செய்திகள் :

கரூர் பலி: செந்தில் பாலாஜி விளக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது; அண்ணாமலை

post image

கரூர் சம்பவம் குறித்து செந்தில் பாலாஜி பதட்டப்படுவது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவத்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, இந்த துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெற, பரிந்துரைத்துள்ளது.

இந்த நிலையில் இன்று ஊடகங்களைச் சந்தித்த கரூர் திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சாராய அமைச்சருமான செந்தில் பாலாஜி, புதிய கதைகளைக் கூறியுள்ளார். தவெக சார்பில், சிபிஐ விசாரணை கோரிய வழக்கு, வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரவிருக்கிறது. கூட்டத்தில், விஜய் மீது செருப்பு வீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்களுக்கான ஆதாரங்கள் இருப்பதாக தவெகவினர் தெரிவித்துள்ளனர். விசாரணையின்போது தவெக வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்கும் ஆதாரங்களை ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியது.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை அறியும் குழுவிடம் பெண்மணி ஒருவர், கூட்டத்தில் கத்திக்குத்து நடந்ததாகக் கூறியிருக்கிறார். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கையில், இவர் இப்போது ஊடகச் சந்திப்பு நடத்தி, அவை எல்லாம் வதந்தி என்று கூற வேண்டிய அவசியம் என்ன?

கூட்டம் நடந்த கரூர் வேலுசாமிபுரம், கூட்டம் நடைபெறத் தகுதியான இடமா என்பதை விசாரிக்க, திமுக அரசே ஒரு ஆணையம் அமைத்துள்ள நிலையில், அதைக் குறித்து செந்தில் பாலாஜி பேச வேண்டிய அவசியம் என்ன? கருத்துத் திணிப்பு ஏற்படுத்துவதன் நோக்கம் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன.

ரூ. 12,490 கோடி! உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்!

யார் எங்கே சென்றார்கள், செல்லவில்லை என்று கேட்கும் தகுதி முதலில் திமுகவிற்கு இருக்கிறதா? கள்ளக்குறிச்சியில், திமுக கள்ளச்சாராய வியாபாரிகளால் விற்கப்பட்ட கள்ளச்சாராயம், 66 உயிர்களைப் பலிகொண்ட போது அங்கு போகாத முதலமைச்சர், தென்மாவட்டங்கள் பெருமழையால் பாதிக்கப்பட்டபோது, அங்கு சென்று மக்களைச் சந்திக்காமல், இந்தி கூட்டணி உடன்பாடுகளுக்கு டெல்லி சென்ற முதலமைச்சர், தற்போது மட்டும் ஓடோடி வந்ததன் பின்னணியை மக்கள் அறிவார்கள்.

நீதிமன்றமும், விசாரணை ஆணையமும் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், முன்னாள் சாராய அமைச்சர் இத்தனை பதட்டப்படுவதுதான் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Former BJP leader Annamalai has said that Senthil Balaji nervousness regarding the Karur incident raises serious doubts.

கரூர் பலி: மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மீது எம்.பி.க்கள் குழு உரிமை மீறல் தீர்மானம்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்க மறுத்ததால், அம்மாவட்டத்தின் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் கு... மேலும் பார்க்க

முதல்வர் இன்று ராமநாதபுரம் வருகை!

ராமநாதபுரத்தில் முடிவுற்ற திட்டங்களைத் திறந்து வைப்பதற்கும், நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று ராமநாதபுரத்துக்கு வருகை தருகிறார்.ராமநாதபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து க... மேலும் பார்க்க

5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது: தமிழக அரசு அறிவிப்பு

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் ஸ்டாலின், மது... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை: காவலர்கள் பணிநீக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு வந்த ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 19 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 2 காவலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான உத்தரவை மாவட்ட காவல் கண... மேலும் பார்க்க

பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு! அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழகத்தில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் திமுக ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்ட... மேலும் பார்க்க

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

சமூக வலைதளப் பக்கங்களில் தரக்குறைவாக பதிவிடும் திமுகவினர் ஏன் கைது செய்யப்படவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதா... மேலும் பார்க்க