செய்திகள் :

``என் காதல் தோல்விகளுக்கு நானே காரணம்; விரைவில் தந்தையாவேன்'' - சல்மான் கான் ஓபன் டாக்

post image

பாலிவுட் நடிகர் சல்மான் கான் 60 வயதாகிவிட்ட போதிலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வசித்து வருகிறார்.

அவரது வாழ்க்கையில் பல காதல் வந்து சென்றன. ஆனால் எதுவுமே நிலைத்து நிற்கவில்லை. நடிகை சங்கீதா பிஜ்லானியுடன் திருமணம் வரை சென்று கடைசி நேரத்தில் அத்திருமணம் நின்று போனது.

நடிகை காஜோல் மற்றும் ட்விங்கிள் கன்னா ஆகியோர் இணைந்து நடத்திய 'Too Much With Kajol And Twinkle' ஷோவில் நடிகர் ஆமீர் கானும், சல்மான் கானும் முதல் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

சல்மான் கான்
சல்மான் கான்

இதில் சல்மான் கானும், அமீர் கானும் தங்களது வாழ்க்கையில் நடந்த பல சம்பவங்களை நினைவுகூர்ந்தனர்.

இதில் சல்மான் கான் தனது பழைய காதல் உறவுகள் குறித்துப் பேசுகையில்,

"தம்பதிகளில் ஒரு பார்ட்னரை விட மற்றொரு பார்ட்னர் அதிக வளர்ச்சியடையும் போது அங்கு கருத்து வேறுபாடுகள் உருவாகின்றன.

அங்கு ஒருவர் பாதுகாப்பற்று இருப்பதாக உணர்கிறார். எனவே இரு பார்ட்னர்களும் சமமாக வளர வேண்டும்'' என்று தெரிவித்தார்.

முந்தைய உறவுகள் குறித்து சல்மான் கானிடம் ஆமீர் கான் கேட்டபோது,

''அது எனக்கு ஒத்து வரவில்லை. அதற்கு யார் காரணம் என்று கேட்டால் நான் தான் அதற்கு காரணமாக இருப்பேன். குழந்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது எனது விருப்பம். எனக்கும் ஒரு நாள் குழந்தை பிறக்கும். பார்க்கலாம்''என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து காஜோலின் கணவர் அஜய்தேவ்கன் மற்றும் ட்விங்கிள் கன்னாவின் கணவர் அக்‌ஷய் குமார் என்ன சொன்னார்கள் என்று ஆமீர் கான் இருவரிடம் கேட்டதற்கு,'' தொலைக்காட்சியில் பேசும்போது எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொண்டனர் என்று இருவரும் தெரிவித்தனர்.

ஆமீர் கான்
ஆமீர் கான்

நடிகை காஜோல் இது குறித்து கூறுகையில், ''எங்களது கணவரை தொந்தரவு செய்யத்தான் இதை செய்கிறோம்''என்று நகைச்சுவையாக தெரிவித்தார்.

ட்விங்கிள் கன்னா கூறுகையில், ''நிகழ்ச்சியில் அமைதியாக இருக்க கண்ணாடி அணியுங்கள் என்று சொன்னார். ஆனால் இம்முறை கண்ணாடி உடைந்துவிட்டது என்று சொல்லிவிட்டேன்''என்றார்.

ஆமீர் கான் தனது முதல் மனைவி ரீனா தத்தாவுடன் ஏற்பட்ட விவாகரத்து குறித்த நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அமேஸான் பிரைமில் இந்த டால்க் ஷோ ஒளிபரப்பாகிறது.

இதில் அக்‌ஷய் குமார், ஆலியா பட், கரண் ஜோஹர், கிருத்தி சனோன், வருண் தவான், விக்கி கௌஷல், கோவிந்தா, சங்கி பாண்டே மற்றும் ஜான்வி கபூர் ஆகியோரும் இதில் பங்கேற்கின்றனர்.

Vikrant Massey: சீரியல் நடிகர் டு தேசிய விருது -காபி ஷாப்பில் வேலை செய்தவர் வென்று காட்டியது எப்படி?

நடந்துமுடிந்த 71வது தேசிய விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றவர் விக்ராந்த் மாஸ்ஸி. 12த் ஃபெயில் திரைப்படத்தில் அவர் ஏற்றிருந்த மனோஜ் குமார் ஷர்மா என்ற கதாபாத்திரத்துக்காக இந்த விருது வழங்... மேலும் பார்க்க

மும்பை: ஷாருக்கான் பங்களாவைப் புதுப்பிக்கும் பணிக்கு எதிராக மனு; பசுமை தீர்ப்பாயம் சொல்வது என்ன?

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது மன்னத் பங்களாவைப் புதுப்பித்துக் கட்டும் வேலையில் ஈடுபட்டுள்ளார். அதோடு கூடுதல் மாடிகளும் கட்டி வருகிறார்.இதையடுத்து ஷாருக்கான் அருகில் உள்ள அட... மேலும் பார்க்க

Janhvi Kapoor: அம்மாவின் சேலையில் ஜொலித்த ஜான்வி கபூர் - க்ளாசிக் க்ளிக்ஸ்!

ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்ஜான்வி கபூர்கீர்த்தி சுரேஷ் - மி... மேலும் பார்க்க

``ஆமிர் கான் பட தோல்வியால்தான் திருமணம் செய்தேன்" நினைவுகளைப் பகிர்ந்த அக்‌ஷய்குமார்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிகை ட்விங்கிள் கன்னாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். அத்திருமணம் எப்படி நடந்தது என்பது குறித்து அக்‌ஷய் குமார் தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். ரஜத் சர... மேலும் பார்க்க

Katrina kaif: "எங்கள் வாழ்வின் சிறந்த அத்தியாயம்" - கத்ரீனா உருக்கமான பதிவு

பாலிவுட் நட்சத்திர ஜோடியான விக்கி கௌஷல் - கத்ரீனா கைஃப் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளனர். 2021 ஆம் ஆண்டு டிசம்பரில் ராஜஸ்தானில் கோலாகலமாக இந்த பாலிவுட் தம... மேலும் பார்க்க

Zubeen Garg: `மக்கள் கலைஞன்' ஜூபீன் உடல் நல்லடக்கம்; திரண்ட மக்கள் - இவ்வளவு அன்பு ஏன் தெரியுமா?

சிங்கப்பூரில் நடந்த கான்சர்ட் சென்ற பிரபல பாடகர் ஜூபீன் கார்க் கடந்த செப்டம்பர் 19-ம் தேதி நீரில் மூழ்கி இறந்த செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நீச்சல் குளத்தில் நீச்சல் பயிற்சி மேற்கொண்டிருந... மேலும் பார்க்க