Dhanush: "120 KM தூரம் நடந்தே மதுரைக்கு வந்தாங்க அம்மா; இன்பநிதிக்கு வாழ்த்துகள்...
வட சென்னை 2: படப்பிடிப்பு, ரிலீஸ் அப்டேட் பகிர்ந்த தனுஷ்!
வட சென்னை 2 படத்தின் அப்டேட் பற்றி நடிகர் தனுஷ் தனது இட்லி கடை படத்தின் முன் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.
இட்லி கடை திரைப்படம் வரும் அக்.1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர் தனுஷ் அவரே இயக்கி நடித்துள்ள இந்தப் படத்தில் நித்யா மெனன், அருண் விஜய், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தின் முன்வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. அந்த விழாவில் தனுஷ் வட சென்னை இரண்டாம் பாகம் குறித்து பேசியதாவது:
2026-இல் வட சென்னை 2 படப்பிடிப்பு தொடங்கும். அதற்கு அடுத்தாண்டு 2027-இல் படம் வெளியாகும் என்றார்.
இதனைக் கேட்ட ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆர்பரித்தார்கள்.
வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர் என மிகப்பெரிய பட்டாளமே நடித்து 2018-இல் வெளியாகி இன்றளவும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.