சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் சிறை சென்றார்களா? மோடி விளக்கம்
நாட்டிற்கான சுதந்திரப் போராட்டத்தில் கே.பி. ஹெட்கேவர் உள்பட ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் பலர் சிறைக்குச் சென்றதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்டத்தின் ஒருபகுதியாக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது ஆங்கிலேயர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து ஹிந்துத்துவா அமைப்புகள் செயல்பட்டதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்திருந்த நிலையில், பிரதமர் மோடி இதனைத் தெரிவித்துள்ளார்.