செய்திகள் :

Akshay Kumar: "20 ஆண்டுகளாக மாலை 6.30 மணிக்குப் பிறகு உண்பதில்லை" - அக்‌ஷய் குமாரின் டயட் ப்ளான்

post image

சமீபத்தில் திரையுலகில் 38 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் அக்‌ஷய் குமார், தனது தொழிலில் இவ்வளவு நாட்கள் வெற்றியுடன் இருப்பதற்கு உதவிய தனது பழக்க வழக்கங்கள் பற்றி மனம் திறந்துப் பேசியிருக்கிறார்.

நடிகர் அக்‌ஷய் குமார் சாப்பாடு விசயத்திலும், உடல் நலத்திற்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அக்‌ஷய் குமார் தனது பேட்டியில், ''உணவுக் கட்டுப்பாடு விவகாரத்தில் எனக்கு நானே விதிகளை வகுத்துக்கொண்டிருக்கிறேன். அந்த விதிகளை மிகவும் கட்டுப்பாட்டுடன் பின்பற்றுகிறேன்.

கடந்த 20 ஆண்டுகளாக மாலை 6.30 மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடுவது கிடையாது. பார்ட்டிகளுக்குச் சென்றால் கூட இதனைப் பின்பற்றுகிறேன்.

அக்‌ஷய் குமார்
அக்‌ஷய் குமார்

பார்ட்டிகளுக்குச் சென்றால் குடிப்பது போன்று அல்லது கேக் சாப்பிடுவது போன்று நடிப்பேன். எனது உடல் நலத்திற்கு முதல் முக்கியத்துவம் கொடுப்பேன். மாலை 6.30 மணிக்கு முன்பு நானும் வழக்கமான மனிதனாகத்தான் இருப்பேன். பகல் நேரத்தில் சோலேபூரி, சிலேபி, பர்பி என அனைத்தையும் சாப்பிடுவேன்.

ஆனால் மாலை 6.30 மணிக்குப் பிறகு எதையும் சாப்பிடுவதில்லை. தனது வெற்றிக்குப் பெரும்பாலும் ஒழுக்கம் மட்டுமல்லாது அதிர்ஷ்டமும் காரணம் ஆகும். என்னை விட அழகாகவும், திறமையாகவும், தகுதியுடனும் பலர் இருக்கிறார்கள். நான் அவர்களைப் பார்க்கிறேன், அவர்கள் என்னை விடச் சிறந்தவர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அவர்களுக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அங்குதான் அதிர்ஷ்டம் உண்மையில் வருகிறது. சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருப்பது எனக்கு அதிர்ஷ்டம். வெற்றி என்பது 70% அதிர்ஷ்டமும் 30% கடின உழைப்பும் என்று நான் நம்புகிறேன்'' என்று தெரிவித்தார்.

அக்‌ஷய் குமார் நடித்து சமீபத்தில் வெளியான LLB 3 படம் நல்ல வசூலைக் கொடுத்து வருகிறது.

``சல்மானுக்கு எதிராக பேசியதால் புறக்கணித்தனர்; ஆனால் இன்று" - ரூ.1200 கோடி பிசினஸில் விவேக் ஓபராய்

சல்மான் கானை விமர்சித்த விவேக் ஓபராய் பாலிவுட்டில் நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் காதல் அனைவரும் அறிந்த ஒன்று. ஐஸ்வர்யா ராய் நடிகர் சல்மான் கானுடன் சண்டையிட்டு பிரிந்த பிறகு, சில காலம... மேலும் பார்க்க

‘நியாயமற்றது என்றார்'- தன்னுடைய மகள் தேசிய விருது விழாவில் பங்கேற்க முடியாதது குறித்து ராணி முகர்ஜி

71-வது தேசிய விருதுகள் நிகழ்வு சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றிருந்தது. ஷாருக் கான், மோகன் லால், ஜி.வி. பிரகாஷ் உட்பட தேசிய விருது அறிவிக்கப்பட்ட அத்தனை திரைக்கலைஞர்களும் நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார... மேலும் பார்க்க

``பாலிவுட்டில் ரன்பீர் கபூர்தான் அதிக குடும்ப உணர்வுள்ள நடிகர்'' - இயக்குனர் மகேஷ்பட் பெருமிதம்

பழம்பெரும் பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட் இளைய மகள் ஆலியா பட்டை பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தம்பதிக்கு தற்போது ஒரு பெண் குழந்தை இருக்கிறது. ரன்பீர் கபூர் தனது மக... மேலும் பார்க்க

"ஓய்வூதியம் இல்லை, நடிக்கும்போதே நல்லா சம்பாதிச்சாதான் வாழ்கை" - மாதவன் சொல்லும் சம்பள கணக்கு!

தமிழ் மற்றும் இந்தி திரைத்துறையில் தனக்கென ஒரு தனி ரசிகர்களைக் கொண்டவர் மாதவன்.இந்திய விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 'ராக்கெட்ரி: திநம்பி எஃபெக்ட்' படத்தை இயக்கியும... மேலும் பார்க்க

Zubeen Garg: ``அவர் செய்ய விரும்பியவற்றை நான் செய்வேன்" - மறைந்த ஜுபின் கார்க் குறித்து மனைவி கரிமா

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் ஜுபின் கார்க் சிங்கப்பூரில் உயிரிழந்த சம்பவம் அவருடைய ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நீச்சல் குளத்தில் மூச்சுத் திணறி உயிரிழந்த ஜுபின் கார்க்கி... மேலும் பார்க்க

``என் காதல் தோல்விகளுக்கு நானே காரணம்; விரைவில் தந்தையாவேன்'' - சல்மான் கான் ஓபன் டாக்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் 60 வயதாகிவிட்ட போதிலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வசித்து வருகிறார். அவரது வாழ்க்கையில் பல காதல் வந்து சென்றன. ஆனால் எதுவுமே நிலைத்து நிற்கவில்லை. நடிக... மேலும் பார்க்க