நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து! 26 பேர் பலி
நைஜீரியா நாட்டில், நைஜர் நதியில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 26 பேர் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவின், கோகி மாநிலத்தின் இபாஜி பகுதியில், நேற்று (செப். 30) பயணிகள் படகு ஒன்று எடோ மாநிலத்துக்கு சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, நடுவழியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 26 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து இதுவரையில் எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. ஆனால், பலியானவர்களில் பெரும்பாலானோர் வியாபாரிகள் எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, மழைக்காலங்களில் நைஜீரியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் படகு விபத்துகள் ஏற்படும் அவலம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும், அதிகப் பயணிகளை ஏற்றிச் செல்வதாலும், முறையான பராமரிப்பு இல்லாத படகுகளைப் பயன்படுத்துவதாலும், இந்த விபத்துகள் தொடர்வதாகக் கூறப்படுகிறது.
கடந்த மாதம், நைஜர் மாநிலத்தில் அதிகப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து 31 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரூ. 12,490 கோடி! உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்!