ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் இட்லி கடை!
நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் தனுஷ் இயக்கி, நடித்த திரைப்படமான இட்லி கடை இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் நாயகியாக நித்யா மெனனும் வில்லனாக அருண் விஜய்யும் நடித்திருக்கின்றனர்.
வெளிநாட்டிலிருந்து தன் கிராமத்துக்கு திரும்பும் தனுஷ், தன் தந்தையின் தொழிலான இட்லி கடையை வெற்றிகரமாக நடத்தும் கதையில் சில உணர்வுப்பூர்வமான தருணங்கள் இருந்ததால் இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
முக்கியமாக, பலரும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், ராயனைத் தொடர்ந்து இயக்குநராக தனுஷ் இப்படத்திலும் வணிக ரீதியான வெற்றியைப் பெறுவார் என்றே தெரிகிறது.
இதையும் படிக்க: சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? இட்லி கடை - திரை விமர்சனம்