செய்திகள் :

தலையணை உறையா அல்லது பாக்டீரியா காலனியா? எச்சரிக்கும் மருத்துவர்!

post image

தூங்கும்போது தலையணை எந்த அளவுக்கு இன்றியமையாததோ, அதேபோல் அதன் தூய்மையும் இன்றியமையாதது.

அமெரிக்காவின் நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், ஒரு வாரம் துவைக்காமல் பயன்படுத்தப்படும் தலையணை உறைகளில், கழிப்பறை சீட்டைவிட 17 ஆயிரம் மடங்கு அதிகமாக கிருமிகள் சேர்ந்துவிடுகின்றன என்பது தெரியவந்துள்ளது. எனவே, இவ்வளவு பாக்டீரியாக்கள் ஏன் சேர்கின்றன? இதனால் ஏதேனும் பிரச்சனை வருமா என சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் ராஜேஷ் அவர்களிடம் கேட்டோம்.

தலையணை உறை
தலையணை உறை

’’பெட் மற்றும் பெட்ஷீட்டிலும் பாக்டீரியாக்கள் இருக்கும் என்றாலும், தலையணையில் பாக்டீரியாக்கள் வளர்வதற்கு ஏதுவான ஆர்கானிக் மேட்டர் (Organic matter) அதிகமாக இருக்கும். பாக்டீரியாக்கள் வருவதற்கு இந்த ஆர்கானிக் மேட்டர்தான் அவசியம்.

மனிதர்கள் உறங்கும்போது தலையில் இருந்து வழியும் எண்ணெய் போன்ற (Sebaceous secretion) திரவங்களும், திரும்பிப் படுக்கும்போது வாயிலிருந்து வெளிவரும் எச்சிலும் இந்த பாக்டீரியாக்கள் வளர்வதற்குத் தேவையான ஆர்கானிக் மேட்டராக அமைகிறது.

மனித எச்சிலில் ஏற்கெனவே பாக்டீரியாக்கள் அதிகமாக இருக்கும். அது தலையணை உறைகளின் மீது தொடர்ந்து படும்போது, பாக்டீரியாக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும்.

 டாக்டர் ராஜேஷ்.
டாக்டர் ராஜேஷ்.

பாக்டீரியாக்களில் வெவ்வேறு இனங்கள் இருக்கின்றன. நீண்ட நாள் பாக்டீரியாக்கள் படியத் தொடங்கினால் பயோஃபிலிம் (biofilms) உருவாகத் தொடங்கும்.

பயோஃபிலிம் என்பது பாக்டீரியாக்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு காலனி போல வாழத் தொடங்கும்.

அதில் ஒரேவிதமான பாக்டீரியாக்களும் இருக்கலாம், பலவிதமான பாக்டீரியாக்களும் இருக்கலாம். பாக்டீரியாவைத் தவிர மற்ற மைக்ரோ ஆர்கானிசங்களும் அடுக்கடுக்காக வாழ்ந்துகொண்டிருக்கும்.

தினமும் தூய்மைப்படுத்தி அல்லது மாற்றிப் பயன்படுத்தலாம். அவ்வாறு செய்வது சிரமமாக இருக்கும்பட்சத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது தூய்மைப்படுத்திப் பயன்படுத்துவது பாக்டீரியாக்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்க உதவும்.

பயோஃபிலிம் படிந்துவிட்டால் அவற்றை நீக்குவது சிரமம். இந்த வகையான பாக்டீரியாக்கள் கடுமையான சூழ்நிலைகளையும் தாங்கி உயிர் வாழக்கூடியவை.

இரண்டு வாரங்கள் வரையில் தலையணை உறை துவைக்காமல் இருந்தால் இவ்வகை பாக்டீரியாக்கள் உருவாகத் தொடங்கிவிடும், கவனம்.

குழந்தைகளுக்கு மூக்கு மற்றும் வாயைச் சுற்றி சிவப்பு நிறப் புண்கள் ஏற்படும். தோல் ஒவ்வாமை, நுகர்தல் மூலமாக வரும் ஒவ்வாமை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

ஏற்கெனவே இந்தப் பிரச்னைகள் இருந்தால், அதிகமாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தலையணை உறைகளையும் படுக்கைகளையும் முறையாகத் தூய்மைப்படுத்தி வெயிலில் நன்றாகக் காய வைத்துப் பயன்படுத்துங்கள்’’ என்கிறார் டாக்டர் ராஜேஷ்.

Doctor Vikatan: குழந்தைகளுக்கு இருமல், ஆயுர்வேத இருமல் மருந்துகள் பாதுகாப்பானவையா?

Doctor Vikatan: இருமல் மருந்து குடித்த பல குழந்தைகள் மரணமடைந்தது குறித்து சமீபத்தில் செய்தியில் பார்த்தோம். குழந்தைகளுக்கு இருமல் வந்தால் அதை எப்படி அணுக வேண்டும். ஆயுர்வேத இருமல் மருந்து கொடுக்கலாமா?... மேலும் பார்க்க

பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு காப்பர்-டி பாதுகாப்பானதா? - தவறான நம்பிக்கைகளும் உண்மைகளும்!

பிரேசிலில் தனது தாயின் கருத்தடை சாதனத்தை (காப்பர்-டி) கையில் ஏந்தியபடி ஒரு குழந்தை பிறந்து உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிகழ்வு மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தையும் சமூக ஊடகங்களில் விவாதங்களை... மேலும் பார்க்க

Doctor Vikatan: இரவில் சோறு, வாழைக்காய், உருளைக்கிழங்கு சாப்பிட்டு படுத்தால் உடல்வலி வருகிறது ஏன்?

Doctor Vikatan: என் வயது 44. இரவில் சோறு, வாழைக்காய், உருளைக்கிழங்கு போன்றவற்றைச் சாப்பிட்டுப் படுத்தால், மறுநாள் காலை எனக்கு கடுமையான உடல்வலிஏற்படுகிறது. நெஞ்சுப்பகுதி, தோள்பட்டையில் வலி அதிகமிருக்கி... மேலும் பார்க்க

Doctor Vikatan: சித்த மருந்துகளில் போலி; தரமான மருந்துகளை எங்கே வாங்குவது, எப்படி உறுதிசெய்வது?

Doctor Vikatan: சித்த மருந்துகளை வாங்கும்போது, பல கடைகளிலும் போலியான மருந்துகளைக் கொடுத்து ஏமாற்றுவதாகக் கேள்விப்படுகிறோம். அரசு அங்கீகாரம் பெற்ற மையங்களில் மட்டுமே சித்த மருந்துகளை வாங்க வேண்டுமா? அவ... மேலும் பார்க்க

Exercise: "உடற்பயிற்சி நல்லதுதான்; ஆனால்" - இந்த 3 விஷயங்களில் கவனமா இருங்க!

உடலில் நோய் வராமல் இருக்கவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும்தான் உடற்பயிற்சி செய்கின்றோம். கூடவே, உடல் எடையைக்குறைக்கவும் உடற்பயிற்சி செய்கிறோம். அப்படிப்பட்ட உடற்பயிற்சியைச் சரியான முறையில் அல்லது சூழல... மேலும் பார்க்க

Doctor Vikatan: `குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும்வரை கருத்தரிக்காது' என்கிறார்களே, அது உண்மையா?

Doctor Vikatan: எனக்குக் குழந்தை பிறந்து 6 மாதங்கள் ஆகின்றன. தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். தாய்ப்பால் கொடுக்கும் வரை பீரியட்ஸ் வராது என்றும், அந்தக் காலத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டால் கரு... மேலும் பார்க்க