செய்திகள் :

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

post image

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில், 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக, பாகிஸ்தான் ராணுவம் இன்று (அக். 1) அறிவித்துள்ளது.

பலூசிஸ்தானின் தலைநகர் குவேட்டாவில், தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் - இ - தலிபான் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக வெளியான தகவலின் அடிப்படையில், பாகிஸ்தான் ராணுவம் நடவடிக்கைகள் மேற்கொண்டது.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையிலான துப்பாக்கிச் சூட்டில் 10 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், கெச் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளில், 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக, குவேட்டாவில் நேற்று (செப். 30) துணை ராணுவத் தலைமையகத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படையின் வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா வருகிறார் விளாதிமீர் புதின்!

The Pakistani military has announced that 13 terrorists have been killed in two separate operations in Pakistan's Balochistan province.

பாகிஸ்தானில் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், பாஸ்பேட் சுரங்கம் இடிந்து 4 தொழிலாளிகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபர் பக்துன்குவாவின், அபோடாபாத் மாவட்டத்தில், பாஸ்பேட் சுரங்கம் ஒன்று இயங்கி வந்... மேலும் பார்க்க

டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா வருகிறார் விளாதிமீர் புதின்!

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியாவிற்கு வருகைப் புரியவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதினின் வருகைக்கு முன்பாக ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோ இந்தியாவிற... மேலும் பார்க்க

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து! 26 பேர் பலி

நைஜீரியா நாட்டில், நைஜர் நதியில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 26 பேர் பலியாகியுள்ளனர்.நைஜீரியாவின், கோகி மாநிலத்தின் இபாஜி பகுதியில், நேற்று (செப். 30) பயணிகள் படகு ஒன்று எடோ மாநிலத்துக்... மேலும் பார்க்க

ரூ.12,490 கோடி! உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ரூ.12,490 கோடி சொத்து மதிப்பின் மூலம் உலகத்தின் பணக்கார நடிகராகியுள்ளார்.எம்3எம் ஹுருன் இந்தியா பணக்காரர்கள் 2025 பட்டியலின்படி, பணக்கார (பில்லியனைர்) நடிகர்களில் பாலிவுட் ... மேலும் பார்க்க

காஸாவில் மக்கள் தஞ்சமடைந்த முகாம்களின் மீது இஸ்ரேல் தாக்குதல்! 16 பேர் பலி!

காஸாவில், பாலஸ்தீனர்கள் தஞ்சமடைந்த பள்ளிக்கூடம், அகதிகள் முகாம்கள் ஆகியவற்றின் மீது இன்று (அக். 1) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 16 பேர் கொல்லப்பட்டனர். காஸாவின் ஜெய்டொன் பகுதியில் உள்ள அல்... மேலும் பார்க்க

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது! 7.50 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.இதன்காரணமாக, அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களைத் தவிர, மற்ற அரசு ஊழியர்க... மேலும் பார்க்க