செய்திகள் :

siraj: "ஒரு மேட்ச்சில் ஹீரோ, அடுத்ததில் ஜீரோ" - தோனி சொன்ன அந்த அட்வைஸ்!

post image

இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ், சர்வதேசப்போட்டிகளில் விளையாடத் தொடங்கிய காலகட்டத்தில் தோனி வழங்கிய குட்டி அறிவுரை, எப்படி அவர் வெற்றியிலும் தோல்வியிலும், அதிக விமசர்சனங்களையும் பாராட்டுகளையும் எதிர்கொள்ளும்போது பணிவாக இருக்கக் கற்றுத்தந்தது எனக் கூறியிருக்கிறார்.

siraj

இன்று இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளராகத் திகழும் சிராஜ் அவரது கரியரின் ஆரம்பகாலத்தில் அதிகம் நகைக்கப்பட்டார். குறிப்பாக 2018ம் ஆண்டு ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக விளையாடியபோது அதிகப்படியான ட்ரோல்களை எதிர்கொண்டார். சிலர் அவரது தந்தையின் தொழிலை வைத்துகூட கேலி செய்தனர்.

இவற்றை எதிர்கொண்டது குறித்து, "இந்திய அணியில் நான் சேர்ந்தபோது தோனி என்னிடம், 'மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைக் கண்டுகொள்ளாதே. நீ நன்றாக விளையாடும்போது மொத்த உலகமும் உன்னுடன் இருக்கும். நீ சரியாக விளையாடவில்லை என்றால் மொத்த உலகமும் தவறாக பேசும்' என்றார்.

Dhoni, Siraj

ட்ரோலிங் மோசமானது. நாம் நன்றாக விளையாடும்போது ரசிகர்களும் ஒட்டுமொத்த உலகமும் 'சிராஜை போல வேறொரு பௌளர் கிடையாது' என்பார்கள். அடுத்தபோட்டியே சரியாக விளையாடவில்லை என்றால், 'உன் அப்பாவுடன் சேர்ந்து ஆட்டோ ஓட்ட போ' என்பார்கள் - இதில் என்ன விஷயம் இருக்கிறது?

நீங்கள் ஒரு மேட்சில் ஹீரோவாக இருப்பீர்கள் அடுத்தப்போட்டியிலேயே ஜீரோ ஆகிவிடுவீர்கள். மக்கள் அவ்வளவு வேகமாக மாறிவிடுகிறார்களா? நான் எனக்குள் முடிவு செய்தேன். எனக்கு வெளிப்புறத்தில் பாராட்டும் கருத்துக்களும் வேண்டாமென நினைத்தேன். என் குடும்பமும் என் அணியின் சக வீரர்களும் என்ன நினைக்கிறார்கள் என்பதே முக்கியம் என முடிவு செய்தேன், இவர்கள்தான் முக்கியமானவர்கள். மற்றவர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்கு கவலைக் கிடையாது." என்றார் சிராஜ்.

IND vs PAK: கைகொடுக்காமல் வந்த ஹர்மன்பிரீத்; இடையில் நிறுத்தப்பட்ட போட்டி - வெற்றியை நோக்கி இந்தியா

இந்தியா பாகிஸ்தான் இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த ஆண்களுக்கான ஆசியக் கோப்பையில் இரு நாடுகளுக்கும் இடையிலான போட்டியின்போது கேப்டன்கள் கை கொடுத்து... மேலும் பார்க்க

சுப்மன் கில்லுக்கு கொடுக்கும் 'அதீத' அங்கீகாரம் - சில கேள்விகள்

இந்தியா ஆஸ்திரேலியா இடையே வருகின்ற 19ம் தேதி தொடங்கவுள்ள சுற்றுப்பயணத்துக்கான அணி நேற்று (அக்டோபர் 4) அறிவிக்கப்பட்டது. தற்போது நடைபெற்றுவரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனா... மேலும் பார்க்க

``எனக்கு ஒருபோதும் அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை" - தோனி குறித்து வருந்தும் சூர்யகுமார் யாதவ்

2024-ல் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கோலி, அக்சர் படேலின் பேட்டிங், பும்ரா, ஹர்திக்கின் பவுலிங் என இந்தியாவின் வெற்றிக்கு அத்தனை காரணிகள் இருந்தாலும், 2007-ல் ஸ்ரீசாந்த் செய்ததைப் போல கடைசி நொ... மேலும் பார்க்க

ரோஹித்தின் கேப்டன்சியை பறித்தது ஏன்; அகர்கார் கூறும் காரணம் என்ன?

இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் நீண்ட நாள்களாக உலாவிக்கொண்டிருந்த, `அடுத்த ஒருநாள் அணி கேப்டன் கில்' என்ற பேச்சை உறுதிப்படுத்தி ரோஹித்தின் கேப்டன்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது அஜித் அகர்கார் தல... மேலும் பார்க்க

ஜடேஜாவின் ODI கரியருக்கு முற்றுப்புள்ளி? ஆஸி., தொடரில் ஏன் தேர்வாகவில்லை; அகர்கார் என்ன சொல்கிறார்?

இந்திய அணி அக்டோபர் பிற்பாதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடவிருக்கிறது.அக்டோபர் 19-ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொட... மேலும் பார்க்க

Ind vs Aus: கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் நீக்கம்; ODI அணிக்கும் கேப்டனாகும் கில்; முழு விவரம்

இந்திய அணி கடந்த 2024-ல் டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர்.அதைத்தொடர்ந்து, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்க... மேலும் பார்க்க