செய்திகள் :

தனியார் பள்ளி, கல்லூரிகளில் இடஒதுக்கீடு! ராகுல் வாக்குறுதி

post image

ஓபிசி, எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கு தனியார் பள்ளி, கல்லூரிகளில் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், பாட்னாவில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, பாட்னாவில் நேற்று மாலை நடைபெற்ற ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நீதிக்கான வாக்குறுதி’ என்ற கருத்தரங்கில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மற்றும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இயற்றப்படும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சிகளில் 30% இடஒதுக்கீடு உள்ளிட்ட வாக்குறுதிகளை வெளியிட்டார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் இன்று பதிவிட்டுள்ள ராகுல் காந்தி தெரிவித்திருப்பதாவது:

”பாஜக எத்தனை பொய்கள் மற்றும் திசைத்திருப்பும் சதித்திட்டங்களை தீட்டினாலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித், பழங்குடி, சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான முழு உரிமையை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

பிகாரில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை வலுப்படுத்தவும், அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நீதிக்கான வாக்குறுதி’ அளித்துள்ளோம்.

இந்த சமூகத்தினருக்கு கல்விதான் முன்னேற்றத்துக்கான மிகப்பெரிய வழிமுறையாகும். கல்வித்துறையில் அவர்களுக்கான அணுகலை அதிகரிக்க சிறப்புத் தீர்மானங்கள் உள்ளன.

இனி தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படும், தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட இடங்களில் பாதி, எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் இபிசி சமூகத்தினரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும், மேலும் நியமனங்களில் "பொருத்தமானவர் இல்லை" என்று நியாயமற்ற நடைமுறைகள் முடிவுக்கு கொண்டுவரப்படும்.

இது கல்வி மட்டுமல்ல, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சமத்துவம் மற்றும் கண்ணியத்திற்கான போராட்டமாகும். இது சமூக நீதி மற்றும் சமமான வளர்ச்சிக்கான உண்மையான வாக்குறுதி” எனத் தெரிவித்துள்ளார்.

Reservation in private schools and colleges: Rahul promises

இதையும் படிக்க : மிகவும் பிற்படுத்தப்பட்டோா் வன்கொடுமை தடுப்புச் சட்டம்: பிகாரில் ராகுல் வாக்குறுதி

சிப்ஸ் முதல் கப்பல் வரை அனைத்தும் உள்நாட்டில் தயாரிக்க இலக்கு: பிரதமர் மோடி

புது தில்லி: இந்திய வளர்ச்சி இரட்டிப்பாகியிருக்கிறது, இது மிகவும் கவனம் ஈர்க்கும் செயல் என்று கூறியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, நாடு இந்தியாவில் தயாரிப்போம், தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற கொள்கையை ... மேலும் பார்க்க

பத்து நாள்களுக்குள் கேஜரிவாலுக்குத் தங்குமிடம் ஒதுக்கப்படும்: தில்லி நீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவாலுக்குப் பொருத்தமான தங்குமிடம் பத்து நாள்களுக்குள் ஒதுக்கப்படும் என மத்திய அரசு தில்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவாலுக்கு தில்லியில... மேலும் பார்க்க

யார் இந்த சைதன்யானந்தா? ஏற்கெனவே தில்லியில் 5 பாலியல் வழக்குகள்!

புது தில்லியில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்வி மையத்தின் இயக்குநராக இருக்கும் சுவாமி சைதன்யானந்தா சரஸ்வதி மீது, மாணவிகள் பாலியல் புகார் கூறியிருக்கும் நிலையில், அவர் மீது ஏற்கனவே 5 பாலியல் வழக்க... மேலும் பார்க்க

பொருளாதாரம் வலுவடையும்போது மக்களின் வரிச்சுமையும் குறையும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது மக்கள் மீதான வரிச்சுமை குறையும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் 5 நாள்கள் நடைபெறும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியைப் பிரதமர் ... மேலும் பார்க்க

ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி ஏவுகணை! 2,000 கி.மீ. தொலைவு இலக்கை அழிக்கும்!

ரயிலில் இருந்து அக்னி - பிரைம் ஏவுகணையை ஏவி இந்திய ராணுவம் புதன்கிழமை இரவு நடத்திய சோதனை வெற்றி அடைந்துள்ளது.இந்த ஏவுகணை, சுமார் 2,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக்கூடும் என்று மத்திய பா... மேலும் பார்க்க

லடாக்கில் தொடரும் ஊரடங்கு! பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

லடாக் மாநில அந்துஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் புதன்கிழமை வன்முறை வெடித்த நிலையில், பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து ... மேலும் பார்க்க