இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
மதராஸி

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் இன்று(அக். 1) வெளியாகியுள்ளது.
மதராஸி படத்தில் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ருக்மிணி வசந்த், ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
லிட்டில் ஹார்ட்ஸ்

தெலுங்கு மொழி திரைப்படமான லிட்டில் ஹார்ட்ஸ், ஈடிவி வின் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
சாகசம்

சாகசம் என்ற மலையாள மொழிப் படம், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
தி கேம்: யூ நெவர் ப்ளே அலோன்

நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள ‘தி கேம்: யூ நெவர் ப்ளே அலோன்’ இணையத் தொடரை நாளை(அக். 2) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
கடந்த வார ஓடிடி

இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான ஓடும் குதிர சாடும் குதிரை படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ஹிருதயபூர்வம் படத்தை ஜியோ ஹாட்ஸ்டாரிலும் சுமதி வளவு படத்தை ஜீ5 ஓடிடி தளத்திலும் காணலாம்.
இதையும் படிக்க: பிரணவ் மோகன்லாலின் டைஸ் ஐரே டிரைலர்!