னி' உள்ளிட்ட சீரியல்களில் நடித்து தமிழ் மக்களுக்கு பரிச்சயமான சபரி. கலகலப்பான தொகுப்பாளரும்கூட.

பிரவீன் காந்தி:

'ரட்சகன்', 'ஜோடி' உள்ளிட்ட 90ஸ் கிட்ஸுக்கு பேவரிட்டான திரைப்படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் பிரவீன் காந்தி. அப்படங்களைத் தொடர்ந்து 'துள்ளல்' என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார் பிரவீன் காந்தி. ஆனால், அப்படம் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை. 2007-க்குப் பிறகு இவர் டைரக்ஷன் பக்கம் வரவில்லை. கவ்பாய் தொப்பி, ஒரு கண்ணாடிதான் பிரவீன் காந்தியின் அடையாளம். சீனியராக இவரும் இந்த வருடம் பிக் பாஸில் என்ட்ரி தந்திருக்கிறார்.

Bigg Boss Tamil 9: இந்த வருட போட்டியாளர்களின் முழு விவரங்கள்

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக இன்று தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். வருடந்தோறும் பிக் பாஸ் வீட்டை மாற்றியமைப்பதுபோல, இந்த வருடத்தின் வீ... மேலும் பார்க்க

திவாகர் எப்படி வந்தார்? - பதில் சொன்ன விஜய் சேதுபதி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனின் இன்று மாலை 6மணிக்கு ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகிறது. எகிப்திய அரண்மை, இரண்டு வீடு - ஒரு வீடு சாதாரணமான வீடு, இன்னொன்று பிரமாண்டமான சூப்பர் டீலக்ஸ் வசதி கொண்ட வீடு, ... மேலும் பார்க்க

Bigg Boss 9: "எகிப்த்திய அரண்மனை, சிறை, கேப்டன் அறை" - பிக் பாஸ் சீசன் 9 ஆரம்பம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனின் இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பமாகி ஒளிபரப்பாகி வருகிறது. கருப்பு உடையில் என்ட்ரி கொடுத்து பேச ஆரம்பித்த தொகுப்பாளர் விஜய் சேதுபதி, "ஒரு வருஷத்துக்கு அப்புறம் திரும்பவு... மேலும் பார்க்க

'அம்மா‌ தன் காதலை நடனத்தின் மூலமா வெளிப்படுத்தினாங்க, ஆனா '- விமர்சனங்களுக்கு இந்திரஜா விளக்கம்

கடந்த மாதம் நடிகர் ரோபோ சங்கர் (46) உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் மறைவு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே ரோபோ ஷங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது... மேலும் பார்க்க

Bigg Boss 9: ஹிட் சீரியல் நடிகர் டு பெண் தொகுப்பாளர் வரை கடைசி நிமிடத்தில் நுழைந்தவர்கள் லிஸ்ட்

விஜய் டிவியின் ஹிட் ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனின் ஷூட்டிங் இன்று காலை தொடங்கியது.2017ம் ஆண்டு முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு டிவி ரசிகர்கள் மத்தி... மேலும் பார்க்க