செய்திகள் :

TVK Karur Stampede: "வலின்னா என்னன்னு தெரியுமா விஜய் சார்?" - Open Letter to த.வெ.க விஜய்

post image

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு

குறள் : 72 | பால் : அறத்துபால் | அதிகாரம் : அன்புடைமை

விளக்கம்: அன்பில்லாதவர் எல்லாமே தமக்கு உரிமை என்று நினைப்பர்; அன்பு உடையவரோ தம் எலும்பையும் பிறருக்கு உரியதாக்கி மகிழ்வர்.

தவெக தலைவர் விஜய் பிரசாரத்தை தொடங்கியதிலிருந்து, அவரையும், அவரது கட்சியின் செயல்பாடுகளையும் ஒரு ஊடகமா தொடர்ந்து பின் தொடர்ந்துட்டு வர்றோம். அசம்பாவிதம் நடந்த கரூர் பிரசாரத்தைலையும் விகடன் இருந்துச்சு. சம்பவம் நடந்த அன்னைக்கு, அந்த கூட்ட நெரிசல்ல எங்கள் நிருபர்களும் இருந்தாங்க. அதன் பிறகு களத்துக்கு போன எங்கள் செய்தியாளர்கள், இரண்டு நாட்களாக அங்கேயே தங்கி மக்களை சந்திச்சு பேசியிருக்காங்க. அதை பல காணொளிகளா பதிவு பண்ணி இருக்கோம். முதல்ல, இறந்துபோன 41 பேருக்கு எங்களுடைய ஆள் மனசுல இருந்து அஞ்சலிய செலுத்துறோம்.

karur Tragedy
karur Tragedy

கரூர் அசம்பாவிதத்தை முழுமையாக உள்வாங்கியிருக்கிறோம் என்கிற அடிப்படையில், இந்த சம்பவத்துக்கு பிறகு விஜய் மற்றும் தவெக ஆற்றிய எதிர்வினைகள் குறித்து சில கேள்விகள் எங்களுக்கு இருக்கு. அந்த கேள்விகள்தான் இந்த பதிவு. எந்த முன்முடிவும் இல்லாம நாங்க இந்த கேள்விகள முன்வைக்கிறோம்.

விஜய் சார்…

கடந்த ரெண்டு மூணு நாளா நிறைய பேர் நிறைய ஏமாற்றங்களைக் கொடுத்துட்டாங்க. நீங்க பேச போற ஒரு வீடியோ அதுக்கெல்லாம் ஒரு ஆறுதலா இருக்கும்னு நினைச்சேன்.

ஆனா அந்த ஏமாற்ற பட்டியல்ல கரூர் அசம்பாவிதம் நடந்து 72 மணி நேரம் கழிச்சு நீங்க போட்ட இந்த வீடியோவும் ஒண்ணாகிடுச்சு.

கரூர் அசாம்பவிதத்தில் ஆளும் திமுக கட்சி மீதும், போலீஸார் மீதும், சந்தேகம் எழுப்பும் விஷயங்கள் உண்டா?

உண்டு.

பழிவாங்கும் பிண அரசியல் நடக்கிறதா என்ற சந்தேகம் உண்டா?

உண்டு.

முதல்வர் முதல் அமைச்சர் வரை இதை பயன்படுத்திக் கொள்ள பார்கிறார்கள் என்ற தோற்றம் ஏற்படுகிறதா?

கண்டிப்பாக ஏற்படுகிறது.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

ரோட்ல நம்ம போகும்போது, யாராவது கீழ விழுந்துட்டாங்கன்னா, நம்மலையே அறியாம அவங்கள தூக்க ஓடுவோம் சார். அதுதான் சார், சக மனுசன் மேல நமக்கு இருக்க அக்கறை. ஆனா, 41 பேர் விழுந்து செத்திருக்காங்க சார். உங்க பேரு விஜய்ன்னு கூடத் தெரியாத 9 குழந்தைங்க செத்திருக்குங்க சார், நீங்க துடிதுடிச்சிருப்பீங்கன்னு நினைச்சேன் சார். ஆறுதலா நாலு வார்த்தை சொல்லிருப்பீங்கன்னு எதிர்பார்த்தேன் சார். ஆனா, எனக்கும் அந்த சம்பவத்துக்கும் சம்பந்தமே இல்லைங்குற மாதிரி அந்த வீடியோல எப்படி பேச முடிஞ்சதுன்னு எனக்கு புரியவே இல்லை சார்..

