செய்திகள் :

Chahal: "அவர் என்னை ஏமாற்றுகிறார் என்று 2 மாதத்திலேயே தெரிந்துவிட்டது" - முன்னாள் மனைவி தனஸ்ரீ

post image

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹாலுக்குக் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.

நடிகை, நடன இயக்குநர், யூ-டியூபர் மற்றும் பல் மருத்துவர் எனப் பல பரிமாணங்கள் கொண்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் தனஸ்ரீ வர்மா என்பவரைத்தான் சஹால் திருமணம் செய்து கொண்டார்.

சஹால் - தனஶ்ரீ
சஹால் - தனஶ்ரீ

இதனிடையே சஹால் மற்றும் தனஶ்ரீ இருவரும் கடந்த பிப்ரவரி 5ம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற மனுத்தாக்கல் செய்தனர்.

நீதிமன்றம், விவாகரத்துக்கான ஒப்புதல் விதிமுறைகளுடன் சஹல், தனஶ்ரீக்கு ரூ. 4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. சாஹலும் இதற்கு ஒத்துக்கொண்டார்.

இருவருக்கும் மும்பை குடும்ப நீதிமன்றம் விவாகரத்தும் வழங்கியது. இந்நிலையில் தனஸ்ரீ வர்மா சஹால் குறித்துப் பேசியிருக்கிறார்.

'Candid conversation show' என்ற நிகழ்ச்சியில் பேசிய தனஶ்ரீ, "சஹாலுடன் திருமணம் ஆன இரண்டு மாதத்திலேயே இந்த உறவு நீடிக்காது என்று கண்டுபிடித்துவிட்டேன்.

சஹால் - தனஶ்ரீ
சஹால் - தனஶ்ரீ

அவர் என்னை ஏமாற்றுகிறார் என்று இரண்டு மாதத்திலேயே தெரிந்துவிட்டது. திருமண உறவு நீடிக்க வேண்டும் என்று கொஞ்சம் நான் பொறுமையாக இருந்தேன்.

ஒவ்வொரு விஷயத்திலும் சஹாலுக்காக நான் துணை நின்றேன். அது எல்லோருக்கும் தெரியும். அதனால்தான் விவாகரத்து தீர்ப்பு வழங்கப்பட்டபோது நான் உணர்ச்சிவசப்பட்டேன்" என்று கூறியிருக்கிறார்.

BCCI: 'மாத சம்பளம் இல்லை; பிசிசிஐ-யின் 37- வது தலைவர்'- யார் இந்த மிதுன் மன்ஹாஸ்?

பிசிசிஐ தலைவர் பதவியை வகித்து வந்த 70 வயதுடைய ரோஜர் பின்னியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பிசிசிஐ-யின் 37-வது தலைவராக பதவியேற்றிற்கும் ... மேலும் பார்க்க

``கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டு வந்த முதல் கேப்டன் நீங்களா'' -பத்திரிகையாளர் கேள்வி; SKY பதிலென்ன?

துபாயில் நேற்று நடைபெற்ற (செப்டம்பர் 28) ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் ஆனது. லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றைப் போலவே இறுதிப்போட்டியிலும் பாகிஸ்தான் வீரர்களிடம... மேலும் பார்க்க

Chris Woaks: "நேற்றுதான் அறிமுகமானதுபோல இருக்கிறது!" - 15 வருட சர்வதேச கரியர்; கிறிஸ் வோக்ஸ் ஓய்வு

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார்.2011-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிரான தொடரின் (ODI & T20) மூலம் சர்வதேச கிரிக... மேலும் பார்க்க

"பாகிஸ்தான் வீரர்களை வெறுக்கவில்லை; ஆனால்" - பஹல்காம் தாக்குதலில் மகனை இழந்த தந்தை சொல்வது என்ன?

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி கடைசி ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.146 ரன்கள் இலக்கை நோக்கி சேஸிங்கில் இறங்கிய இந்திய அணி 20 ரன்க... மேலும் பார்க்க

Ind vs Pak: ``அவரிடமிருந்து ஆசிய கோப்பையை வாங்க மாட்டோம்'' - உறுதியாக நின்ற இந்திய அணி! - யார் அவர்?

ஆசிய கோப்பை தொடரின் 41 வருட வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று (செப்டம்பர் 28) இறுதிப் போட்டியில் மோதின. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதைத் தொடர்ந்து, ஆசிய கிரிக்கெட் க... மேலும் பார்க்க

Ind vs Pak: "என் வாழ்வின் ஸ்பெஷல் இன்னிங்ஸ்; எல்லா இந்தியர்களுக்கும் சமர்ப்பணம்" - ஆட்ட நாயகன் திலக்

ஆசிய கோப்பை தொடரின் 41 வருட வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் நேற்று (செப்டம்பர் 28) இறுதிப் போட்டியில் மோதின. இதில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அ... மேலும் பார்க்க