செய்திகள் :

ஆட்ட நாயகனான மெஸ்ஸி: இன்டர் மியாமி பிளே-ஆப்ஸ் சுற்றுக்குத் தகுதி!

post image

எம்.எல்.எஸ் தொடரில் இன்டர் மியாமி அணி நியூயார்க் சிட்டி எஃப்சி அணியுடன் மோதிய போட்டியில் 4-0 என வென்றது.

இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி 2 கோல்கள், 1 அசிஸ்ட் செய்து ஆட்ட நாயகன் விருதை வென்று அசத்தினார்.

அமெரிக்காவில் நியூயார் சிட்டி எஃப்சி அணி தனது சொந்த மண்ணில் இன்டர் மியாமியுடன் மோதியது.

இந்தப் போட்டியில் மெஸ்ஸி 74, 86-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்தார். மேலும், போட்டியின் 43-ஆவது நிமிஷத்தில் அசிஸ்ட் செய்தும் அசத்தினார்.

இந்த சீசனில் மெஸ்ஸிதொடர்ச்சியாக ஆட்ட நாயகன் விருதுகளை வென்று வருகிறார்.

கடைசியில் பெனால்டியில் 83-ஆவது நிமிஷத்தில் லூயிஸ் சௌரஸ் கோல் அடித்தார். இறுதியில் 4-0 என இன்டர் மியாமி அசத்தல் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலமாக இன்டர் மியாமி பிளே ஆஃப்ஸ் சுற்றுக்குத் தகுதிப் பெற்றுள்ளது. இதற்கு முன்பாக 2022, 2024ஆம் ஆண்டு தேர்வாகியிருந்ததும் கவனிக்கத்தக்கது.

Lionel Messi had two goals and an assist to reach 37 goal contributions this season and Inter Miami clinched a playoff spot with a 4-0 victory over New York City FC on Wednesday night.

ரூ.100 கோடி வசூலித்த ஹிருதயபூர்வம்..! ரசிகர்களுக்கு மோகன்லால் நன்றி!

நடிகர் மோகன்லாலின் ஹிருதயபூர்வம் திரைப்படம் ரூ.100 கோடியைத் தாண்டியதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இயக்குநர் சத்தியன் அந்திகாட் இயக்கத்தில் ஓணம் வெளியீடாக இந்தப் படம் வெளியானது. விமர்சன ரீதியாக இந்தப்... மேலும் பார்க்க

தொடா் வெற்றியில் ரியல் மாட்ரிட்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் 4-1 கோல் கணக்கில் லெவான்டேவை வீழ்த்தியது. போட்டியில் இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களிலுமே வெற்றி பெற்ற அந்த அணி, புள்ளிகள் ட்டியலில் முதலிட... மேலும் பார்க்க

முதல் நாளிலேயே முடிந்த இந்தியா்கள் ஆட்டம்

தென் கொரியாவில் புதன்கிழமை தொடங்கிய கொரியா ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியா்களின் ஆட்டம் முதல் நாளிலேயே முடிவுக்கு வந்தது.முதல் சுற்றில், ஆடவா் ஒற்றையரில் இந்தியாவின் பிரதான வீரரான ஹெச்.எஸ். பிரணய... மேலும் பார்க்க

புரோ கபடி தொடரால் மறுமலா்ச்சி: தீபக் சங்கா்

புரோ கபடி லீக் தொடரால் வாழ்வில் மறுமலா்ச்சி ஏற்பட்டுள்ளது என பெங்களூரு புல்ஸ் அணிக்காக ஆடும் தமிழக வீரா் தீபக் சங்கா் கூறியுள்ளாா். திருச்சியைச் சோ்ந்த இளம் வீரரான தீபக் சங்கா் முதன்முறையாக புரோ கபடி... மேலும் பார்க்க

2-ஆவது சுற்றில் சக்காரி, கிரெஜ்சிகோவா

சீனாவில் நடைபெறும் மகளிருக்கான, 1000 புள்ளிகள் கொண்ட சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் மரியா சக்காரி, பாா்பரா கிரெஜ்சிகோவா ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், கிரீஸின் ச... மேலும் பார்க்க

வட சென்னை 2: படப்பிடிப்பு, ரிலீஸ் அப்டேட் பகிர்ந்த தனுஷ்!

வட சென்னை 2 படத்தின் அப்டேட் பற்றி நடிகர் தனுஷ் தனது இட்லி கடை படத்தின் முன் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். இட்லி கடை திரைப்படம் வரும் அக்.1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர் தனுஷ் அவரே இ... மேலும் பார்க்க