வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி விடுவிப்பு!
அனைத்து மாநிலங்களுக்கும் ரூ. 1,01,603 கோடி வரி பங்கீட்டுத் தொகையை விடுவித்து மத்திய அரசு இன்று (அக். 1) அறிவித்துள்ளது.
இதில், தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்துக்கு ரூ. 18,227 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக கோவாவிற்கு ரூ. 392 கோடி வழங்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தையொட்டி முன்கூட்டியே வரிப் பங்கீட்டு தவணை விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,