செய்திகள் :

ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணம் - ராஜேஷ் குமார்

post image

தேனி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மோடி அரசின் வாக்குத் திருட்டைக் கண்டித்து கையெழுத்து பிரசார ஆலோசனைக் கூட்டம் தேனியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் ராஜேஷ் குமார் கலந்துகொண்டு தேனி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ராஜேஷ் குமார், " ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினரின் விருப்பம், காங்கிரஸ் தொண்டர்களின் எண்ணங்களை நாங்கள் பிரதிபலிக்கிறோம். காங்கிரஸ் தேசியக் கட்சி தமிழ்நாட்டை 30 ஆண்டுகள் ஆட்சி செய்தது.

1967 க்கு பிறகு ஆட்சியில் இல்லை. ஆனாலும் எங்களுக்கு அதிகப்படியான சீட்டுகள் தர வேண்டும், காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்க கூடிய அரசு வர வேண்டும் என்று எங்களுடைய அகில இந்திய தலைமையிடம் வலியுறுத்தி வருகிறோம். அவர்கள் அது குறித்து முடிவெடுப்பார்கள். கரூர் சம்பவம் மிகப்பெரிய துயர சம்பவம் அந்த மக்களுடைய துக்கத்தில் பங்கேற்றோம். மருத்துவமனையில் இருந்தவர்களையும் சந்தித்தோம்.

காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார்

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுத்தோம். தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது அதன் அறிக்கை வந்த பிறகுதான் அது குறித்து கருத்து தெரிவிக்கப்படும். கரூருக்கு வந்தது எல்லோரும் தவெகவினர் கிடையாது விஜய் என்ற நடிகரை பார்க்க வேண்டும் என்று வந்தவர்கள் தான் அதிகம்.

கரூர் சம்பவத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் கடமை தவெக கட்சிக்கும் உள்ளது, தமிழக அரசுக்கும் உள்ளது. கரூர் துயரச் சம்பவம் குறித்து முதலமைச்சரிடமும், தவெக தலைவர் விஜய்யிடமும் ராகுல் காந்தி கேட்டறிந்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இரங்கலைத் தெரிவித்து நிவாரண உதவி வழங்கியுள்ளார் ஆனால் இதில் அரசியலை புகுத்த விரும்பவில்லை என்றார்.

``பா.ஜ.க-வின் C டீம் தான் விஜய்" - விமர்சிக்கும் அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி,"41 பேர் உயிரிழப்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விட்டுவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் என்ற எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார். ஆனால், மதுரை உ... மேலும் பார்க்க

அன்று உங்களுக்கு தளபதி இன்று ஸ்டாலினுக்குத் தளபதி - கொதிக்கும் ஆர்.பி. உதயகுமார்

"தன்னை நம்பி வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களை அரசியல் அநாதை ஆக்கினார், அன்று உங்களுக்கு தளபதியாக இருந்தவர்கள் இன்று ஸ்டாலினுக்கு தளபதியாக இருக்கிறார்கள்" என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, முன்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் சுற்றுப்பயணம் 3-வது முறையாக தேதி மாற்றம்; காரணம் இதுதான்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை மீட்போம், தமிழகத்தை காப்போம்’ என்ற தலைப்பில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 120 சட்டமன்ற தொகுதிகளைக் கடந்து சுற்றுப்பயணம் நடைபெற்று வரு... மேலும் பார்க்க

ஆரோவில்: `காவு கொடுக்கப்படும் விவசாயப் பண்ணை!’ - அம்பலமான சென்னை ஐஐடி ஒப்பந்தம்

வெட்டி வீழ்த்தப்பட்ட மரங்கள்இந்த நிலையில்தான், ஆரோவில்லில் `பசுமைத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்’ அமைக்க, ஆரோவில் அறக்கட்டளைத் தலைவரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி மற்றும் செயலாளர் ஜெயந்தி ... மேலும் பார்க்க

"சபரிமலை ஐயப்பன் சிலையை திருடாமல் விட்டதற்கு அரசுக்கு நன்றி"- காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் கிண்டல்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர் சிலைகளில் பொருத்தப்பட்டுள்ள தங்கம் பூசப்பட்ட கவசங்கள் பராமரிப்பு பணிக்காக கடந்த மாதம் ஏழாம் தேதி சென்னைக்கு எடுத்து செல்லப்பட்டது. இதுகுறித்து கேரளா ஐகோர்ட் ... மேலும் பார்க்க

`எதிர்காலத்தில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பிரதமரை நியமிக்கலாம்!' - என்ன சொல்கிறார் சீமான்?

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள அமலிநகர் கடற்கரை பகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தந்தார். மீனவர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினருடன் மீன்பிடிக்கும... மேலும் பார்க்க