செய்திகள் :

``பா.ஜ.க-வின் C டீம் தான் விஜய்" - விமர்சிக்கும் அமைச்சர் ரகுபதி

post image

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,

"41 பேர் உயிரிழப்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விட்டுவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் என்ற எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். ஆனால், மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதியரசர் செந்தில்குமார் என்ன கூறினார் என்று அனைவருக்கும் தெரியும். அதிலிருந்து தமிழ்நாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைகுனிய விடவில்லை என்பது தெரிகிறது.

minister ragupathi
minister ragupathi

தமிழ்நாட்டை தலைகுனிய விட்டவர்கள் யார் என்பதை நீதிபதி கூறிய வார்த்தைகளில் இருந்து தெரியும். சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்று தமிழ்நாட்டில் இடம் கிடைக்காத பா.ஜ.க யாராவது ஆள் கிடைப்பார்களா என்று பார்த்தார்கள். நிச்சயமாக அவர்களுக்கு எந்த ஆதாயமும் கிடைக்காது. விஜய்க்கு பா.ஜ.க-வினர் ஆதரவு குறித்த கேள்விக்கு நான் ஏற்கெனவே கூறியதைப்போல் பா.ஜ.க-வின் C டீம் தான் விஜய். இதை நான் தான் முதல் முதலில் கூறியது. நீதிபதியை விமர்சனம் செய்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்வார்கள். யாரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. யாரையும் அனாவசியமாக கைது செய்ய வேண்டியதில்லை/ சட்டம் தன் கடமையை செய்யும்" என்றார்.

அன்று உங்களுக்கு தளபதி இன்று ஸ்டாலினுக்குத் தளபதி - கொதிக்கும் ஆர்.பி. உதயகுமார்

"தன்னை நம்பி வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களை அரசியல் அநாதை ஆக்கினார், அன்று உங்களுக்கு தளபதியாக இருந்தவர்கள் இன்று ஸ்டாலினுக்கு தளபதியாக இருக்கிறார்கள்" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, முன்... மேலும் பார்க்க

ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணம் - ராஜேஷ் குமார்

தேனி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மோடி அரசின் வாக்குத் திருட்டைக் கண்டித்து கையெழுத்து பிரசார ஆலோசனைக் கூட்டம் தேனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் சுற்றுப்பயணம் 3-வது முறையாக தேதி மாற்றம்; காரணம் இதுதான்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை மீட்போம், தமிழகத்தை காப்போம்’ என்ற தலைப்பில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 120 சட்டமன்ற தொகுதிகளைக் கடந்து சுற்றுப்பயணம் நடைபெற்று வரு... மேலும் பார்க்க

ஆரோவில்: `காவு கொடுக்கப்படும் விவசாயப் பண்ணை!’ - அம்பலமான சென்னை ஐஐடி ஒப்பந்தம்

வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள்இந்த நிலையில்தான், ஆரோவில்லில் `பசுமைத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்’ அமைக்க, ஆரோவில் அறக்கட்டளைத் தலைவரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி மற்றும் செயலாளர் ஜெயந்தி ... மேலும் பார்க்க

"சபரிமலை ஐயப்பன் சிலையை திருடாமல் விட்டதற்கு அரசுக்கு நன்றி"- காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் கிண்டல்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர் சிலைகளில் பொருத்தப்பட்டுள்ள தங்கம் பூசப்பட்ட கவசங்கள் பராமரிப்பு பணிக்காக கடந்த மாதம் ஏழாம் தேதி சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது. இதுகுறித்து கேரளா ஐகோர்ட் ... மேலும் பார்க்க

`எதிர்காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பிரதமரை நியமிக்கலாம்!' - என்ன சொல்கிறார் சீமான்?

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர் கடற்கரை பகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தார். மீனவர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினருடன் மீன்பிடிக்கும... மேலும் பார்க்க