கரூர்: 'உடல் பிரச்னையை தீர்க்கிறேன்' - இளம்பெண்ணிடம் ரூ. 5.50 லட்சம் ஏமாற்றிய போ...
15 மனைவிகள்; 30 குழந்தைகள்; விமான நிலையத்தையே வியப்படைய வைத்த தென்னாப்பிரிக்க மன்னர்!àà
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி விமான நிலையத்தில் கடந்த ஜுலை மாதம் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி இருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் எஸ்வாட்டினி என்ற சிறிய நாடு ஒன்று உள்ளது.
1986 முதல் இந்த நாட்டை மூன்றாம் எம்ஸ்வாதி என்ற மன்னர் ஆட்சி செய்து வருகிறார்.
உலகின் பணக்கார மன்னர்களில் ஒருவராக இருக்கும் இவரின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர் என்று கூறப்படுகிறது.

இவர் ஒரு முறை எஸ்வாட்டினி நாட்டில் இருந்து தனியார் ஜெட் விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.
அப்போது பாரம்பரிய உடையுடன் எம்ஸ்வாதி மன்னர் அவரின் 15 மனைவிகள், 30 குழந்தைகள், 100 வேலையாட்களுடன் விமானத்தில் இருந்து இறங்கி இருக்கிறார்.
இதனை அங்கிருக்கும் விமான நிலைய ஊழியர்கள் கண்டு வியந்திருக்கிறார்கள்.
இதுதொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
பொருளாதார ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கத்துடன் தான் அவர் அபுதாபி சென்றிருக்கிறார்.
ஆனால், அவரது வாழ்க்கை முறை உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
மூன்றாம் எம்ஸ்வாதி மன்னரின் தந்தை, 70-க்கும் மேற்பட்ட மனைவிகளையும், 210 குழந்தைகளையும், 1000-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகளையும் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.