செய்திகள் :

40 வயதில் மீண்டும் கருவுற்ற பாலிவுட் நடிகை!

post image

பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர் மீண்டும் கருவுற்றிருக்கிறார்.

2022 ஆம் ஆண்டு ஆண் குழந்தை பெற்றெடுத்த நிலையில், தற்போது மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.

பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகளும் நடிகையுமான சோனம் கபூர், தனது நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்குப் பிறகும் படங்களில் நடித்து வந்த சோனம், 2022 ஆம் ஆண்டு ஆண் குழந்தைக்குத் தாயானார். இதற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த சோனம் கபூர், மீண்டும் கருவுற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

கணவருடன் சோனம் கபூர்

கடந்த 2023ஆம் ஆண்டு ஷோக் மகிஜா இயக்கத்தில் உருவான பிலின்ட் படத்தில் முதன்மை பாத்திரத்தில் சோனம் கபூர் நடித்திருந்தார். தற்போது கருவுற்றிருப்பது உறுதியாகியுள்ளதால், சிறிது இடைவேளை எடுக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு நடிகர் தனுஷ் உடன் இவர் நடித்த ராஞ்சனா படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இதனால், தமிழிலும் சோனம் கபூர் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | ரூ.12,490 கோடி! உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான்!

Sonam Kapoor Pregnant Expecting Second Child With Anand Ahuja

பைசன் புதிய பாடல் அப்டேட்!

இயக்குநர் மாரி செல்வராஜ் - நடிகர் துருவ் விக்ரம் ஆகியோரது கூட்டணியில் உருவாகியுள்ள, ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தின் 4 ஆவது பாடல் நாளை (செப். 02) மாலை வெளியாகின்றது. இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்த... மேலும் பார்க்க

ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் இட்லி கடை!

நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது.நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த திரைப்படமான இட்லி கடை இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் நாயகியாக நித்யா மெனனும் வில்லனாக அருண் விஜ... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.மதராஸிமதராஸி பட போஸ்டர். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி திரை... மேலும் பார்க்க

பிரணவ் மோகன்லாலின் டைஸ் ஐரே டிரைலர்!

பிரணவ் மோகன்லால் - ராகுல் சதாசிவன் கூட்டணியில் உருவான திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.பிரம்மயுகம் படத்தின் இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் ஹாரர் படத்தில் நடித்து முடித்து... மேலும் பார்க்க

பைசன் தப்பிப் பிழைத்த இளைஞர்களின் கதை: மாரி செல்வராஜ்

இயக்குநர் மாரி செல்வராஜ் பைசன் திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அக் - 17 அன்று வெளியாகவுள்ள திரைப்படம் பைசன்.இந்த நிலையில், இப்படம்... மேலும் பார்க்க