செய்திகள் :

ரூ.12,490 கோடி! உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்!

post image

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ரூ.12,490 கோடி சொத்து மதிப்பின் மூலம் உலகத்தின் பணக்கார நடிகராகியுள்ளார்.

எம்3எம் ஹுருன் இந்தியா பணக்காரர்கள் 2025 பட்டியலின்படி, பணக்கார (பில்லியனைர்) நடிகர்களில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

சுமார் ரூ.12,490 கோடி (1.4 பில்லியன் அமெரிக்க டாலர்) சொத்து மதிப்பின் மூலம், நடிகர் ஷாருக்கான் பிரபல பாடகி டெய்லர் ஷிஃப்ட் (1.3 பில்லியன் அமெரிக்க டாலர்) மற்றும் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் (1.2 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆகியோரை பணக்காரர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

இந்த நிலையில், 33 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு அவர் துவங்கிய “ரெட் சில்லிஸ் எண்டர்டெயிமெண்ட்” எனும் நிறுவனம் சென்னை எக்ஸ்பிரஸ், ரயீஸ், பதான் போன்ற மாபெரும் வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ளது.

நடிகர் ஷாருக்கான் ஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளர் ஆவார். ஐபிஎல் போட்டிகளில் பெரும்பாலும் முன்னிலை வகிக்கும் இந்த அணியானது ஸ்பான்ஸர்ஷிப் ஒப்பந்தங்கள் மற்றும் லீக் வருவாய்களின் மூலம் அதிக வருமாணம் ஈட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், மும்பை, அலிபாக் போன்ற நகரங்களிலும்; பிரிட்டன், துபை, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் நடிகர் ஷாருக்கான் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்துள்ளார்.

இத்துடன், சொகுசு வாகனங்கள் மற்றும் லைஃப் ஸ்டைல் பிராண்டுகளிலும் நடிகர் ஷாருக்கான் முதலீடு செய்துள்ளார். இந்த வருமானங்கள் அனைத்தும் அவரது சொத்து மதிப்பை ரூ.12,490 கோடியாக உயர்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பட்டியலில், ரூ.7,790 கோடி சொத்து மதிப்பில் நடிகை ஜுஹி சாவ்லா மற்றும் ரூ.2,160 கோடி சொத்து மதிப்பில் நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது! 7.50 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

Bollywood actor Shah Rukh Khan has become the world's richest actor with a net worth of Rs 12,490 crore.

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பாஸ்பேட் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துன்குவாவின், அபோடாபாத் மாவட்டத்தில், பாஸ்பேட் சுரங்கம் ஒன்று இயங்கி வந்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக, பாகிஸ்தான் ராணுவம் இன்று (அக். 1) அறிவித்துள்ளது. பலூசிஸ்தானின் தலைநகர் குவேட்டாவில், தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் - இ - தலிப... மேலும் பார்க்க

டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா வருகிறார் விளாதிமீர் புதின்!

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியாவிற்கு வருகைப் புரியவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதினின் வருகைக்கு முன்பாக ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோ இந்தியாவிற... மேலும் பார்க்க

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து! 26 பேர் பலி

நைஜீரியா நாட்டில், நைஜர் நதியில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 26 பேர் பலியாகியுள்ளனர்.நைஜீரியாவின், கோகி மாநிலத்தின் இபாஜி பகுதியில், நேற்று (செப். 30) பயணிகள் படகு ஒன்று எடோ மாநிலத்துக்... மேலும் பார்க்க

காஸாவில் மக்கள் தஞ்சமடைந்த முகாம்களின் மீது இஸ்ரேல் தாக்குதல்! 16 பேர் பலி!

காஸாவில், பாலஸ்தீனர்கள் தஞ்சமடைந்த பள்ளிக்கூடம், அகதிகள் முகாம்கள் ஆகியவற்றின் மீது இன்று (அக். 1) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 16 பேர் கொல்லப்பட்டனர். காஸாவின் ஜெய்டொன் பகுதியில் உள்ள அல்... மேலும் பார்க்க

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது! 7.50 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.இதன்காரணமாக, அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களைத் தவிர, மற்ற அரசு ஊழியர்க... மேலும் பார்க்க