செய்திகள் :

பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி

post image

இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது மக்கள் மீதான வரிச்சுமை குறையும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் 5 நாள்கள் நடைபெறும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த கண்காட்சி கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இன்று முதல் செப்.29 வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் 2,400-க்கம் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கண்காட்சியில் பிரதமர் மோடிக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினார். கண்காட்சியில் தயாரிப்புகளைக் காட்சிக்கு வைத்துள்ள தொழில் முனைவோர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, ஜிஎஸ்டி கட்டமைப்பு சீர்திருத்தங்களால் இந்தியாவின் வளர்ச்சிக்குப் புதிய சிறகுகரள வழங்கும், மக்களுக்கு அதிக சேமிப்புக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.

சிப் முதல் கப்பல் வரை அனைத்து பொருள்களையும் இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம். இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்போன்களில் 55 சதவீதம் உத்தரப் பிரதேசத்தில் தயாரிக்கப்படுகிறது. செமி கண்டக்டர் துறையிலும் இந்தியா வலிமையடைந்து வருகிறது. மேலும் ரஷியாவுடன் இணைந்து ஏகே 203 ரக துப்பாக்கிகளைத் தயாரிக்கும் ஆலை உ.பி.யில் நிறுவப்படும்.

பத்து நாள்களுக்குள் கேஜரிவாலுக்குத் தங்குமிடம் ஒதுக்கப்படும்: தில்லி நீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவாலுக்குப் பொருத்தமான தங்குமிடம் பத்து நாள்களுக்குள் ஒதுக்கப்படும் என மத்திய அரசு தில்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு தில்லியில... மேலும் பார்க்க

தனியார் பள்ளி, கல்லூரிகளில் இடஒதுக்கீடு! ராகுல் வாக்குறுதி

ஓபிசி, எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு தனியார் பள்ளி, கல்லூரிகளில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற... மேலும் பார்க்க

யார் இந்த சைதன்யானந்தா? ஏற்கெனவே தில்லியில் 5 பாலியல் வழக்குகள்!

புது தில்லியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்வி மையத்தின் இயக்குநராக இருக்கும் சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி மீது, மாணவிகள் பாலியல் புகார் கூறியிருக்கும் நிலையில், அவர் மீது ஏற்கனவே 5 பாலியல் வழக்க... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி ஏவுகணை! 2,000 கி.மீ. தொலைவு இலக்கை அழிக்கும்!

ரயிலில் இருந்து அக்னி - பிரைம் ஏவுகணையை ஏவி இந்திய ராணுவம் புதன்கிழமை இரவு நடத்திய சோதனை வெற்றி அடைந்துள்ளது.இந்த ஏவுகணை, சுமார் 2,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக்கூடும் என்று மத்திய பா... மேலும் பார்க்க

லடாக்கில் தொடரும் ஊரடங்கு! பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

லடாக் மாநில அந்துஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் புதன்கிழமை வன்முறை வெடித்த நிலையில், பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து ... மேலும் பார்க்க

டிரம்ப் - மோடி விரைவில் சந்திப்பு! அமெரிக்க அதிகாரி தகவல்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் நேரில் சந்திப்பார்கள் என்று அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.இந்திய பொருள்களுக்கு 50 ச... மேலும் பார்க்க