செய்திகள் :

STR 49: "One Name, One Power; நாளை காலை 8 மணிக்கு"- கலைப்புலி தாணு சொன்ன அப்டேட்

post image

வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வட சென்னையைக் களமாகக் கொண்டு திரைப்படம் உருவாக இருக்கிறது. சிலம்பரசனை வைத்து டெஸ்ட் ஷூட் ஒன்றை நடத்தியிருக்கிறார் வெற்றிமாறன்.

வெற்றிமாறன், சிம்பு
வெற்றிமாறன், சிம்பு

கடந்த செப்டம்பர் 4ம் தேதி வெற்றிமாறன் பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பாளர் தாணு, தனது எக்ஸ் வலைத்தளத்தில், "வெற்றி நடை வீர நடை வெல்லும் இவன் படை அகவை 50-ல் வெற்றி மாறனின் புகழ் எட்டுத் திக்கும் எதிரொலிக்க பிறந்த நாள் வாழ்த்துகள்" என வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'STR 49' படத்தின் அப்டேட்டை வீடியோவோடு வெளியிட்டிருந்தார்.

விகடன், 'டிஜிட்டல் விருது விழா' மேடையிலும் 'Most Celebrated Hero in Digital' விருதைப் பெற்ற சிம்பு வீடியோ மூலம் பேசுகையில், "STR 49 அப்டேட் வெற்றிமாறன் சார்கிட்ட கேளுங்க, ப்ரோமோ வீடியோவெல்லாம் ரெடியா இருக்கு, எப்போ வெளியிடுவார்னு தெரியல" என்றார்.

இதையடுத்து தற்போது, கலைப்புலி எஸ்.தாணு, "சிம்புவின் ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க STR & வெற்றிமாறன் படத்தின் முன்னோட்டம் திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியிடுவது ரசிகர்களின் இத்தனை நாள் பொறுமைக்கு ஈடுசெய்யும் நிகழ்வாக அமையும்" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இப்போது, 'One Name… One Power… The title rises tomorrow@ 8.09AM" என STR & வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் 'STR 49' படத்தின் டைட்டில் நாளை காலை 8 மணிக்கு வெளியாகும் என்று ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. இதோடு சேர்த்து 'PROMO' வீடியோ ஒன்றும் வெளியாகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Big Boss Tamil 9:``இவங்க இரண்டுபேரும்தான் பிக் பாஸ்ல ஜெயிப்பாங்க" - பிக் பாஸ் குறித்து கூல் சுரேஷ்

தமிழ் சினிமாவின் காமெடி நடிகரும், பிக் பாஸ் தமிழ் சீசன் 7-ல் போட்டியாளராக இருந்தவருமான கூல் சுரேஷ், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து பலமுறை விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இன்று சென்னையில் குடும்ப அட்டைப் ... மேலும் பார்க்க

Bison:``இதுவரைக்கும் ரெண்டு படம் நடிச்சிருக்கேன்; `பைசன்'தான் என்னுடைய முதல் படம்" - துருவ்

மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளி ரிலீஸாக திரைக்கு வருகிறது. துருவ் விக்ரம், அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி எனப் பலரும் படத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு நிவாஸ் ... மேலும் பார்க்க

``தனுஷ் இளம் வயதில் முதிர்ந்த படைப்பாற்றல் திறன் கொண்டிருக்கிறார்'' - `இட்லி கடை' குறித்து சீமான்

டான் பிக்சர்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்துள்ள படம் 'இட்லி கடை'. இந்தப் படத்தில் தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த... மேலும் பார்க்க

ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிகப் பயணம் - வைரலாகும் படங்கள்

தமிழ் திரை நட்சத்திரம் ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. திரைப்பட பணிகளில் இருந்து சற்று ஓய்வெடுத்திருக்கும் ரஜினிகாந்த், நெருங்கிய நண்பர்களுடன் இந... மேலும் பார்க்க