பேரறிஞர் அண்ணா சொன்ன, ‘மக்களிடம் செல்’ அப்படிங்கறதை நீங்க சொல்வீங்கள்ல சார். உண்மையா மக்களிடம் எப்ப சார் செல்லணும், அவங்க வலியோட இருக்கும் போது, அவங்க கஷ்டத்தில இருக்கும் போது போகணும், அவங்களுக்கு எப்ப தேவையோ போகணும். ஆனா, இவ்வளவு பிரச்னைக்கு மத்திலேயும் #StandwithVijayன்னு அவங்க போஸ்ட் போடுறாங்க. ஜனநாயகனான நீங்க அவங்களுக்கு தேவைப்பட்ட நேரத்தில அவங்ககிட்ட செல்லாம விலகி போய்ட்டீங்களே சார்!

உங்க கிட்ட இருந்து ஒரு வார்த்தை எப்ப வரும் எப்ப வரும்னு காத்திக்கிட்டு இருந்தேன்சார். ஆனா, நீங்க பேசுறதுக்கு முன்னாடி உங்க நிர்வாகிகள் கோர்ட்ல கேஸ் போட்டாங்க சார். அப்போ உங்க எண்ணம் அந்த 41 பேர் குடும்பத்து மேல இல்லைங்குறது நல்லாவே தெரிஞ்சிடுச்சு சார். 41 பேர் செத்துக் கிடந்தாலும், அவங்க பிணத்தையெல்லாம் தாண்டிப் போய் உங்களையும், உங்க கட்சியை காப்பாத்தணும்னுதானே முதல்ல நினைச்சிருக்கிங்க. இது நீங்க அந்த 41 பேர ரெண்டாவது முறையா கொன்னதுக்கு சமம் சார். அப்புறம், 41 பேர் உண்மையாகவே இறந்தாங்களா, இல்ல வேற பிணங்களையெல்லா கொண்டு வந்தாங்களான்னு உங்க வழக்கறிஞர் கேட்டாரு பாருங்க சார் ஒரு கேள்வி. இன்னும் இந்த உலகத்துல மனித அறம் இருக்கான்னு யோசிக்க வச்சிடுச்சு சார். அப்படியொரு கேள்வி சார் அது.

கரூர் துயரம்

உங்களை பத்தி பெருமையா சக சினிமா ஸ்டார்ஸ் பேசுறத கேட்டிருக்கேன் சார். 6 மணிக்கு ஷூட்னா, விஜய் சார் 5 மணிக்கே வந்திடுவார்ன்னு சொல்வாங்க. எனக்கு அதைப் பாத்து என்ன ஒரு சின்சியாரிட்டின்னு, கூஸ் பம்பஸெல்லாம் வந்துச்சு சார். ஆனா, அரசியலுக்கு வந்ததும் உங்களுடைய நேரம் தவறாமையை காணோமேசார். 8.45 மணிக்கு வருவீங்கன்னு, விடிகாலையில 3 மணிக்குலாம் வந்தவங்களாம், நீங்க 8.45க்குதான் கிளபுறீங்கன்னு தெரிஞ்சும் அந்த வெயில்ல நின்னாங்க சார். அத்தனை மணி நேரம் காத்து இருக்கவங்க கிட்ட ஒரு சின்ன வருத்தம் தெரிவிக்கக் கூட உங்க 'ஈகோ' இடம் கொடுக்கலையே சார்.

முதல்ல நீங்க கரூரைவிட்டு கிளம்பமாட்டீங்கன்னு நினைச்சேன். கிளம்புனீங்க! புரிஞ்சுக்க முடிஞ்சது. உங்களால மருத்துவமனைக்கு போக முடியாது, போனீங்கன்னா அங்க ஒரு அசாம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருக்கு. சரி… திருச்சி விமானநிலையத்துல பத்திரிகையாளர்களை சந்திச்சு உங்க ஆற்றாமையை உங்க வேதனை உங்க வலியை வெளிப்படுத்துவீங்கன்னு நினைச்சேன். அதுவும் நடக்கல!

