செய்திகள் :

கமல் ஹாசன்: விஜய்க்கு அட்வைஸ்... - பத்திரிகையாளர் கேள்விக்கு பளிச் பதில்

post image

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன், கரூர் த.வெ.க பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "முதல்வர் தரமான பண்புள்ள தலைமை எப்படி செயல்பட வேண்டுமோ அதற்கான எல்லா குணாதிசயங்களையும் காட்டியிருக்கிறார். அது எனக்குப் பெருமையாகவும் இருக்கிறது, அதற்கு நன்றியும் சொல்ல வேண்டும்.

karur Tragedy
karur Tragedy

எந்த அரசாங்கமும் பொறுப்பை ஏற்கும். ஆனால் இங்கு என்ன நடந்தது என்பது சட்டத்தின் கையில் உள்ளதால் அதைப்பற்றி அதிகம் பேச வேண்டாம். அதைக் கமென்ட் அடிக்கவும் வேண்டாம். ஏனென்றால் எல்லோருமே கஷ்டத்தில் இருக்கிறோம். எல்லோருக்கும் மனவருத்தம் உள்ளது.

சொல்ல வேண்டியவர்களுக்கு நன்றி சொல்வோம். பத்திரிகையாளர்கள் வெளிச்சம்போட்டுக் காட்டியதால்தான் உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறது.

ஆனால் இந்த காலகட்டத்தில் உண்மைக்கு ஒரு பொருள் இல்லை. யார் உண்மை எனக் கேட்க வேண்டியதாக இருக்கிறது. உண்மை பல பார்வைகளில் பல பொருள்களில் தெரியும் சூழலில் அதைக் கண்டுபிடிக்க வேண்டிய நிர்பந்தத்தில் கோர்ட்டும் இருக்கிறது போலீசும் இருக்கின்றனர்.

கரூர் விஜய் பிரசாரம்
கரூர் விஜய் பிரசாரம்

போலீசுக்கு நன்றி சொல்ல வேண்டிய சூழலில் அவர்களைக் குற்றம் சொல்லாதீர்கள். நானும் இதுபோல வந்திருக்கிறேன்.

போலீஸ் அவர்கள் கடமையைச் செய்துள்ளனர். உயிர் சேதம் இத்துடன் நின்றதுக்கு நன்றி சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்." என்றார்.

எதிர்க்கட்சிகள் பாதுகாப்பு குறைபாடுதான் காரணம் எனக் கூறுவது பற்றிக் கேள்வி எழுப்பியபோது, "தமிழ்நாட்டின் குடிமகனாக எனக்கு என்ன நடந்தது எனத் தெரியும். இதில் சைடு எடுக்காதீர்கள், எடுப்பதாக இருந்தால் மக்கள் சைடு எடுங்க." என்றார்.

மேலும் விஜய்க்கு நீங்கள் சொல்ல விரும்பும் அட்வைஸ் எனக் கேட்டபோது, "அதைக் கோர்ட்ல சொல்லுவாங்க" என பதிலளித்துப் புறப்பட்டார்.

Kantara: "தர்மத்தையும் துளு நாட்டின் கலாச்சாரத்தையும் சேர்த்துள்ளார் ரிஷப் ஷெட்டி" - அண்ணாமலை ரிவ்யூ

இந்தியா முழுவதும் ஹிட் ஆகியிருக்கும் காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் இன்று சமூக வலைதளத்தில் முக்கிய பேசுபொருளாக இருக்கிறது. விமர்சகர்கள், ரசிகர்கள், திரையுலகினரைக் கடந்து பல துறைகளைச் சேர்ந்தவர்கள் படக்... மேலும் பார்க்க

நீதிபதி கவாய் மீது தாக்குதல்: "இதை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது" - ஸ்டாலின் கண்டனம்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தலைமை நீதிபதியைத் தாக்க முயன்ற அந்த நபர், "சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறு... மேலும் பார்க்க

'கரூர் வழக்கில் விஜய்யை குற்றவாளி ஆக்குவதா? தவெகவை திமுக நசுக்க பார்க்கிறது' - அண்ணாமலை

பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கரூர் விவகாரத்தில்சமூக வலைதளங்களில் நீதிபதியை விமர்சிப்பது துரதிஷ்டவசமானது. நீதிபதி குறித்து... மேலும் பார்க்க

``இது தவறோ, அலட்சியமோ அல்ல; பெரும் அரசியல் குற்றச்செயல்" -காங்கிரஸ் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சமீபத்தில் பீகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் 22.7 லட்சம் மக்களின் பெயர்களைத் திட்டமிட்டு நீக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. கடந்த 2020 தேர்தலின்போது காங்கிரஸ் நெர... மேலும் பார்க்க

``சினிமா கவர்ச்சி போல வாக்குறுதி; ஏமாற்றுவது, திமுகவுக்கு கைவந்த கலை'' - செல்லூர் ராஜூ காட்டம்

"என் தந்தை அறிவுஜீவி, முதல்வர் பதவியேற்றதும் நீட் தேர்வை ரத்து செய்துவிடுவார் என இப்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அப்போது பேசினார், ஆனால் ஒன்றுமே செய்யவில்லை." என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ... மேலும் பார்க்க

500 ஆண்டுகளாக நடக்கும் துர்கா பூஜை: கலவரக் காடாக மாறிய ஒடிசா நகரம்; இணைய முடக்கம் - என்ன நடந்தது?

துர்கா பூஜை ஊர்வலம்24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதலமைச்சராக நவீன் பட்நாயக் இருந்து வந்த நிலையில், 2024-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது. இதனையடுத்து மோகன் சரண் மாஜி தலைமையில், ஒடிச... மேலும் பார்க்க