செய்திகள் :

``சினிமா கவர்ச்சி போல வாக்குறுதி; ஏமாற்றுவது, திமுகவுக்கு கைவந்த கலை'' - செல்லூர் ராஜூ காட்டம்

post image

"என் தந்தை அறிவுஜீவி, முதல்வர் பதவியேற்றதும் நீட் தேர்வை ரத்து செய்துவிடுவார் என இப்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அப்போது பேசினார், ஆனால் ஒன்றுமே செய்யவில்லை." என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.

செல்லூர் ராஜு -செய்தியாளர் சந்திப்பு
செல்லூர் ராஜு -செய்தியாளர் சந்திப்பு

மதுரை மத்திய தொகுதியில் அதிமுக சார்பில் நடந்த திண்ணைப் பிரசாரத்தில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ, அப்பகுதி பெண்களிடம், 'நீட் தேர்வு விலக்கு, கல்வி கடன் ரத்து, மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதா' என கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியதா? எனக் கேட்டு படிவங்களில் பதில்களை எழுதி வாங்கினார்.

பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், "ஆட்சி நிறைவுபெறவுள்ள நிலையில் திமுக கொடுத்த 525 வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றவில்லை. திமுக ஆட்சியால் மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் உள்ளார்கள் என்பதை அவர்களிடம் பேசியதில் அறிய முடிகிறது.

சினிமாவில் கதை ஒரு பக்கம், கவர்ச்சி ஒரு பக்கம் இருக்கும். அதுபோல மக்களை ஏமாற்ற திமுக கவர்ச்சிகரமாக வாக்குறுதிகளை கொடுத்து வருகிறது. இப்போதும் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள், இதுபோன்ற திறமை திமுகவிற்கு மட்டுமே கைவந்த கலை."

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு

நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு அநீதி இழைத்ததே காங்கிரஸ்தான். ப.சிதம்பரத்தின் மனைவிதான் நீட் தேர்விற்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வாதாடினார். என் தந்தை அறிவு ஜீவி, முதல்வர் பதவியேற்றதும் நீட் தேர்வை ரத்து செய்துவிடுவார் என இப்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அப்போது பேசினார், ஆனால் ஒன்றுமே செய்யவில்லை.

அதிமுக ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை என முதல்வர் பெரிய நகைச்சுவை செய்து வருகிறார்." என்றவரிடம் தொடர்ந்து 'டிடிவி தினகரன், கரூர் சம்பவம் குறித்து' கேள்வி எழுப்பியபோது பதில் கூறாமல் புறப்பட்டார்.

500 ஆண்டுகளாக நடக்கும் துர்கா பூஜை: கலவரக் காடாக மாறிய ஒடிசா நகரம்; இணைய முடக்கம் - என்ன நடந்தது?

துர்கா பூஜை ஊர்வலம்24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதலமைச்சராக நவீன் பட்நாயக் இருந்து வந்த நிலையில், 2024-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இதனையடுத்து மோகன் சரண் மாஜி தலைமையில், ஒடிச... மேலும் பார்க்க

`அமெரிக்காவுடன் ஏன் இன்னும் வர்த்தக ஒப்பந்தம் முடிவாகவில்லை?' - ஜெய்சங்கர் விளக்கம்

இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தை நன்றாக நடந்து வருகிறது என்று இரு தரப்புகளிலிருந்தும் சிக்னல்கள் வந்துகொண்டு இருக்கின்றன.ஜெய்சங்கர் பேச்சு இந்த ந... மேலும் பார்க்க

பாமக: அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் - வெளியான தகவல்!

பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 86 வயதான ராமதாஸுக்கு 2013-ம் ஆண்டு ராமதாஸுக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை ... மேலும் பார்க்க

``உண்மையான காந்திய வழியில் போராடுங்கள்'' - சிறையிலிருந்து மக்களுக்கு செய்தி அனுப்பிய சோனம் வாங்சுக்

பல வருடங்களாக மாநில அந்தஸ்து கோரிக்கையை முன்வைத்து வரும் சட்டமன்றமில்லாத யூனியன் பிரதேசமான லடாக்கில் செப்டம்பர் 25-ல் அமைதிப் போராட்டம் வன்முறையாக வெடித்தது. காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற... மேலும் பார்க்க