கமல் ஹாசன்: விஜய்க்கு அட்வைஸ்... - பத்திரிகையாளர் கேள்விக்கு பளிச் பதில்
300 ஆண்டு பழைமையான ஸ்பானிய கப்பல்; கடலுக்கு அடியில் கிடைத்த ரூ.8 கோடி மதிப்பிலான நாணயங்கள்!
அமெரிக்காவின் ஃபுளோரிடா கடற்கரைக்கு அப்பால், 30 ஆண்டுகள் பழைமையான ஸ்பானிஷ் கப்பல் சிதைவிலிருந்து சுமார் 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 8 கோடி) மதிப்புள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை தொழில்முறை டைவர்ஸ் குழு மீட்டெடுத்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு ஒரு புதையலாக கருதப்படுகிறது.
ஃபுளோரிடாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த கடற்கரையில் பல ஆண்டுகளாக மூழ்கிய கிடந்த கப்பலின் சிதைவுகளில் இருந்து புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீட்டெடுக்கப்பட்ட இந்த நாணயங்கள் வெறும் பொக்கிஷமாக மட்டுமல்லாமல் அவை கடந்த கால வாழ்க்கை பற்றி சொல்லும் வரலாற்று சான்றுகளாகவும் பார்க்கப்படுகிறது.
இந்த நாணயங்களில் பெரும்பாலானவை மெக்சிகோ, பெரு, பொலிவியா போன்ற ஸ்பானிஷ்ய காலனி நாடுகளில் தயாரிக்கப்பட்டவை ஆக உள்ளன. பல நாணயங்களில் அவை அச்சிடப்பட்ட ஆண்டு மற்றும் சின்னங்கள் தெளிவாக தெரிவதால் இது வரலாற்று ஆசிரியர்களுக்கு பெரும் மதிப்பாக அமைந்துள்ளது.
மீட்பு பணியை மேற்கொண்ட நிறுவனத்தின் செயல்பாட்டு இயக்குனர் கூறுகையில் ”இந்த கண்டுபிடிப்பின் மதிப்பு அந்த டாலரில் இல்லை ஒவ்வொரு நாணயமும் ஒவ்வொரு வரலாறாக பார்க்கிறோம்.
ஒரே மீட்பின் போது ஆயிரம் நாணயங்கள் கண்டுபிடிப்பது மிகவும் அரிதான ஒன்றாகவே பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
எடுக்கப்பட்ட புதையல் யார் வைத்துக் கொள்வது?
ஃபுளோரிடா மாநில சட்டத்தின் படி, மாநிலத்திற்கு சொந்தமான நீருக்கடியில் காணப்படும் எந்த ஒரு வரலாற்றுப் பொருள்களும் புதையல்களும் மாநிலத்துக்கே சொந்தமானது. இருந்தாலும் உரிமம் பெற்ற நிறுவனங்கள் குறிப்பிட்ட ஒப்பந்த அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கின்றன.
அதன்படி மீட்கப்படும் தொல்பொருள்களின் 20 சதவீதம் பொது கண்காட்சி அல்லது ஆராய்ச்சிக்காக மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும். மீதிமுள்ளவை உரிமத்தில் உள்ள விதிகளின்படி மீட்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.