செய்திகள் :

பிரதமர் மோடியைத் தொடர்ந்து கும்பிட்ட நிதீஷ் குமார்: `அவருக்கு என்ன ஆச்சு?' - எதிர்க்கட்சிகள் கேள்வி

post image

பீகாரில் அடுத்த ஒரு சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் அவசர அவசரமாக நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகின்றன.

பீகார் அரசு பெண்களுக்கு ஏற்கெனவே அவர்களது வங்கிக்கணக்கில் ரூ.10 ஆயிரம் போட்டுள்ளது. மத்திய அரசின் நிதியில் ஐ.டி.ஐ.யில் திறனாய்வு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஆன்லைனில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இதில் ஆன்லைன் மூலம் மாநில முதல்வர் நிதீஷ் குமாரும் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில், நிகழ்ச்சி விவரங்களை ஒரு தலைவர் படித்துக்கொண்டிருந்தார்.

ஆன்லைன் விழாவில் நிதீஷ் குமார்
ஆன்லைன் விழாவில் நிதீஷ் குமார்

அந்நேரம் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மிகவும் பவ்யமாக இருக்கையில் அமர்ந்து கையெடுத்துக் கும்பிட்டபடி இருந்தார். அவர் ஒரு முறை கும்பிட்டவுடன் கையை எடுக்கவில்லை. தொடர்ந்து அப்படியே கும்பிட்டபடி இருந்தார்.

கும்பிட்டபடி அடிக்கடி கையே மேலேயும் கீழேயும் லேசாக அசைத்துக்கொண்டிருந்தார். அப்படியே நிதீஷ் குமார் பக்கத்தில் அடிக்கடி பார்த்தார். ஒரு நிமிடம் வரை கையெடுத்து கும்பிட்டபடி இருந்தார்.

அவரது இந்த செயலை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. சமீபத்திய நிதீஷ் குமாரின் செயல்பாடுகள் சர்ச்சையை கிளப்பும் வகையில் இருந்து வருகின்றன.

கடந்த மார்ச் மாதம் பாட்னாவில் நடந்த விளையாட்டு நிகழ்ச்சி முடிந்து தேசியக்கீதம் பாடப்பட்ட போது நிதீஷ் குமார் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தார். அவரது முதன்மை செயலாளர் தீபக் குமார்தான் முதல்வர் நிதீஷ் குமாரை உஷார்படுத்தினார்.

அதோடு தேசிய கீதம் பாடிக்கொண்டிருந்தபோது நிதீஷ் குமார் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுடன் கைகுலுக்கினார்.

அதிகாரி தலையில் மரக்கன்றை நட்ட நிதீஷ் குமார்
அதிகாரி தலையில் மரக்கன்றை நட்ட நிதீஷ் குமார்

இதே போன்று பாட்னாவில் நடந்த மத்திய மாநில திட்ட தொடக்க விழாவில் பெண் ஒருவரின் தோளில் நிதீஷ் குமார் கைபோட்டார். அவரது இச்செயல்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளபோதிலும், பா.ஜ.க அவரது செயலை நியாயப்படுத்தி இருக்கிறது.

அதோடு நிதீஷ்குமாரின் உடல்நிலை குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி இருக்கின்றன. கடந்த மே மாதம் பாட்னாவில் நடந்த மரம் நடும் விழாவில் நிதீஷ் குமார் அதிகாரி ஒருவரின் தலையில் மரக்கன்றை நட்டார்.

இருமல் மருந்து: சிரப் எச்சரிக்கை முதல் மருந்தில்லா தீர்வுகள் வரை மருத்துவர் விளக்கம்

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள், சில நாட்களில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது, இந்திய அளவில் பெற்றோர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கி... மேலும் பார்க்க

அமெரிக்கா: ஆன்லைனில் தாய்ப்பாலை வாங்கி பருகும் பாடி பில்டர்கள் - என்ன காரணம் தெரியுமா?

அமெரிக்காவைச் சேர்ந்த சில தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் போக மீதி இருக்கும் பாலை ஆன்லைனில் தளங்களில் விற்று டாலர்களில் சம்பாதித்து வருகின்றனர். தாய்ப்பால் விற்பனை செய்து ஒரே நாளில்... மேலும் பார்க்க

கோன்பனேகா குரோர்பதி: 7 ஆண்டுக்கால முயற்சி; யூடியூப் மூலம் படித்து ரூ.50 லட்சம் வென்ற விவசாயி!

நடிகர் அமிதாப்பச்சன் நடத்தும் கோன்பனேகா குரோர்பதி நிகழ்ச்சி மிகவும் பிரபலம் ஆகும். இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமானோர் லட்சாதிபதியாகி இருக்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே இதில் பங்கெடுத்து கோடீஸ்வரராகி இருக்க... மேலும் பார்க்க

பயணிகளின் காலைப் பொழுதை இனிமையாக்கும் வாசனை அலாரம்! இது எங்கே தெரியுமா?

வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பல்வேறு யுத்திகள் ஹோட்டல் நிர்வாகம் கையாண்டு வருவதை கேள்விப்பட்டிருப்போம். ஆஸ்திரேலியாவில் ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ் ( Holiday inn Express) என்ற ஹோட்டல் நிறுவனம் தங்களது ஹோட்டல... மேலும் பார்க்க

பேயை விரட்டி சான்றிதழ் தரும் வினோத தொழில் - ஜப்பானில் பிரபலமாகி வரும் புதிய பிசினஸ்!

ஜப்பானில் புது வீடு வாங்குவதற்கு முன்பு அங்கு மற்ற வசதிகளை பரிசோதிப்பதற்கு முன்பு பேய் ஓட்டும் சடங்கு கட்டாயமாகி வருகிறது. பொதுவாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கும்போது அல்லது வாங்கும் போது அதன் வசதி, பா... மேலும் பார்க்க

Black Swan: இங்கிலாந்திலுள்ள நகரத்தை விட்டு விரட்டியடிக்கப்படும் அன்னப் பறவை; என்ன காரணம் தெரியுமா?

இங்கிலாந்தின் முக்கிய நகரில் சுற்றித் திரிந்த கருப்பு நிற அன்னப்பறவையை அந்த நகரத்தை விட்டு வெளியேற்ற உள்ளனர். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.இங்கிலாந்தின் ஸ்ட்ராட்ஃபோர்ட்-... மேலும் பார்க்க