பாவம் சார்… உங்க ரசிகருங்க! ஆமா ரசிகருங்கதான், உங்க தொண்டர்கள்னு சொல்ற அளவுக்கு அவங்க பக்குவப்படுல. உங்க பேச்சுக்கு, ‘யார் பெற்ற மகனோ..?’ பாட்டை வச்சு ரீல்ஸ் போட்டுக்கிட்டு இருக்காங்க. ஹூம்… அவங்க பக்குவப்படுறது இருக்கட்டும். நீங்களே இன்னும் பக்குவப்படலையே சார்! 41 பேர் செத்து போய் இருக்காங்க, 31 பேர் மருத்துவமனையில இருக்காங்க. ஆனா, உங்க வீடியோவுல அவங்களுக்காக கொஞ்சமும் கவலைப்பட்ட மாதிரியே தெரியலையே சார்.

கரூர் துயரம் - தவெக
கரூர் - தவெக

இந்த வீடியோவுக்கா 3 நாள் காத்துக்கிட்டு இருந்தோம்?

மனசார சொல்றேன் சார், நீங்க நடத்துன ஒரு மக்கள் சந்திப்பு கூட்டம். உங்கள ரசிச்ச, நேசிச்ச, புதிய மாற்றத்த கொடுத்துட மாட்டீங்களான்னு எதிர்பார்த்து வந்த அந்த கூட்டத்துக்கு வந்த மக்கள்ல 41 பேர் இறந்துட்டாங்களேன்னு, குற்ற உணர்ச்சியில் ஒவ்வொரு நொடியும் வேதனைப்பட்டிருப்பீங்க, அதை வார்த்தைகளா வெளிப்படுத்த முடியாம, கண்ணீர் வடிப்பீங்கன்னு நினைச்சேன். ஆனா, உங்க பேச்சுல, நம்மல நம்பி வந்தவங்கள காக்கத் தவறிட்டோமேங்குற அந்த குற்ற உணர்ச்சிய பார்க்க முடியலை. இந்த பிரச்னைலேர்ந்து நாம எப்படி தப்பிக்க போறோங்கிற ஒரு exit strategyக்கான தொனி மட்டும்தான் இருந்துச்சு.

உங்க மனசு முழுக்க வலி இருந்திருக்கும். உண்மைதான். நீங்களும் மனுசன்தானே. ஆனா உங்கள பாக்க வந்த ஒரே காரணத்துக்காக இன்னைக்கு உயிர விட்டிருக்க 41 பேரும், அவங்களுடைய குடும்பத்துல இருக்கிறவங்களும் மனுசங்கதானே சார். உங்களுக்கு இருக்கிறதவிட அதிக வலி அவங்களுக்கு இருக்கும்தானே. “என் புள்ள ஒரு நடிகன் பின்னாடி போய் இப்படி எந்த பிரயோஜனமும் இல்லாம செத்துட்டானே. அவன இப்படி விட்டுட்டனே. நான்தான அவன தடுத்திருக்கணும்னு” எத்தன பெத்தவங்க, உங்க மேலகூட கோபப்படாம, தங்கள தாங்களே நொந்துக்குறாங்க தெரியுமா சார். அவங்களுக்கு இருக்குற அந்த பெருந்தன்மை கொஞ்சமாவது உங்ககிட்ட இருக்கும்னு எதிர்பார்த்தேன் சார். அது எங்க தப்புதான் சார்.

கரூர்ல நீங்க நின்னு பேசுன இடத்துக்கு பக்கத்துலதான் சார் ஹாஸ்பிட்டல் இருந்துச்சு. ஒரு எட்டு நேர்ல போய், பிள்ளைகள இழந்து தவிச்ச பெத்தவங்கள கட்டியணச்சு, மன்னிப்பு கேட்டு, நான் இருக்கேன்னு ஒரு வார்த்தை சொல்லிருந்திங்கன்னா, துன்பத்துலயும் மக்களோட நிக்குற ஒரு நல்ல தலைவன் கிடைச்சிட்டாண்டான்னு, தூக்கி வச்சு கொண்டாடிருப்பாங்க சார்.

