Doctor Vikatan: குழந்தைகளுக்கு இருமல், ஆயுர்வேத இருமல் மருந்துகள் பாதுகாப்பானவைய...
பாமக: அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் - வெளியான தகவல்!
பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 86 வயதான ராமதாஸுக்கு 2013-ம் ஆண்டு ராமதாஸுக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொண்டுவந்தார். அந்த வகையில் நேற்று சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் இருக்கும் அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதயம் சார்ந்த பிரச்னைக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பரிசோதனைகள் முடிவடைந்த பிறகு இன்று மாலை ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றத் தகவலும் வெளியாகியிருக்கிறது. சமீபகாலமாக பா.ம.க-வின் உட்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடித்தது.
ராமதாஸ் அணி - அன்புமணி அணி என இரு அணிகளாக கட்சி பிரிந்திருக்கிறது. அதனால், தொடர் பயணங்கள், பொதுகூட்டங்கள் என தன் அணியைப் பலப்படுத்தும் விதமாக இருவரும் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில்தான், மருத்துவர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.