செய்திகள் :

ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கு! செப். 30 தீர்ப்பு!

post image

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி விவாகரத்து வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் கடந்த 2013-ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், பின்னணிப் பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்டாா். இவர்களுக்கு தம்பதிக்கு ஒரு மகள் உள்ளாா்.

கடந்த 12 ஆண்டு திருமண உறவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, இருவருக்கிடையே இருந்த பிரச்னை காரணமாக அண்மைக் காலமாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வந்தனா்.

பின்னா், இருவரும் பிரிவதாக அறிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி, கடந்த ஆண்டு ஏப். 24-ஆம் தேதி நேரில் ஆஜராகி மனு தாக்கல் செய்திருந்தனா்.

சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி, இருவரையும் இன்று நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, இருவரும் நேரில் ஆஜராகி, தங்களின் நிலைபாட்டை தெரிவித்தனர்.

மேலும், குழந்தையை சைந்தவி கவனித்துக் கொள்வதில் தனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று ஜி.வி. பிரகாஷ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில், வருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

இருவரும் தங்களின் விவாகரத்து நிலைபாட்டில் உறுதியாக இருப்பதாக தெரிவித்திருக்கும் நிலையில், விவாகரத்து வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்குபார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓஜியால் பவன் கல்யாண் ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் பவன் கல்யாணின் ஓஜி திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆந்திர துணை முதல்வரான பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து ‘தே கால் ஹிம் ஓஜி’ என்ற திரைப்படத்... மேலும் பார்க்க

என் சாதனையை முறியடித்த மேடம்..! தேசிய விருது வென்ற சிறுமிக்கு கமல் பாராட்டு!

தேசிய விருது வென்ற சிறுமி த்ரிஷா தோசர் குறித்து நடிகர் கமல் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் தனது சாதனையை வென்ற நீங்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டுள்ளது எனவும் கமல் கூறியுள்ளார்.... மேலும் பார்க்க

200 திரைகளில் மறுவெளியீடான குஷி!

நடிகர் விஜய், நடிகை ஜோதிகா நடிப்பில் உருவான குஷி திரைப்படம் மறுவெளியீடாகியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடிப்பில் கடந்த 2000-இல் வெளியாகிய குஷி திரைப்படம் அன்றைய காலத்தில் மிகப்பெரிய... மேலும் பார்க்க

எம்எஸ்எஸ் தொடரில் வரலாறு படைத்த மெஸ்ஸி: தங்கக் காலணி பட்டியலிலும் முதலிடம்!

எம்எஸ்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். நியூயார்க் சிட்டி எப்ஃசி உடனான இன்றைய போட்டியில் மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருது வென்றார்.அசத்தும் மெஸ்ஸி அமெ... மேலும் பார்க்க

அச்சுறுத்தும் விமர்சகர்கள்... சர்ச்சையில் பிரேம் குமார்!

இயக்குநர் பிரேம் குமார் விமர்சகர்கள் குறித்து பேசிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 96, மெய்யழகன் திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பிரேம் குமார் ஃபஹத் ஃபாசிலை வைத்து புதிய படத்தை எடுக்கிறார்.... மேலும் பார்க்க

ஆட்ட நாயகனான மெஸ்ஸி: இன்டர் மியாமி பிளே-ஆப்ஸ் சுற்றுக்குத் தகுதி!

எம்.எல்.எஸ் தொடரில் இன்டர் மியாமி அணி நியூயார்க் சிட்டி எஃப்சி அணியுடன் மோதிய போட்டியில் 4-0 என வென்றது. இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி 2 கோல்கள், 1 அசிஸ்ட் செய்து ஆட்ட நாயகன் விருதை வென்று அசத்தினா... மேலும் பார்க்க