கரூர் துயரம்
கரூர் துயரம்

ஏற்கனவே சொன்ன மாதிரி அதைக்கூட புரிஞ்சுக்க முடியுது. நீங்க போனீங்கன்னா அங்க மீண்டும் கூட்டம் கூடி மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு இருக்கு. ஏன் சார் உங்க ரெண்டாம் கட்ட தலைவர்கள் போகல?

உங்ககிட்ட அப்படி ஒரு கட்டமைப்பே இல்லை. தவெக ஒரு அரசியல் கட்சிதானே? வெறும் Cult Worship பண்ற, ரசிகர் மன்றம் இல்லைன்னு நம்பினது தப்பா சார்?

சரி நீங்களும் நேர்ல போகல… பிரஸ்கிட்ட பேச பிடிக்கல… உங்களுடைய இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஏன் சார் போகல?

ஆனா பாருங்க, நீங்க என்னதான் லேட்டா வந்தாலும், வெயில்ல நிக்க வச்சாலும், உங்க மேல உங்க ரசிகனுக்கு இருக்க வெறி குறையவே மாட்டேங்குது சார். அது எப்படின்னு யோசிக்கும்போதுதான் சார் அந்த வீடியோ என் கண்ணுல பட்டுச்சு. நீங்க லைட்ட போட்ட, கத்தி விசிலடிக்குறாங்க, ஆப் பண்ணா அமைதியாகுறாங்க. நீங்களும், வேன் மெதுவா போற வரைக்கும் எண்டெர்டெயின்மெண்ட்டா இருக்குன்னு விளையாடிட்டே இருக்கீங்க. இந்த கூட்டம் கடைசி வரைக்கும் அப்படியே இருந்தா நீங்க ஹேப்பியா இருப்பீங்கள்ல சார்.

தமிழ்நாடே அரசியல் அறியாமையில மூழ்கினாலும், நீங்க

லைட்ட ஆப் பண்ணி ஆன் பண்றத மட்டும் நிறுத்தாதீங்க சார்.

அதையும் மீறி அவங்க உஷாராகுற மாதிரி தெரிஞ்சா, என்ன நண்பா நண்பி, இந்த கூட்டம் போதுமா, அதிருதான்னு கேட்டு திரும்பவும் அவங்கள உசுப்பேத்தி டிரான்ஸ்பார்மர்ல ஏத்தி விட்டுங்க சார்.

ஆயிரம்தான் இருந்தாலும் சார், அந்த இடத்துல கூட்டம் நடந்ததுதான் 41 பேர் சாவுக்கு காரணம்னு உங்க கட்சிக்காரங்க சொல்றாங்க சார். உங்களுக்கு சரியான இடம் கொடுக்காம அரசாங்கம் பழி வாங்குதுன்னு சொல்றிங்க ஓகே சார். போலீசும் ஆளுங்கட்சி சொல்றத கேட்டு உங்களுக்கு நெருக்கடி கொடுக்குதுன்னு சொல்றிங்க ஓகே சார்.

ஆனா, அங்க நெரிசல் ஏற்படும்னு தெரிஞ்சும் நீங்க ஏன் ஒத்துக்கிட்டீங்க?

நீங்க அரசியலுக்கு வந்த உடனே ஒரு மாற்று அரசியலை முன்னெடுப்பீங்கன்னு எல்லாரையும் போலவே நினைச்சேன். சராசரி அரசியல்வாதி மாதிரி அடுத்த தேர்தலுக்கு வேலை பார்க்காம அடுத்த தலைமுறையும் தாண்டி சிந்திப்பீங்கன்னு நினைச்சேன். ஆனா, எல்லாரும் ஏமாந்து நிக்கிறோம் சார்!

மத்தவங்க பிரியாணி வாங்கிக் கொடுத்து, சரக்கு வாங்கிக் கொடுத்து கூட்டம் கூட்டுறாங்க. ஆனா உங்களுக்கு தானாவே ஒரு கூட்டம் கூடி வருது. அந்த கூட்டத்தை நீங்க அலட்சியப்படுத்தலாமா சார்?

கட் சொன்னா பேக் அப் பண்ணிட்டு போறதுக்கு இது ஒன்னும் சினிமா இல்லைன்னு தெரிஞ்சுதான் நீங்க அரசியலுக்கு வந்திருப்பீங்கன்னு நினைச்சேன் சார்.

