செய்திகள் :

பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு! அண்ணாமலை குற்றச்சாட்டு

post image

தமிழகத்தில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டதாக திமுக அரசு மீது தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,

``தமிழகத்தில், பட்டியல் சமூக மக்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்திருப்பதாக, தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) அறிக்கை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும், 201 முதியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது, நாட்டிலேயே மிக அதிகம். மேலும், வயது முதியவர்களுக்கு எதிராக 2,104 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, நாட்டில் நான்காவது இடத்தில் இருக்கிறது.

இது தவிர, திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, கடந்த 2020 ஆம் ஆண்டு, பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக நடந்த குற்றங்களின் எண்ணிக்கை 1,294. தற்போது வெளியாகியுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி, 1,921 குற்றங்கள் பதிவாகியுள்ளன.

பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்கள், திமுக ஆட்சியில் சுமார் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளதை இது காட்டுகிறது. மேலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களும் திமுக ஆட்சியில் மிகவும் அதிகரித்திருக்கிறது. இவையனைத்தும் பதிவான குற்றங்களின் எண்ணிக்கை மட்டுமே. தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு நிலைமை இத்தனை மோசமாக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சியினரைப் பழிவாங்கவும், திமுக ஆட்சி மீது விமர்சனம் வைப்பவர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கவும் மட்டுமே, காவல்துறையைப் பயன்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.

காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகளை, திமுக நிர்வாகிகள்போலப் பயன்படுத்தி, அரசுத் துறைகள் அனைத்தையுமே செயலிழக்கச் செய்து விட்டார்கள். இதன் விளைவுதான், சீரழிந்து போன சட்டம் ஒழுங்கும், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் பட்டியல் சமூக மக்களுக்கெதிரான குற்றங்களும்.

ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில், தமிழகம் ஐம்பது ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்பதுதான் உண்மை நிலை. ஆடிக் கொள்ளுங்கள் இன்னும் ஆறு மாத காலம். உங்கள் அராஜகத்திற்குத் தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Crimes against Scheduled Castes are on the rise Former TN BJP Leader Annamalai says

கரூர் பலி: செந்தில் பாலாஜி விளக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது; அண்ணாமலை

கரூர் சம்பவம் குறித்து செந்தில் பாலாஜி பதட்டப்படுவது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கரூர் தவெக பொதுக்கூட்டத்த... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை: காவலர்கள் பணிநீக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 19 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 2 காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான உத்தரவை மாவட்ட காவல் கண... மேலும் பார்க்க

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

சமூக வலைதளப் பக்கங்களில் தரக்குறைவாக பதிவிடும் திமுகவினர் ஏன் கைது செய்யப்படவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதா... மேலும் பார்க்க

விஜய் பிரசாரம் 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு: தவெக

தவெக தலைவர் விஜய் பிரசாரம் அடுத்த 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அந்தக் கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் ப... மேலும் பார்க்க

ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! ஒரே நாளில் இருமுறை உயர்வு!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 1) புதன்கிழமை இருமுறை உயர்ந்து புதிய உச்சத்தில் சவரன் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.தங்கத்தின் விலை நிகழாண்டு தொடக்கத்தில் சவரன் ரூ.57,200-க்கு வி... மேலும் பார்க்க

பத்து ரூபாய் பாலாஜி பதறுவது ஏன்? - திமுகவுக்கு அதிமுக அடுக்கடுக்கான கேள்வி!

முன்னாள் அமைச்சரும், கரூர் எம்.எல்.ஏ.வுமான செந்தில் பாலாஜி மதுபாட்டில் குறித்த கேள்விகளுக்கு பதறுவது ஏன்? என அதிமுக கேள்வியெழுப்பியுள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழக... மேலும் பார்க்க