செய்திகள் :

Bihar SIR: ``65 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கம்" - தேர்தல் ஆணையத்தின் இறுதி அறிக்கை வெளியானது

post image

பீகார் சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்புத் திருத்தத்தை மேற்கொண்டது.

இதற்கு பீகார் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தன.

அதேநேரம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் வாக்கு திருட்டு மோசடி எனக் குறிப்பிட்டுத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக ஆதாரத்துடன் நிறுவினார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்த விவகாரம் விவாதப் பொருளானது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் பீகார் வாக்காளர் பட்டியலின் இறுதிப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

சிறப்புத் தீவிர திருத்தத்திற்கு முன்பு, ஜூன் 24, 2025 நிலவரப்படி மாநிலத்தில் 7.89 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆகஸ்ட் 1, 2025 அன்று வரைவு பட்டியல் வெளியிடப்பட்டபோது, ​​7.24 கோடி பெயர்கள் இருந்தனர்.

இதன் அடிப்படையில் சுமார் 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றனர். இந்த இறுதி வரைவு வெளியிட்ட பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ``22 ஆண்டுகளுக்குப் பிறகு பீகார் மாநிலத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நிறைவடைந்தது.

பீகார் வாக்காளர்கள், அதிகாரிகள், பூத்-லெவல் முகவர்கள் மற்றும் பீகாரில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் உதவி இயக்குநர் அபூர்வ குமார் சிங், ``தகுதியுள்ள எவரேனும் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்க விரும்பினால், அவர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம்.

 சுக்பிர் சிங் சந்து, ஞானேஷ் குமார் , விவேக் ஜோஷி
சுக்பிர் சிங் சந்து, ஞானேஷ் குமார் , விவேக் ஜோஷி

வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வது தொடர்பான தேர்தல் பதிவு அதிகாரியின் முடிவில் திருப்தி அடையவில்லை என்றால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் பிரிவு 24-ன் கீழ், மாவட்ட நீதிபதியிடம் முதல் மேல்முறையீட்டையும், தலைமை நிர்வாக அதிகாரியிடம் இரண்டாவது மேல்முறையீட்டையும் தாக்கல் செய்யலாம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருக்கும் ஜனதா தளம்(யு) எம்எல்சி மற்றும் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார், ``எதிர்க்கட்சிகள் 'வாக்கு சோரி (வாக்கு திருட்டு)' என்ற முழக்கத்துடன் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக விரலை உயர்த்தின.

இப்போது இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பீகாரில், அதிகபட்ச மக்கள்தொகை பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள், அவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி இப்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

பீகாரின் எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் சித்ரஞ்சன் ககன், ``பூத்-லெவல் ஏஜெண்டுகள் மற்றும் பஞ்சாயத்துப் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையத்தின் இறுதி அறிக்கையை மதிப்பாய்வு செய்த பிறகு, SIR முடிந்தது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியாகும்" என்றார்.

காசா தாக்குதல் எதிரொலி: டச்சு கப்பலுக்கு தீ வைத்த ஹவுதி குழு; பரபரக்கும் உலக நாடுகள்; என்ன நடந்தது?

ஏடன் வளைகுடாவில் டச்சுக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் தாக்குதலுக்குள்ளானது. இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுதிகள் குழு பொறுப்பேற்றிருக்கிறது.இஸ்ரேல் - காசாவுக்கு இடையே போர் நிகழ்ந்துவரும் நிலையில், ... மேலும் பார்க்க

கரூர்: "தமிழ்நாட்டில் எது நடந்தாலும் கும்பமேளா, மணிப்பூரை நோக்கி கேள்வி கேட்பதா?" - தமிழிசை காட்டம்

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் தமி... மேலும் பார்க்க

கரூர் நெரிசல்: 'கலவரத்தை ஏற்படுத்து நோக்கத்துடன்' - ஆதவ் அர்ஜுனா மீது எந்தெந்த பிரிவுகளில் வழக்கு?

கரூரில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 27) த.வெ.க தலைவர் விஜய்யின் சுற்றுப்பயணப் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்து பெருந்துயரம் ஏற்பட்டது.இந்தச்... மேலும் பார்க்க

கரூர்: "EPS உண்மையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்து உளறுகிறார்" - தங்கம் தென்னரசு காட்டம்

கரூரில் நடந்த கொடுந்துயர் தொடர்பாக அரசு கொடுத்துள்ள விளக்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் பக்கத்தில் விமர்சனம் செய்திருந்தார்.அதற்குப் பதில் கருத்தாக நிதியமைச்சர் தங்கம் தென்ன... மேலும் பார்க்க

கரூர்: மருத்துவமனைக்குச் சென்றது முதல் மின்தடை வரை - விமர்சனங்கள் குறித்து செந்தில் பாலாஜி விளக்கம்

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்தச் சம்பவத்தில் திமுகவிற்கும்,... மேலும் பார்க்க

கரூர்: "விஜய் மாலை 4 மணிக்கு வந்திருந்தால் கூட இந்தத் துயரைத் தடுத்திருக்கலாம்" - செந்தில் பாலாஜி

கடந்த அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரையில் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்தச் சம்பவத்தில் திமுகவிற்கும்,... மேலும் பார்க்க