கரூர் பலி: செந்தில் பாலாஜி விளக்கம் சந்தேகத்தை எழுப்புகிறது; அண்ணாமலை
இன்ஸ்டாகிராம் பதிவால் இளைஞர் சுட்டுக் கொலை!
உத்தர பிரதேசத்தில் உத்தர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட மோதலால் இந்து அமைப்பைச் சேர்ந்த 16 வயது இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் மொராதாபாதில் ஷோபித் என்ற 16 வயது சிறுவன், இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட மோதல் காரணமாக சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
ஷோபித், இந்து அமைப்பான பஜ்ரங் தளத்தின் உறுப்பினராக இருந்த நிலையில், கட்கர் காவல் நிலையம் முன்பாக பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள் ஒன்றுகூடி, ஷோபித்தை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றுகூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனிடையே, சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரின் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.