செய்திகள் :

ஜடேஜாவின் ODI கரியருக்கு முற்றுப்புள்ளி? ஆஸி., தொடரில் ஏன் தேர்வாகவில்லை; அகர்கார் என்ன சொல்கிறார்?

post image

இந்திய அணி அக்டோபர் பிற்பாதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடவிருக்கிறது.

அக்டோபர் 19-ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய தொடருக்கான அணியை இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கார் இன்று வெளியிட்டார்.

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி vs ஆஸ்திரேலியா
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி vs ஆஸ்திரேலியா

அப்பட்டியலில், ஒருநாள் போட்டி அணிக்கான கேப்டன்சி ரோஹித்திடமிருந்து சுப்மன் கில்லிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

அதேசமயம், கடைசியாக இந்தியா ஆடிய ஒருநாள் தொடரான சாம்பியன்ஸ் டிராபியில் இறுதிப்போட்டியில் வின்னிங் ஷாட் அடித்தவரும், இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டதால், வெஸ்ட் இன்டீஸுக்கெதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் துணைக் கேப்டனாக சதமடித்து அசத்திவருபவருமான ஜடேஜாவின் பெயர் ஆஸ்திரேலிய தொடரில் இடம்பெறவில்லை.

சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வுபெற்றிருந்தாலும் தற்போது நல்ல ஃபார்மில் ஆடிக்கொண்டிருக்கும் ஜடேஜாவை தேர்வு செய்யாதது, ஒருநாள் கிரிக்கெட்டில் அவரின் எதிர்காலம் என்ன என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

இந்த நிலையில், ஜடேஜா தேர்வாகாதது குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்திருக்கும் இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கார், "இப்போதைக்கு இரண்டு இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்வது சாத்தியமில்லை.

அவர் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அணியில் இடங்களுக்கு சில போட்டிகள் இருக்கும். அதற்காக அவர் ரேடாரில் இல்லை என்பதாகாது.

இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கார்
இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கார்

அவர் சாம்பியன்ஸ் டிராபி அணியில் இருந்தார். ஏனெனில், அங்குள்ள பிட்ச் கண்டிஷன் காரணமாக கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்களை எடுத்தோம்.

தற்போது அணியில் சமநிலையைச் செய்ய வாஷிங்க்டன் - குல்தீப் ஆகியோருடன் ஒருவரை மட்டுமே கொண்டுசெல்ல முடியும்.

ஆஸ்திரேலியாவில் இதற்கு மேல் கூடுதலாக நமக்கு ஒருவர் வேண்டும் என்று நினைக்கவில்லை. இது வெறும் மூன்று போட்டிகள் கொண்ட குறுகிய தொடர்.

எல்லோரையும் நீங்கள் கொண்டு செல்ல முடியாது. துரதிர்ஷ்டவசமாக தற்போது அவர் தேர்வாகவில்லை. அதைத்தாண்டி இதில் வேறெதுவும் இல்லை" என்று விளக்கினார்.

ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜா

3 போட்டிகள் கொண்ட குறுகிய தொடருக்கு எல்லோரையும் கொண்டு செல்ல முடியாது அகர்கார் கூறுகிறார்.

அப்படியெனில், அடுத்து டிசம்பரில் தென்னாப்பிரிக்கா, ஜனவரியில் நியூசிலாந்து, ஜூலையில் இங்கிலாந்து என இந்தியாவின் அடுத்த மூன்று ஒருநாள் தொடர்களும் 3 போட்டிகள் கொண்ட குறுகிய தொடர்தான். எனவே, அதிலும் ஜடேஜா புறக்கணிப்படுவாரா?

ஜடேஜாவை தேர்வுசெய்யாதது குறித்து உங்களின் கருத்தை கமெண்ட்டில் பதிவிடவும்.

ரோஹித்தின் கேப்டன்சியை பறித்தது ஏன்; அகர்கார் கூறும் காரணம் என்ன?

இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் நீண்ட நாள்களாக உலாவிக்கொண்டிருந்த, `அடுத்த ஒருநாள் அணி கேப்டன் கில்' என்ற பேச்சை உறுதிப்படுத்தி ரோஹித்தின் கேப்டன்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது அஜித் அகர்கார் தல... மேலும் பார்க்க

Ind vs Aus: கேப்டன் பதவியிலிருந்து ரோஹித் நீக்கம்; ODI அணிக்கும் கேப்டனாகும் கில்; முழு விவரம்

இந்திய அணி கடந்த 2024-ல் டி20 உலகக் கோப்பை வென்ற கையோடு கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர்.அதைத்தொடர்ந்து, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்க... மேலும் பார்க்க

`அந்த நாலு பேர்' - இரண்டரை நாளில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

இந்தியா வந்திருக்கும் ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.அகமதாபாத்தில் நேற்று முன்தினம் (அக்டோபர் 2) தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டி... மேலும் பார்க்க

Women's WC: பாகிஸ்தான் வீராங்கனைகளிடம் இந்திய வீராங்கனைகள் கைகுலுக்க மாட்டார்களா? மௌனம் கலைத்த BCCI!

சமீபத்தில் நடந்து முடிந்த 17-வது ஆசிய கோப்பைத் தொடரில் என்ன நினைத்து இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இருக்கும்படி போட்டி அட்டவணை தயார் செய்தார்களோ, அதற்கேற்றாற்போலவே தொடச்சியாக லீக், சூப்பர் 4,... மேலும் பார்க்க

Asia Cup: கோப்பையைப் பெற சூர்யகுமாருக்கு கண்டிஷன் - பாகிஸ்தான் அமைச்சர் சொன்னதென்ன?

ஆசியக்கோப்பை 2025 இறுதிப்போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற இந்திய அணி, ஆசியா கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வியின் கைகளால்... மேலும் பார்க்க

Chahal: "அவர் என்னை ஏமாற்றுகிறார் என்று 2 மாதத்திலேயே தெரிந்துவிட்டது" - முன்னாள் மனைவி தனஸ்ரீ

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹாலுக்குக் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நடிகை, நடன இயக்கு... மேலும் பார்க்க