ரூ.90 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! ஒரே நாளில் இருமுறை உயர்வு!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 1) புதன்கிழமை இருமுறை உயர்ந்து புதிய உச்சத்தில் சவரன் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை நிகழாண்டு தொடக்கத்தில் சவரன் ரூ.57,200-க்கு விற்பனையானது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதலே, அவரது புதிய அறிவிப்புகள் எதிரொலியாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. அதன்படி கடந்த செப்.6-ஆம் தேதி ரூ.80,000-ஐ கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது.
கடந்த 23-ஆம் தேதி தங்கம் விலை சவரன் முதல் முறையாக ரூ.85,120-க்கு விற்பனையானது. தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை, திங்கள்கிழமை காலை, மாலை என ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்து சவரன் ரூ.86,160-க்கு விற்பனையானது.
அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தங்கம் விலை மீண்டும் உயர்ந்து கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.10,860- க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.86,880-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) காலை தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ. 87,120 -க்கும், ஒரு கிராமின் விலை ரு. 10,890 -க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும் தருவாயில், தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.10,950-க்கும், சவரனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.87,600-க்கும் விற்பனையாகிறது.
இதன்மூலம் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை எந்த மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ. 161-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,61,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: ஆர்எஸ்எஸ் - 100! சிறப்பு நாணயம் வெளியிட்ட பிரதமர் மோடி!