செய்திகள் :

"உண்மையாக இரு தம்பி, நிகழ்ச்சியை வென்று வா"- பிக் பாஸ் FJ குறித்து ஹிப்ஹாப் தமிழா ஆதி

post image

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக நேற்று (அக்.5) தொடங்கியிருக்கிறது.

கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார்.

சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள், யூ-டியூபர்கள் மொத்தம் 20 பேர் கலந்துகொண்டிருக்கின்றனர்.

 Bigg Boss Season 9 Contestants
Bigg Boss Season 9 Contestants

சுழல் (சீசன் 1) வெப் சீரிஸ், அரண்மனை 4 உள்ளிட்ட சில திரைப்படங்களில், நடித்த FJ-வும் கலந்து கொண்டிருக்கிறார்.

சிறப்பாக பீட் பாக்ஸ் செய்யும் FJ குறித்து இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " ஒரு சிறுவனாக கையில் மைக் வைத்திருந்த காலத்தில் இருந்தே எனக்கு FJ-வை தெரியும்.

அவனுடைய மிகப்பெரிய கனவு பீட்‌பாக்சிங்தான். அவன் அண்டர்கிரவுண்ட் ட்ரைப்பில் பீட்‌ பாக்சிங் பண்ணுவான். சில சமயம் ரேப் பாடுவான்.

அவனைப் பார்த்தவுடனேயே எனக்கு இந்தப் பையன் ஒரு உண்மையான போராளி எனத் தோன்றியது.

ஒரு நாள் பெரிய மேடைகளில் கலக்குவான் என்று நம்பிக்கை இருந்தது.

ஒரு நாள் திடீரென்று வெப் சீரிஸ் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் அவன் நடித்திருந்தான்.

 FJ
FJ

நான் உடனே அவனை அழைத்து, 'தம்பி இது எப்போடா?' என்று கேட்டேன். அதற்கு அவன், “அண்ணா, நான் நடிகனாகணும்'ன்னு சொன்னான். மீண்டும் அவன் போராட்டம் தொடர்ந்தது. அதுதான் FJ.

எப்போதும் வாழ்க்கையில் ஒரு படி மேலே போக முயற்சிக்கும் உண்மையான போராளி. இப்போது அவன் பிக் பாஸிற்குள் கால் வைக்கிறான். உண்மையாக இரு தம்பி.

நான் உன்னிடம் பார்த்த திறமையை இந்த உலகமும் பார்க்கட்டும். வாழ்த்துக்கள், நிகழ்ச்சியை வென்று வா" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

Bigg Boss 9: 'நீங்க Water melon ஸ்டாரா இருங்க இல்ல வேற யாரா வேணா இருங்க'- திவாகர், கெமி வாக்குவாதம்

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக நேற்று (அக்.5) தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள்... மேலும் பார்க்க

Bigg Boss 9: "வாய்ஸ் ரைஸ் பண்ணாதீங்க; நான் கெட்டவனாவே இருக்கேன் "- கெமி, கம்ருத்தின் வாக்குவாதம்!

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக நேற்று (அக்.5) தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். சோஷியல் மீடியா கன்டென்ட் கிரியேட்டர்கள், சீரியல் நடிகர்கள்... மேலும் பார்க்க

BB Tamil 9: ‘அடடே, இவங்களா! அப்ப பிரச்னைக்கு பஞ்சமே இருக்காது' - தொடக்க விழாவின் மேக்ரோ பார்வை

விகடன்.காம் வாசக தோழமைகளுக்கு வணக்கம். இன்னொரு பிக் பாஸ் சீசனின் மூலமாக உங்களையெல்லாம் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. BB Tamil 9 Grand Launchஇந்த 9வது சீசனில் 10 ஆண்கள், 10 பெண்கள் என்று மொத்த... மேலும் பார்க்க

Bigg Boss 9: விக்கல்ஸ் விக்ரம், மீனவப் பெண் சுபிக்‌ஷா குமார்; போட்டியாளர்கள் குறித்த தகவல்கள்

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக நேற்று தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். பிக் பாஸ் Bigg Boss Tamil 9: பிகில் நடிகை, டான்ஸர், கெமி; இந்த சீச... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 9: பிகில் நடிகை, டான்ஸர், கெமி; இந்த சீசன் போட்டியாளர்களின் பயோ!

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக நேற்று தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். வருடந்தோறும் பிக் பாஸ் வீட்டை மாற்றியமைப்பதுபோல, இந்த வருடத்தின் வ... மேலும் பார்க்க

BB Tamil 9: CWC டைட்டில் வின்னர், சீனியர் இயக்குநர் - போட்டியாளர்களின் விவரம்!

பிக் பாஸ் சீசன் 9 கோலாகலமாக இன்று தொடங்கியிருக்கிறது. கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டு தொகுப்பாளராக விஜய் சேதுபதி வந்திருக்கிறார். வருடந்தோறும் பிக் பாஸ் வீட்டை மாற்றியமைப்பது போல, இந்த வருடத்தின் வ... மேலும் பார்க்க