செய்திகள் :

9 மாநிலங்களுக்கு ரூ. 4,645.60 கோடி புனரமைப்புத் திட்ட நிதி - உயர்மட்டக் குழு ஒப்புதல்

post image

கேரளம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் புனரமைப்பு திட்டங்களுக்கு ரூ. 4,645 கோடி நிதியளிக்க உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கேரளம், ஆந்திரம், அஸ்ஸாம், மத்திய பிரதேசம், ஒடிஸா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பிகார், சத்தீஸ்கர் ஆகிய 9 மாநிலங்களில் மீட்பு மற்றும் புனரமைப்புத் திட்டங்களுக்கு நிதியளிக்க, தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து வழங்குவதற்கான முன்மொழிவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்தது.

இந்த உயர்மட்டக் குழுவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் மற்றும் நீதி ஆயோக் துணைத் தலைவர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

11 நகரங்களுக்கான நகர்ப்புற வெள்ள அபாய மேலாண்மை திட்டத்தின் (UFRMP) கட்டம் 2-க்கும் உயர்மட்டக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. போபால், புவனேஸ்வர், குவாஹாட்டி, ஜெய்ப்பூர், கான்பூர், பாட்னா, ராய்ப்பூர், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், இந்தூர் மற்றும் லக்னோவுக்கு மொத்தம் ரூ. 2444.42 கோடி தேசிய பேரிடர் தணிப்பு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

High-Level Committee (HLC), under the chairmanship of Union Minister Amit Shah, approves a number of mitigation, recovery & reconstruction projects for 9 states having total outlay of Rs. 4645.60 crore

பெங்களூரில் காரில் தனியாக பயணித்தால் வரி விதிப்பா?

பெங்களூரில் காரில் தனியாக பயணிப்பவர்கள் மீது வரி என்பது பொய்யானது என்று டி.கே. சிவக்குமார் மறுப்பு தெரிவித்தார்.பெங்களூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிதாய் ஒரு முயற்சியை அம்மாநில அரசு... மேலும் பார்க்க

திருடப்பட்ட 6 லட்சம் கைப்பேசிகள் மீட்பு; லட்சக்கணக்கான குடும்பங்களின் டிஜிட்டல் பாதுகாப்பும் மீட்டெடுப்பு!

தொலைத்தொடர்புத் துறையின் சஞ்சார் - சாத்தி தளத்தின் உதவியுடன், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தொலைந்துபோன மற்றும் திருடப்பட்ட கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.2023 மே மாதத்தில... மேலும் பார்க்க

கேரளம்: மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதால் பரபரப்பு

கேரளத்தில் நடுக்கடலில் மீன்பிடி படகு மீது கப்பல் மோதியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம், கொச்சியில் மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்த படகு மீது கப்பல் மோதியுள்ளது. இ... மேலும் பார்க்க

ராமர், பிரதமர் மோடி குறித்து அவதூறு விடியோ: உ.பி.யில் இளைஞர் கைது

உத்தரப் பிரதேசத்தில் ராமர், பிரதமர் மோடி குறித்து அவதூறு விடியோ வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பட்டா காவ்னில் வசிக்கும் பூல் சிங்கின் மகன் ஹர்ஷ... மேலும் பார்க்க

இன்ஸ்டாகிராம் பதிவால் இளைஞர் சுட்டுக் கொலை!

உத்தர பிரதேசத்தில் உத்தர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட மோதலால் இந்து அமைப்பைச் சேர்ந்த 16 வயது இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேசத்தின் மொராதாபாதில... மேலும் பார்க்க

தில்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். குறித்து பாடம்! அமைச்சர்

தில்லியிலுள்ள பள்ளிக் கல்வித் திட்டத்தில் ராஷ்ட்ரநீதி என்ற பெயரில் ராஷ்ட்ரிய சுயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்.) பற்றியும் அதன் பங்களிப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் குறித்தும் பாடப்புத்தகங்களில் இடம்பெறும் என ... மேலும் பார்க்க