செய்திகள் :

காஸாவில் மக்கள் தஞ்சமடைந்த முகாம்களின் மீது இஸ்ரேல் தாக்குதல்! 16 பேர் பலி!

post image

காஸாவில், பாலஸ்தீனர்கள் தஞ்சமடைந்த பள்ளிக்கூடம், அகதிகள் முகாம்கள் ஆகியவற்றின் மீது இன்று (அக். 1) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

காஸாவின் ஜெய்டொன் பகுதியில் உள்ள அல் - ஃபலா பள்ளிக்கூடத்தில், தாக்குதல்களில் இருந்து உயிர்பிழைத்த மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். இந்த நிலையில், அந்தப் பள்ளிக்கூடத்தின் மீது இன்று அதிகாலை, இஸ்ரேல் ராணுவம் 2 முறை வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதையடுத்து, காஸாவின் மேற்கு பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீருக்காகத் திரண்டிருந்த பாலஸ்தீனர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்துடன், நுசைராத் மற்றும் புரேஜ் அகதிகள் முகாம்களின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களில், இன்று அதிகாலையில் மட்டும் 16 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காஸாவில் நேற்று (செப். 30) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் யஹ்யா பர்சாக் எனும் பத்திரிகையாளர் கொல்லப்பட்டார்.

ஆனால், இந்தத் தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில் இருந்து எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

முன்னதாக, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் காஸா மீதான இஸ்ரேலின் போரில் 66,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 1,70,000-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள காஸாவுக்கான அமைதித் திட்டத்திற்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரவளித்துள்ளார்.

ஹமாஸ் கிளர்ச்சிப்படை சரணடைய வேண்டும் உள்ளிட்ட பல முக்கிய நிபந்தனைகள் மற்றும் அம்சங்களுடன் கூடிய அந்த அமைதித் திட்டத்திற்கு ஹமாஸ் தலைவர்கள் விரைவில் பதிலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது! 7.50 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

Sixteen people were killed in Israeli airstrikes on a school and refugee camp in Gaza today (Oct. 1), where Palestinians were sheltering.

டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா வருகிறார் விளாதிமீர் புதின்!

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியாவிற்கு வருகைப் புரியவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதினின் வருகைக்கு முன்பாக ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோ இந்தியாவிற... மேலும் பார்க்க

நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து! 26 பேர் பலி

நைஜீரியா நாட்டில், நைஜர் நதியில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 26 பேர் பலியாகியுள்ளனர்.நைஜீரியாவின், கோகி மாநிலத்தின் இபாஜி பகுதியில், நேற்று (செப். 30) பயணிகள் படகு ஒன்று எடோ மாநிலத்துக்... மேலும் பார்க்க

ரூ.12,490 கோடி! உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ரூ.12,490 கோடி சொத்து மதிப்பின் மூலம் உலகத்தின் பணக்கார நடிகராகியுள்ளார்.எம்3எம் ஹுருன் இந்தியா பணக்காரர்கள் 2025 பட்டியலின்படி, பணக்கார (பில்லியனைர்) நடிகர்களில் பாலிவுட் ... மேலும் பார்க்க

அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியது! 7.50 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசு நிர்வாகத்துக்கு நிதி ஒதுக்கும் செலவீனங்கள் தொடர்பான மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.இதன்காரணமாக, அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் ஊழியர்களைத் தவிர, மற்ற அரசு ஊழியர்க... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 27 பேர் பலி!

பிலிப்பின்ஸ் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 27 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.மத்திய பிலிப்பின்ஸ் நாட்டின் செபு மாகா... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டட விபத்து இந்தோனேசியாவில் 3 போ் உயிரிழப்பு; 38 போ் மாயம்

இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் உள்ள சிடோா்ஜோ நகரில், இஸ்லாமிய பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 போ் உயிரிழந்தனா்; 38 போ் மாயமாகியுள்ளனா். இது குறித்து உள்ளூா் ஊடகங்கள் கூறியதாவது: சிடோா்ஜோ... மேலும் பார்க்க