ஆனா, நீங்க அரசியலை இவ்வளவு தந்திரமா அணுகுவீங்கன்னு எதிர்பார்க்கல சார்.

உங்களுக்கு முதல்வன் படம் நியாபகம் இருக்கா சார்? மறந்துருக்க மாட்டீங்க நீங்க நடிச்சு இருக்க வேண்டிய படம்தானே? அதுல கிளைமேக்ஸ்ல அர்ஜூன் சொல்லுவார், ‘கடைசியா என்னையும் அரசியல்வாதியா ஆக்கிட்டீங்களேன்னு’ ஆனா நீங்க தொடக்கத்துலையே சராசரி அரசியல்வாதி ஆகிட்டீங்களே சார்.

ஹும்ம்ம்.

மாற்று அரசியல் வேணும். ஆனா அந்த மாற்று இப்படி இருக்க வேணாம் சார். புரியுது சார் அரசியல் மாறிக்கிட்டு இருக்கு, வியூக வகுப்பாளர்கள் எல்லாம் தேவை தான், ஆனா அதுக்கெல்லாம் மேல அறமும், அரசியலுக்கான அடிப்படை விழுமியங்களும் தேவையில்லையா சார்?

கடைசியா ஒன்னு சார், உங்கள நம்பி உங்க பின்னாடி ஒரு பெரிய கூட்டமே வருது. முடிஞ்சா சரியா வழிநடத்துங்க, பொய்யான நம்பிக்கைய மட்டும் கொடுக்காதீங்க,

உங்க ரசிகர்கள், ஆளப் போறான் தமிழன்னு ரீல்ஸ் போட்டுட்டு, குறைந்தபட்சம் உயிரோடயாவது இருப்பாங்க!

TVK Karur Stampede - நீங்கள் செய்தது நியாயமா Vijay சார்?| Open Letter to தமிழக வெற்றிக் கழகம் விஜய்

தவெக தலைவர் விஜய் பிரசாரத்தை தொடங்கியதிலிருந்து, அவரையும், அவரது கட்சியின் செயல்பாடுகளையும் ஒரு ஊடகமா தொடர்ந்து பின் தொடர்ந்துட்டு வர்றோம். அசம்பாவிதம் நடந்த கரூர் பிரசாரத்தைலையும் விகடன் இருந்துச்சு.... மேலும் பார்க்க

Bihar SIR: ``65 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கம்" - தேர்தல் ஆணையத்தின் இறுதி அறிக்கை வெளியானது

பீகார் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்புத் திருத்தத்தை மேற்கொண்டது.இதற்கு பீகார் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி... மேலும் பார்க்க

காசா தாக்குதல் எதிரொலி: டச்சு கப்பலுக்கு தீ வைத்த ஹவுதி குழு; பரபரக்கும் உலக நாடுகள்; என்ன நடந்தது?

ஏடன் வளைகுடாவில் டச்சுக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் தாக்குதலுக்குள்ளானது. இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுதிகள் குழு பொறுப்பேற்றிருக்கிறது.இஸ்ரேல் - காசாவுக்கு இடையே போர் நிகழ்ந்துவரும் நிலையில், ... மேலும் பார்க்க

கரூர்: "தமிழ்நாட்டில் எது நடந்தாலும் கும்பமேளா, மணிப்பூரை நோக்கி கேள்வி கேட்பதா?" - தமிழிசை காட்டம்

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் தமி... மேலும் பார்க்க

கரூர் நெரிசல்: 'கலவரத்தை ஏற்படுத்து நோக்கத்துடன்' - ஆதவ் அர்ஜுனா மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு?

கரூரில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) த.வெ.க தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணப் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்து பெருந்துயரம் ஏற்பட்டது.இந்தச்... மேலும் பார்க்க

கரூர்: "EPS உண்மையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்து உளறுகிறார்" - தங்கம் தென்னரசு காட்டம்

கரூரில் நடந்த கொடுந்துயர் தொடர்பாக அரசு கொடுத்துள்ள விளக்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார்.அதற்குப் பதில் கருத்தாக நிதியமைச்சர் தங்கம் தென்ன... மேலும் பார்க்க